நற்குணங்கள் மூன்று
1. முடிந்த அளவு மன்னிக்க வேண்டும்
2. அதிகாரத்தின் போது பணிவு வேண்டும்.
3. பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் கொடை அளிக்க வேண்டும்.
மிகக் கெட்ட மனிதர்கள் மூன்று பேர்கள்.
1. பெருமை கொள்ளும் ஏழை
2. விபச்சாரம் செய்யும் முதியவன்
3. கெட்ட ஆலிம்.
சமுதாய வளர்ச்சிக்கு மூன்று விஷயங்கள் தேவை.
1. ஒற்றுமை
2. அறிவு
3. பொருள்
நான்கு விஷயங்களை சிறியதாக கருதவேண்டாம்.
1. கடனை சிறியதாக கருதக்கூடாது
2. நோயை சிறியதாக கருதக்கூடாது.
3. விரோதியை சிறிதாக எண்ணிவிடக் கூடாது.
4. நெருப்பை சிறியதாக எண்ணிவிடக் கூடாது.
நான்கு செயல்களை குறைப்பது நல்லது.
1. உணவை குறைவாக உண்ண வேண்டும்.
2. குறைவாக பேச வேண்டும்.
3. குறைவாகத் தூங்க வேண்டும்.
4. மக்களோடு குறைவாக பேச வேண்டும்.
ஐந்து தன்மைகள் உள்ளத்தை கடினமாகும்.
1. அல்லாஹ் நம்மை என்று எண்ணிக் கொண்டே பாவத்தை செய்வது.
2. கல்வியை கற்று அதன்படி அமல் செய்யாமலிருப்பது.
3. உளத்தய்மை இல்லாமல் வணக்கம் புரிவது.
4. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் உணவை உண்ணுவது.
5. படிப்பினை பெறாமல் இறந்தவர்களை அடக்கம் செய்வது.
ஐந்து தன்மைகள் முட்டாள்களின் உடைய அடையாளம்.
1.அறிவற்றவர்கள் நேசிப்பார்கள்.
2. அறிவாளிகளை வெறுப்பார்கள்.
3. தகுதியற்றவனை தலைவராக ஆக்குவார்கள்.
4. எதிரியிடத்தில் ரகசியத்தை சொல்வார்கள்.
5. மற்றவர்களின் சம்பாத்தியத்தில் இருந்துகொண்டு பெருமை கொள்வார்.
சுப்யான் தவ்ரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஐந்து தன்மைகள் உடையவனிடமே பொருள் வந்து சேரும்.
1.நீண்ட நம்பிக்கை.
2. மிகப் பேராசை.
3. வடிகட்டிய கஞ்சன்.
4. இறையச்சம் குறைந்தவன்.
5. மரணத்தை மறந்தவன்.
ஹழ்ரத் அபுபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இருள் ஐந்து அதற்கு ஒளி ஐந்து.
1. உலகம் என்பது இருள். இறையச்சம் என்பது ஒளி.
2. பாவம் என்பது இருள். தவ்பா என்பது ஒளி.
3. கப்ரு என்பது இருள் லாஇலாஹா இல்லல்லாஹ் என்பது ஒளி.
4. மறுமை என்பது இருள். நல்அமல் என்பது ஒளி.
5. ஸிராத் என்பது இருள். நம்பிக்கை என்பது ஒளி.
நற்பாக்கியம் பெற்ற மனிதர்கள் ஐந்து பேர்.
1.நன்றி செலுத்தும் நாவு உள்ளவன்.
2. திக்ரு செய்யும் உள்ளம் பெற்றவன்.
3. கஷ்டத்தை தாங்கும் உடலை பெற்றவன்.
4. சொந்த ஊரில் வேலை செய்பவன்.
5. நல்ல மனைவி உள்ளவன்
ஆறு விஷயங்கள் உங்களது அமல்களை
அழித்துவிடும்
பிறரின் குறைகளைப்பற்றியே ஆராய்தல்
கல்நெஞ்சம் -
உலகத்தைப் பற்று வைத்தல்
வெட்கம் கம்மியாக இருத்தல்
மேலெண்ணம் (பேராசை) கொள்ளுதல்
அளவின்றி பாவம் செய்தல்
நரகம் ஏழு.
1 ஸகர்.
2. ஸஈர்.
3. ளழா
4. ஹுதாமா.
5. ஜஹீம்.
6. ஜஹன்னம்
7. ஹாவிய்யா.
சுவர்க்கம் எட்டு.
1. தாருஸ் ஸலாம்.
2. தாருல் கரார்.
3. ஜன்னத்துல் அத்ன்.
4. ஜன்னத்துல் மஃவா.
5. ஜன்னத்துன் நயீம்.
6. அய்னைன்.
7. பர்தௌஸ்.
8. குல்த்.
உலகம் 8 காரியங்களில் நிலைத்திருக்கிறது.
1அல்லாஹ்வின் அருள்.
2. நபிமார்களின் தூதுத்துவம்.
3. அறிஞர்களின் நுட்பம் வணக்கம் 4. வணக்கஸ்தர்களின் வணக்கம்
5. அறிவாளிகளின் உபதேசம்
6. அரசர்களின் நீதம்
7. வீரர்களின் வீரம்
8. கொடையாளிகளின் கொடை.
10 குணங்களை அல்லாஹ் மனிதர்களிடம் விரும்புவதில்லை.
1. பணக்காரன் இடத்தில் கஞ்சத்தனத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
2. ஏழை பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
3. ஆலிம்களிடம் பேராசை இருப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
4. பெண்களிடத்தில் வெட்கமற்ற தன்மையை அல்லாஹ் விரும்பமாட்டான்.
5. வாலிபன் இடத்தில் சோம்பேறித்தனத்தை அல்லாஹ் விரும்பமாட்டான்.
6. அரசன் அநீதம் புரிவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
7. வீரனிடத்தில் கோழைத்தனம் இருப்பதை அல்லாஹ் விரும்ப
மாட்டான்.
8. வயோதிகனிடத்தில் உலக ஆசை இருப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
9. துறவி இடத்தில் தற்பெருமை இருப்பதை அல்லாஹ் விரும்ப
மாட்டான்.
10. வணக்கம் புரிவதில் முகஸ்துதி இருப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
தொகுத்தவர் மௌலானா மௌலவி. அல்ஹாஜ் அல்ஹாபிழ்.
P.M. ராஜுக் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத். தேவிபட்டினம்.
மேலும் விபரங்களுக்கு.
A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக