அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
எனது பெயர்.....................................................
நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
இவ்வுலகை நேசிப்பவன் கடல் நீரை குடிப்பவனைப்போன்றவன். அதைஅவன் குடிக்க குடிக்க அவன் தாகம் அதிகரிக்கவே செய்யும். கடைசியில் அவன் தன் தாகம் அடங்காதவனாக மடிவான் என்று கூறினார்கள்
இறைவணக்கம் என்பது பத்து பகுதிகள் கொண்டது. அதில் ஒன்பது பகுதிகள் மெளனத்தில் உருவாகின்றன. ஒரு பகுதி மக்களை விட்டும் தனித்திருப்பதில் உருவாகிறது என்று கூறினார்கள்
ஒருவன் கல்வி கற்று அதன்படி தானும் செயலாற்றி பிறருக்கும் அதனை கற்று கொடுப்பின் அவனே மாண்பாளன் என்று விண்ணகத்தில் அழைப்பர்' என்று ஈஸா (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து,
“ஒருவன் எவ்வளவு காலம் வரை கல்வி கற்பது ?” என்று கேட்டார். “உயிரோடு இருக்கும்வரை”
என்று சடாரெ பதிலளித்தார்கள் என்று கூறினார்கள்
தமக்கு ஏற்பட்ட துன்பங்களையும், நோய்களையும் கண்டு அவை தம் பாவம் போக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட பரிகாரம் என்று கருதாதவன் உண்மையான அறிஞன் அல்ல மேலும், நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள் சிலவற்றை வெறுக்கிறீர்கள். நீங்கள் விரும்பாதவை நிகழும்போது,
அவற்றை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளாத வரையில் நீங்கள் விரும்பும் ஒன்றை கிடைக்கப் பெறமாட்டீர்கள். என்று கூறினார்கள்
உதவி கேட்ட ஏழைக்கு எதையும் தராமல் போகச் சொல்பவரின் இல்லத்திற்கு வானவர்கள் ஏழு நாட்கள் வரை வரமாட்டார்கள் என்று கூறினார்கள்
எனக்கு இங்கு பேச
வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து
விடை பெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக