ஒரு மூங்கில் பிளவை (பொளாச்சி) நன்றாகச் செதுக்கி, வழு வழுப்பாக்கி, அதன் ஒரு முனையில்
முறுக்கிய நூலைக் கட்டி, அந்த மூங்கில் பிளவை வளைத்து மறுமுனையில் நூலை இழுத்துக் கட்டுவார்கள்
அவ்வாறு வளைக்கும் போது அந்த மூங்கில் சரியாக வளைந்து கொடுக்கவில்லையென்றால், 'மளார்' என்று முறிந்து
போகும்.
அவ்வாறு முறிந்து போனால் அதைத் தூக்கி யெறிந்து விட்டு வேறு மூங்கில் பிளவை எடுத்து வளைப்பார்கள். எந்த மூங்கில் பிளவு முறியாமல் வளைகிறதோ, அந்த மூங்கில்
பிளவுதான் வில்லாக ஆகும். இல்லை யென்றால் அது பயனற்றுப் போகும்
அதேபோல் தான் பணிவுள்ள ஒருவன் பணி செய்யும் தகுதியைப்
பெறுவான். மாறாகப் பணிவில்லாதவன், உறவில் முறிவு ஏற்பட்டு
ஒதுக்கப்படுவான்.
மேலும், ஒரு வில் எந்த அளவிற்கு வளைந்து கொடுக்கிறதோ, அந்த அளவிற்கு
அந்த வில்லின் வேகம் அதிகம்.
அதாவது அந்த வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்பு வேகமாகச்
செல்லும். சரியாக வளையாத வில்லில் வேகமாக அம்பெய்ய முடியாது. சுருங்கச் சொன்னால், வளைந்த வில்லிற்கு
வேகம் அதிகம்
அவ்வாறு சூழலுக்கு ஏற்பப் பணிவது, வளைந்து கொடுப்பதுபோல்
இருந்தாலும், அதற்குத்தான் ஆற்றல் அதிகம். எனவே, சாதனை படைக்க, மற்றவர்களை
ஈர்க்க பணிவு என்பது கட்டாயத் தேவை. பணிவு என்பது அடிமைத்தனமல்ல அடக்கம்.
அடிமைத்தனம்தான் கூடாது பணிவு வேண்டும்
( மதிப்பிற்குரிய
மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில்
இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு
இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.)
மேலும் விபரங்களுக்கு.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக