ஆனால், அதே குழலில்
துளையிட்டு வாய்ப் பகுதியைக் கூர்மையாக்கி
சிறு ஓட்டையின் வழியே காற்றை ஊதி, விரல்களால் துளைகளை
லாவகமாக மூடித் திறந்தால் , இனிய இசை கிடைக்கும்
அதேபோல், நம்முடைய
முயற்சிகள், உழைப்பு திட்டமிட்டு,முறையாக
சரியான கால இடை வெளியில் செய்யப்படும்போது, அது அழகும், சிறப்பும், உயர்வும் பெறும்.
வெறும் வாயால் ஊதுவதைவிட, குழல்வழி ஊதினால் பயன் அதிகம் கிடைக்கிறது. அதே குழலில் முறையாகத் துளையிட்டு
ஊதி, தேவைக்கேற்பத்
துளையை மூடித் திறந்தால் இனிய இசை பிறக்கிறது. முறையாக ஒழுங்குற முயலும்போது
இந்தப் பயன் கிடைக்கிறது.
அதே வகையில், நாம்
பேசுவதாய் இருந்தாலும் எழுதுவதாய் இருந்தாலும், சமைப்பதாய் இருந்தாலும் அடுக்கி
வைப்பதாய் இருந்தாலும் அவற்றை எந்த அளவிற்கு நாம் முறையாக ஒழுங்காகச் செய்கிறோமோ அந்த
அளவிற்கு பயனும் சிறப்பும் கூடுதலாகக் கிடைக்கும்.
மலிவான பொருளைக் கொண்டே, சிறப்பாக சமைக்கின்றவர்கள் சுவையாக சமைத்து விடுவார்கள். எவ்வளவு விலையுயர்ந்த
பண்டங்களைக் கொடுத்தாலும் முறையாகச் செய்யத் தெரியவில்லையென்றால் அனைத்தும் பாழ் எனவே, ஒழுங்கும், முறையும்
கூடக்கூட சிறப்பு கூடும்.பயனும் கூடும்
மதிப்பிற்குரிய மஞ்சை
வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம்
பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக்
கொள்ளவும்.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக