புதன், 15 ஏப்ரல், 2020

பெண்கள் தொழுகை முறை



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எனது பெயர் ................................................

நான் இங்கு பெண்கள் தொழும் முறைகள் பற்றிய ஒரு சில விசயங்களை பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

பெண்கள் தொழுகை ஆரம்பிப்பதற்கு முன்பு முகம், கைகள் மணிக்கட்டுவரை பாதங்கள் தவிர முழு உடலும் துணியால் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும் சில பெண்கள் முடி திறந்திருக்கும் நிலையில் தொழுகின்றனர்.

சிலர் முழங்கை திறந்திருக்கும் நிலையில் தொழுகின்றனர். அல்லது தலையில் போடும் துப்பட்டா முடியின் கீழ்பகுதி வெளியில் தெரியும் அளவிற்கு சிறியதாக போடுகின்றனர். இவையனைத்தும் கூடாத காரியமாகும்.

பெண்கள் வீட்டின் அறையில் தொழுவது, வீட்டின் கூடத்தில் அதாவது ஹாலில் தொழுவதைவிட சிறந்ததாகும். ஹாலில் தொழுவது திண்ணையில் தொழுவதைவிட சிறந்ததாகும்

பெண்கள் தொழுகை ஆரம்பிக்கும்போது கைகளை தோள்வரை உயர்த்த வேண்டும் அதுவும் துப்பட்டாவிற்கு உள்ளிருந்தே உயர்த்த வேண்டும்.

பெண்கள் கைகளை நெஞ்சின் மீது வலது உள்ளங்கையை இடது புறங்கை மீது வைத்து கட்ட வேண்டும்.

பெண்கள் ருகூஃவில் ஆண்களைவிடச் சற்று குறைவாக குனிய வேண்டும்.

ருகூஃவில் பெண்கள் கைவிரல்களை இடைவெளி இல்லாமல் சேர்த்து வைக்க வேண்டும்.

பெண்கள் ருகூஃவில் கால்களை நேராக வைக்காமல் முழங்கால் சற்று முன்னேக்கியவாறு வ.ளைந்து இருக்க வேண்டும்.

ருகூஃவில் பெண்கள் கைகளை விலாவோடு சேர்த்து வைக்க வேண்டும்.

இரு பாதங்களையும் சேர்த்து வைக்க வேண்டும், முடிந்த அளவு இரு கரண்டை மொழிகளும் இணைந்துவிட வேண்டும்.


ஸஜ்தாவில் வயிறு தொடையுடன் சேர்ந்து கைகள் உடலுடன் இணைந்தவாறும் பாதங்களை நிற்க வைக்காமல் வலது புறம் நீட்டியும் விடவேண்டும்.

பெண்கள் ஸஜ்தாவில் முழங்கையை பூமியில் வைத்துவிட வேண்டும்.

இரு ஸஜ்தாவிற்கு இடையில் மற்றும் அத்தஹியாத்தில் உட்காரும்போது இடது பிட்டத்தை பூமியில் வைத்து உட்கார்ந்து கொண்டு பாதங்களை வலது புறம் நீட்டி விடவேண்டும்.

பெண்கள் (ருகூஃ, ஸஜ்தா, சிறு இருப்பு மற்றும் அத்தஹிய்யாத் இருப்பு ஆகிய) எல்லா சந்தர்ப்பங்களிலும் கை விரல்களை சேர்த்தே வைக்கவேண்டும்.

பெண்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையோ அல்லது பெருநாள் தொழுகையோ கடமை இல்லை.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக