சனி, 11 ஏப்ரல், 2020

ஆற்றின் ஊற்று அறிவிக்கும் கல்வி



ஆற்றின் அடிப்பரப்பு முழுவதும் மணல் நிரம்பிக் கிடக்கும். ஆற்றிலே நீர் ஓடும்போது தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி வைத்துக் கொள்ளும் கோடைக்காலத்தில் ஆற்றிலே அறவே நீரோட்டம் நின்று ஆறு காய்ந்து போனபின் ஆற்று மணல் நீரின்றி கிடக்கும் ஒரு வேளை தண்ணீர் கூட சிறுகுழியில் இல்லையென்னும் அளவிற்கு ஆறு நீரின்றிக் காணப்படும்

ஆழத்தோண்டினால் ஆனால், ஆற்று மணலை அதிலிருந்து அந்த மணல் சேமித்து வைத்திருந்த தண்ணீர் ஊற்றாக வெளிவரும். அதன்மூலம் பல நாள் குடிநீர் கிடைக்கும் அதிகம் கிடைக்கின்றபோது சேர்த்து வைக்காது அனைத்தையும் செலவழித்து விட்டால், வரு வாயின்றி வாழும் போது வக்கற்றுவகையற்று, வயிற்றுக்கே சோறின்றி வாட வேண்டிவரும்

வருவாய் வருங்காலத்தில்"எய்ப்பினில் வைப்பாக" ஆற்று
மணலைப் போல், முடியும் மட்டும் சேர்த்து வைத்துக் கொள்ளத்
தெரிந்தவர்கள். சேர்த்து வைக்கின்றவர்கள் வருவாய் வராத
நேரத்தில், சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு துன்பமின்றி
அடுத்தவரிடம் கையேந்தாது வாழலாம்

அது மட்டுமல்ல. ஆறு வறட்சியுற்ற காலத்திலும் தன்னுடைய ஊற்று நீரால் ஊரார்க்கு நீர் கொடுக்கும் அதேபோல் வருவாய் வரும்போது சேர்த்து வைத்தவர்கள் தான் வறுமையுற்ற காலத்தும் பிறருக்கு இல்லை யென்னாது தான் சேர்த்து வைத்த செல்வத்தால் உதவ முடியும்.

ஆற்று ஊற்றை அடிக்கடி நினைப்போம்
அதன் வழி நின்று அரும்பொருள் சேர்ப்போம்.


மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக