தூய தங்கத்தில் செம்பு கலந்தால்தான் அது நாம்இழுக்கின்ற, வளைக்கின்ற வகைகெல்லாம்
வரும். அது போன்றது தான் நம் வாழ்வும், நூறு விழுக்காடு சரியாக
வாழ்வதென்பது பயன்பாட்டிற்கு உதவாது. நடைமுறை வாழ்வில் நடை முறைச் சிக்கலுக்கேற்ப பொய்யும்
வழுவும் கலந்தால் மட்டுமே வாழ்வு வசப்படும், சுகப்படும்
ஆனால், அந்தப்
பொய்யும் வழுவும், யாருக்கும்
தீங்கு பயக்காத, பொதுநலன்
கருதிச் செய்யப்பட வேண்டும்
ஏழையின் வீட்டிற்குத் திடீரென செல்லும்போது இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு
வந்தேன்” என்பதும் திருப்பிக்
கொடுக்காத கடன்காரன் கேட்கும்போது, பணத்தை வைத்துக் கொண்டே
இல்லையென்பதும், யாராவது
நம்மீது பலமாக இடித்துவிட்ட நிலையிலும், அவர்கள் வருத்தம் தெரிவிக்கும்போது, பரவாயில்லை, ஒன்றும்
வலியில்லை யென்பதும், ஆபத்திலிருந்து
ஒருவரைக் காக்கவும் பொய்யும் வழுவும் தேவைப்படு மென்றால் அதைக் கலப்பதில் தவறில்லை
தங்கத்தில் செம்பைக் கலப்பது தங்கத்தைக் கெடுக்க வேண்டும்
என்பதற்காக அல்ல. தங்கத்தைப் பயன் படுத்த வேண்டும் என்பதற் காக. விஷம் உண்ணக்
கூடாதது என்றாலும், மருந்தாக விஷத்தைப்
பயன்படுத்துவதுபோல நம் வாழ்வில் சில பொய்யும் வழுவும்
கலக்கப்படலாம்
தங்கத்தில்தான் செம்பைக் கலக்கவேண்டுமே தவிர செம்பில் தங்கத்தைக் கலக்கும் முயற்சி குற்றம் ஆகும்.
மதிப்பிற்குரிய மஞ்சை
வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம்
பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக்
கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக