செவ்வாய், 28 ஏப்ரல், 2020

மெளலானா பதில்கள்


கேள்வி : ஜும்ஆவுடைய தொழுகை வாஜிபா? ஃபர்ளா? மற்றத் தொழுகைகளை காட்டிலும் ஜும்ஆவுடைய தொழுகையில் மக்கள் ஏன் அதிகம் கலந்து கொள்கிறார்கள்

பதில் : ஜும்ஆ தொழுகை மற்ற ஐவேளைத் தொழுகைகளைப் போன்று ஃபர்ளாகும். ஃபர்ளுத் தொழுகையை ஃபர்ளு இல்லை என மறுத்தால் அவன் காஃபிராகி விடுவான். ஜும்ஆ தொழுகை ஃபர்ளு என்பது குர்ஆன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்


ஈமான் கொண்டோரே ஜும்ஆ நாளில் தொழுகையின் பக்கம் நீங்கள்
அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் (தொழுகையின்) பால் விரைந்து வாருங்கள்  (அல்குர்ஆன் 629          )

ஹதீஸ்களில் ஜும்ஆ நாள் மற்ற அனைத்து நாட்களைவிட சிறந்தது. அந்நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. அந்நேரத்தில் அடியான் எந்த துஆ செய்தாலும் ஏற்றக்கொள்ளப்படும் என்று வருகிறது.

ஜூம்ஆ தொழுகையை விடுவது பெரும்பாவமாகும். ஏனெனில் ஹதீஸில் மூன்று ஜூம்ஆக்களை யார் பொடுபோக்காக விட்டு விடுகிறாரோ அவர் உள்ளத்தில் அல்லாஹ் (நன்மை புகாதவாறு முத்திரையிட்டு விடுவான். (நூல்:மிஷ்காத், பக்-121.

எந்த நிர்ப்பந்தமும் இன்றி ஜும்ஆவை யார் விட்டுவிடுகின்றாரோ அவர் முனாஃபிக் - நயவஞ்சகர்களின் பட்டியலில் எழுதப்பட்டு விடுவான். அப்பட்டியல் மாற்றவும் படாது. அழிக்கவும் படாது.
நூல் : மிஷ்காத்)

எனவே ஜும்ஆ தொழுகை ஃபர்ளாகும். அது லுஹர் தொழுகைக்கு பகரமாகும் ஜூம்ஆ தொழுகையைப் போன்று மற்ற ஐவேளைத் தொழுகைகளையும் மிகப் பேணுதலாக நிறைவேற்ற வேண்டும். ஐவேளைத் தொழுகைகளை விடுவது ஹராமாகும். அதற்கு ஹதீஸ்களில் கடும் எச்சரிக்கை வந்துள்ளது

ஒரு மனிதனின் ஈமானுக்கும் ஷிர்க், குஃப்ருக்கும் இடையே (இறுதி எல்லைக் கோடாக) இருப்பது தொழுகையை விடுவதாகும். (நூல் : முஸ்லிம்) (எனவே ஷரீஅத்தில் கூறப்பட்ட எந்த தங்கடமுமின்றி தொழுகையை விடுவதைக் கொண்டு ஒரு மனி தன் காஃபிரானவனைப் போன்று ஆகிவிடுகிறான்)

மற்ற தொழுகைகளை விட ஜும்ஆ தொழுகைக்கு மக்கள் அதிகம் வருவதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்.

1 மற்ற தொழுகைகளை எங்கு வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் ஜும்ஆ தொழுகையை மஸ்ஜிதில் ஜமாஅத்தாகத்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதால் எப்படியேனும் மக்கள் மஸ்ஜிதிற்கு வந்து விடுகிறார்கள்,

2. ஜும்ஆவுடைய முக்கியத்துவத்தைப் போன்று மற்ற தொழுகை களுடைய முக்கியத்துவம் அவர்களுக்கு விளங்கவில்லை. எனவே
மற்ற தொழுகைகளில் பொடுபோக்குத்தனம் காட்டுகிறார்கள். இது தவறாகும் விட்டும் தவிர்ந்து கொள்வது மிக அவசியமாகும்

கேள்வி : தங்க முலாம் பூசப்பட்ட கைக் கடிகாரம், மூக்குக் கண்ணாடி பிரேம் போன்றதை ஆண்கள் அணியலாமா..?

பதில் : தங்க முலாம் பூசப்பட்ட கைக் கடிகாரம், மூக்கு கண்ணாடி ஃபிரேம் போன்றதை ஆண்கள் அணிவதற்கு அனுமதி உண்டு. எனினும் அவற்றை தவிர்த்து கொள்வதே பேணிக்கையாகும்.
(நூல் : துர்ருல் முக்தார். பா-6, பக்-344)

கேள்வி : என் மகளுக்கு ஸாபிரா என்று பெயர் வைத்துள்ளேன். இந்த பெயர் வைத்திருப்பவர்களுக்கு சோதனைகளும் சிரமங்களும் அதிகமாக வரும் என்று கூறுகிறார்களே? இது சரியா? விளக்கம் தரவும்.

பதில் : பெண் பிள்ளைக்கு ஸாபிரா (பெறுமைசாலி என்று பெயர் வைப்பது சரியே. பெயரின் தாக்கம் அப்பெயருடையவருக்கு ஏற்படும். எனவே துன்பம், துயரம் வரும் பொழுது அதை பொறுத்துக் கொள்ளும் தன்மை அப்பிள்ளைக்கு ஏற்படும் 

உலகவாழ்வு துன்பம் துயரங்கள் நிறைந்ததே. அதற்காக ஸாபிரா என்று பெயர் வைப்பதால் அவருக்கு நிறைய துன்பங்கள் வரும் என்று பொருள் கொள்வது தவறாகும்

கேள்வி : ரேஷன் கடைகளில் பெரும்பாலான மக்கள் வாங்காத கோதுமை மைதா போன்றவைகளை ரேஷன் கார்டு இல்லாமல் அரசாங்கம் நிர்ணயித்த அல்லது அதைவிட அதிகமாக அரசாங்கம் நிர்ணயித்த விலை கொடுத்தோ அல்லது அதைவிட அதிக விலை கொடுத்தோ வாங்கலாமா...?

பதில் : நாம் குடியிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்கள் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட பாவமாக இல்லாத பட்சத்தில் அதைப் பேணுவது நம்மீது கடமையாகும் இது வாக்குறுதியை நிறைவேற்றுதல் என்பதின் கீழ் வரும். எனவே அரசாங்க சட்டப்படி ரேஷன் கார்டு மூலம் எவ்வளவு பொருள் வாங்க உரிமை உள்ளதோ அந்த அளவு அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். யார் தனது பங்கை தன் கார்டு மூலம் வாங்கவில்லையோ அந்த பங்கு அரசுக்குரியது. அதை மற்றவர் பெற உரிமையில்லை. எனவே அப்பொருளை அதன் நிர்ணய விலையை கொடுத்தா. அதிகம் கொடுத்தோ வாங்குவது கூடாது. அதிகம் விலை கொடுத்து வாங்குவதல் வஞ்சம் கொடுப்பது என்ற பாவமும் சேரும், இது அரசாங்கத்தின் சட்டப்படியும் குற்றமாகும், எனவே இவ்வாறு விற்பதும் வாங்குவதும் கூடாது. அதே சமயம் இதற்கு அரசின் அனுமதி இருப்பின் கூடும்

கேள்வி ; நபி ஸல் அவர்களிடம் ஒரு பெண் தன் மகனை அழைத்து வந்து அதிகம் சாப்பிடுகின்றான். உபதேசம் செய்யுங்கள் என்று கூறிய பொழுது சில நாட்கள் கழித்து வரும்படி கூறிவிட்டார்கள். பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் வந்ததும் இனிப்பு அதிகம் சாப்பிட வேண்டாம் என அச்சிறுவனுக்கு உதேசித்தார்கள். இதை அன்றே செய்திருக்கலாமே என்று நபி அவர்களிடம் கேட்டதற்கு நானே இனிப்பு அதிகம் சாப்பிட்டு வந்தேன் எனவே முதலில் நான் குறைத்துக் கொண்டு பிறகு அவனிடம் உபதேசிக்கலாம் என்று இவ்வாறு செய்தேன் என்று பதில் கூறினார்கள் இந்த நிகழ்ச்சி பரவலாக கூறப்படுகிறது. இது சரியா...?

பதில் : மேற்கூறிய சம்பவம் பொதுவாக பயான்களிலும் உபதேசங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டாலும் நபி அவர்களுடன் இந்நிகழ்ச்சி நடந்ததாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் நமக்கு கிடைக்கவில்லை, எனவே ஆதாரமற்ற அறிவிப்புகளை கூறுவதை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் நபி ஸல் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷியத்தில் பொய்யான தகவலை சொன்னக் குற்றம் ஏற்பட்டுவிடும். யார் என் மீது (என் சம்பந்தமான விஷயத்தில்) பொய்யை கூறுகிறாரோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் (நூல் புஹாரி என்று ஹதீஸில் கடும் எச்சரிக்கை வந்துள்ளது.

கேள்வி : இறந்து விட்ட பெற்றோர்களுக்கு அதிகம் பலன் தரக்கூடிய எந்த அமல்களை நாம் தொடர்ந்து செய்து அவர்களுக்காக ஈஸால் தவாப் செய்யலாம்...?

பதில் : மரணித்துவிட்ட பெற்றோர் மற்றும் உற்றாருக்கு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நாளில் இப்படிச் செய்ய வேண்டும் என்பது போன்ற எந்தவித குறிப்பும் இல்லாமல் ஈஸால் தவாப் செய்யலாம்

ஸஃதுப்னு உபாதா (ரலி அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரசூலுல்லாஹி அவர்களிடம் யாரசூலல்லாஹ் நான் இல்லாத போது என் தாயார் மரணித்து விட்டார். நான் அவருக்காக ஏதேனும் ஸதகா செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா...? என்று வினவினேன். அதற்கு பெருமானார் ஸல் அவர்கள் ஆம் என்றார்கள்

உடன் நான் இன்ன எனது மரம் நிறைந்த தோட்டம் அவருக்காக ஸதகா செய்து விட்டேன் என்பதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன் என்றேன். புகாரி 1386)

எனவே மரணித்து விட்டோருக்கு குர்ஆன் ஓதுதல், திக்ரு தஸ்பீஹ், நஃபில் தொழுகை, ஏழைகளுக்கு ஸதகா செய்தல் போன்றவற்றை செய்து மனதால் இதன் நன்மையை இன்னாருக்கு சேர்ப்பாயாக என்று துஆ செய்ய வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஈஸால் தவாப் செய்யுங்கள்

கேள்வி : அகீகா இறைச்சியை பெற்றோர்கள் சாப்பிடக் கூடாது என்பது சரியா...?

பதில் : அகீகாவும் குர்பானியைப் போன்று தான். அகீகாவின் இறைச்சியை குழந்தையின் பெற்றோரும் உற்றார் உறவினரும் சாப்பிடலாம். தர்மமும் செய்ய வேண்டும். குழந்தையின் அகீகாவை பெற்றோர்கள் சாப்பிடக் கூடாது என்று பரவலாக எண்ணப்படுவது தவறான கருத்தாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை
(பதாவா மஹ்மூதிய்யா 17:413)

MANARUL HUDA JUMADHAL UKHRA - 1432 MAY - 2011


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக