திங்கள், 13 ஏப்ரல், 2020

ஸதகாவின் சிறப்பு




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர்........................................................................

நான் ஸதகாவின் சிறப்பைப் பற்றி ஒரு சில விசயத்தை கூற இங்கு வந்துள்ளேன்.

ஸதகா செய்வதன் காரணமாக ஒருவருக்கு ஏற்பட்ட அவமானங்களையும் நோய்களையும் அது அகற்றிவிடுகிறது. மேலும் நன்மைகளையும், வயதையும் செல்வத்தையும் பெருக்கித் தருகிறது

மனக்கவலைகளுக்கும், மனச் சஞ்சலங்களுக்கும் பரிகாரம் ஸதகா கொடுப்பதாகும்.

ஒருவர் ஏதேனுமொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவித்தால் எதுவரை உடுத்தியவரின் உடலின் மீது அந்த உடையின் ஒரு துண்டாவது இருக்குமோ அதுவரை ஆடை அணிவித்தவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பார்.

அதிகம் ஸதகா கொடுப்பதால் மரணசமயத்தில் ஷைத்தானின் ஊகலாட்டத்தை விட்டும் பாதுகாப்பளிக்கிறது மேலும், வியாதி ஏற்படும் சமயங்களில் அதன் கடுமையின் காரணமாக அல்லாஹ்விடம் நன்றிகெட்ட சொற்கள் வாயிலிருந்து
ஏற்படாதிருக்க பாதுகாக்கிறது.

அதிகமாக ஸதகா செய்வதால், அது திடீர் மரணத்தைத் தடுக்கின்றது

ஸதகா செய்வது எழுபது துன்பங்களைத் தடுத்து நிறுத்துகிறது
அவற்றில் மிகக் குறைந்தது குஷ்டம், வெண்குஷ்டம் ஆகிய வியாதிகளாகும்.

தண்ணீர் நெருப்பை எவ்வாறு அணைத்துவிடுகிறதோ, அதுபோல் ஸதகா பாவங்களை அணைத்துவிடுகிறது.

இறந்தவர்களுக்கான ஹக்கில் ஸதைகா செய்வதால், அதன் நன்மைகள் அவர்களுக்குச் சேர்த்து வைக்கப்படுகிறது

ஸதகா செய்வதால் கஞ்சத்தனம் நீங்குகிறது ஸதகா செய்வதன் மூலம் அதன் முழுபலன்களை அடைய விரும்புபவர்கள் செய்த
உதவியை பிறரிடம் சொல்லிக்காட்டாமலும், புகழ் தேடாமலும் இருப்பது அதற்குண்டான நிபந்தனைகளாகும்

எனவே ஏழை எளியோருக்கு தர்மம் கொடுப்போம். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

மேலும் விபரங்களுக்கு...

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக