செவ்வாய், 28 ஏப்ரல், 2020

மெளலானா - பதில்கள் 2008. ஜூன் மாதம்


கேள்வி : கம்பெனிகளில் வேலை செயபவர்கள் ஷ-சாக்ஸ் அணியும் கட்டாய சூழ்நிலையில், ஒளுவின் போது கால்களை கழுகுவதற்குப் பகரமாக சாக்ஸில் மஸஹ் செய்யலாமா ஹதீஸில் கூறப்பட்டுள்ள "குப்பைன் (மோஜாவின்) சட்டம் சாக்ஸிற்கு பொருந்துமா? பொருந்தாதா? ஆதாரம் என்ன...?


பதில்: துணிகளால் செய்யப்படும் காலுறைகள்(socks) மீது மஸஹ் செய்வது தண்ணீரால் தடவுவது) கூடாது. சாக்ஸை கழற்றி தண்ணீரால் இரு கால்களையும் கழுகுவது அவசியம். ஏனெனில் ஹதீஸில் கூறப்பட்ட "குப்பைன்”-(மோஜாவிற்கு) சொல்லப்பட்ட நிபந்தனைகள் சாக்ஸில் இல்லை.

மஸஹ் செய்வதற்கு கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக
மோஜா இருப்பது அவசியம் ஆகும்

1. தண்ணிர் உறிஞ்சாத அளவுக்கு மோஜா (காலுறை) உறுதியானதாக இருக்க வேண்டும். மேலும் கால் வெளியில் தெரியக்கூடாது

2. செருப்பின்றி காலுறைகளை மட்டும் அணிந்து மூன்று மைல் துாரம் நடந்தால் அவை கிழியக் கூடாது.

3. காலுறைகளின் மேல் பகுதி ஏதேனும் இலாஸ்டிக் போன்ற பொருளினால் கட்டப்படாமல் தானாகவே கால்களை உறுதியாக பற்றிக் கொள்ளும் விதத்தில் இருப்பது அவசியம். கயிறு போன்றவைகள் மூலம் காலில் இணைக்கப்பட்டிருப்பின் அதில் மஸஹ் செய்வது கூடாது
(
ரத்துல் முஹ்தார், பக்கம் 248, பாகம்-1)


கேள்வி : பிறருக்கு தையல் தைத்து கொடுக்கும் போது மீதமுள்ள துணிகளை திருப்பிக் கொடுக்க வேண்டுமா? மார்க்க சட்டம் என்ன? கூடை பின்னும் போது மீதமுள்ள வயர்களின் சட்டம் என்ன.. ?

பதில் : மீதமுள்ள துணிகளை மூன்று வகைப்படுத்தலாம்

1.சாதாரண துண்டுத் துணிகள்- துணியின் உரிமையானர் பொருட்படுத்தமல் விட்டு விடுவார் என்றிருப்பின், அத்துணிகளை தையல்காரர் பயன்படுத்துவதில் தவறில்லை

2. மீதமுள்ள துணி வேறு வேலைக்கு பயன்படுமளவு பெரிதாக இருக்கிறது உரிமையாளரும் இது போன்ற துணிகளை விட்டுவிட மாட்டார் என்றிருப்பின் உரிமையாளரின் அனுமதியுடன் தையல்காரர் பயன்படுத்திக் கொள்ளலாம்

3. மீதமுள்ள துணி வேறு வேலைக்கு பயன்படுமளவு பெரிதாக இருந்து, உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் அதை தம்மிடம்வைத்துக் கொண்டால் இது திருடிய துணியாகும். இதை பயன்படுத்துவது கூடாது. (மீதமுள்ள வயர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
(பதாவா ரஹீமிய்யா, பக்கம் 284, பாகம்-1)

கேள்வி : பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைவீட்டார், முதலில் நகை, பணம் எவ்வளவு என்று கேட்கிறார்கள். நகை போடுகிறோம். பணம் தரமாட்டோம் எண்று கூறலாமா..? இரண்டும் வரதட்சணையில் சேருமா..?

பதில்: திருமணத்தின் போது பெண்வீட்டார் தமது அந்தஸ்து -சக்திக்கேற்ப மனமுவந்து, மணமகளுக்கு நகை போடலாம். மாப்பிள்ளை வீட்டார்நகைபோட கூறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது.

மணமகன், தனக்காகவோ தது வீட்டுக்காகவோ மணமகள் வீட்டாரிடம் ஏதாவது பணமோ, பொருளோ கேட்டுப் பெறுவது கூடாது. இது இலஞ்சம் ஆகும் எனவே யாராவது இவ்வாறு கேட்டுப் பெற்றிருந்தால் அதை திருப்பிப் கொடுப்பது அவசியம்.

கேட்டுப் பெறாமல் கொடுக்கல் வாங்கலில் எவ்வித சம்பிரதாய
சடங்குகளின்றிமனமுவந்து கொடுத்தால் அது அன்பளிப்பாகும். அதை வாங்குவது கூடும். ஆனால் மக்கள் வழக்கத்தில் கொடுத்து வாங்கும் நிலை இருந்து,அவ்வாறு கொடுக்காமல் இருப்பதை தவறாக நினைத்தால் அப்போது பணமோ,பொருளோ வாங்குவதும் கொடுப்பதும் கூடாது.
(
மஜமூஅத்துல் பதாவா, பக்கம்-216, பதாவா மஹ்மூதிய்யா, பக்கம்-187, பாகம்-11)

கேள்வி : ஆட்டோ, வேன் கடனுக்கு வாங்கலாமா? சிறிது முன் பணம் செலுத்தி டியூவில்( DUE) எடுக்கலாமா? கூடுமா? கூடாதா..?

பதில் : ரொக்கம் -கடனில் விற்பனை செய்யும் போது விலையில் வித்தியாசம் (கூடுதல் -குறைவு) இருப்பது கூடும். (உம்) ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கினால் 8 ரூபாய் என்றும், கடனுக்கு வாங்கினால் 10 ரூபாய் என்றும் கூறுவது ஆட்டோ வேன் போன்றவைகளை தவணையில் பணம் செலுத்தி வாங்குவது கூடும். ஆனால் சில நிபந்தனை உண்டு

1. பொருளை வாங்கும் போதே முழுவிலையை நிர்ணயம் செய்து விட வேண்டும்.

2. பணம் செலுத்தும் தவணைக்காலத்தை மாத அடிப்படையில் நிர்ணயம் செய்து விட வேண்டும்

ஒருக்கால், பணத்தை செலுத்துவதில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட சிறிது தாமதம் ஆனால்,விலையில் ஏதும் அதிகப்படுத்தக்கூடாது. ஆனால் பொருளின் விலை முழுமையாக நிர்ணயிக்கப்படாமல், தவணைக் காலத்தை கவனித்து விலையில் வித்தியாசம் இருப்பின், இது வட்டியாகிவிடும். (உம்) ஒரு பொருளின் விலை 8 ரூபாய் என வைத்துக் கொள்வோம். இப்போது பணம் செலுத்தும் போது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட ஒரு மாதம் அதிகமாகிவிட்டால் இரண்டு ரூபாய் அதிகமாகும். இரண்டு மாதம் அதிகமானால் நான்கு ரூபாய், மூன்று மாதம் அதிகமானால் ஆறு ரூபாய் மொத்த விலையில் அதிகரிக்கப்படும் என்று கூறுவது. இது வட்டியாகும். எனவே ஷரீஅத் முறைப்படி கூடாது
(பிக்ஹீமகாலாத், பக்கம்-86, பாகம்-1)

கேள்வி : இஸ்திஹாலா உடைய சட்டம் என்ன? ஒன்று அல்லது ஒன்றரை வருடம் இஸ்திஹாலாவினால் தொழாத பெண்ணுக்குரிய சட்டம் யாது..?

பதில். : ஹைலு (மாதவிடாய்), நிபாஸ் (பிரசவத்தீிட்டு)-க்குரிய குறிப்பிட்ட கால அளவை கடந்து வரக்கூடிய இரத்தம் இஸ்திஹாலா என அழைக்கப்படுகிறது

இஸ்திஹாலா நிலையிலுள்ள பெண், சுத்தமான பெண்களைப் போன்றுதான் இந்நிலையில் , தொழுவது, நோன்பு நோற்பது, கணவனுடன் தாம்பத்ய உறவு கொள்வது, (சுத்தமான பெண்ணுக்கு ஆகுமாக இருப்பதைப் போன்று) இஸ்திஹாலாவுடைய பெண்ணுக்கும் ஆகுமாகும்.

இஸ்திஹாலாவுடைய பெண் இரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தொழ வேண்டும் ஏனெனில் பாயின் மீது இரத்தம் சொட்டினாலும் ஒளு செய்து தொழ வேண்டும் என ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இஸ்திஹாலாஉடைய நிலையில் விடுபட்ட தொழுகைகள் அனைத்தையும் களா செய்ய வேண்டும்
(ரத்துல் முஹ்தார், பக்கம் 298, பாகம்-1)

கேள்வி : சில வியாபாரிகள் சேர்த்து அமைத்த "தொழுகை கூடம்" ஒன்றில் பஜ்ர்"நீங்கலாக மற்ற தொழுகைகள் சுமார் இரண்டு ஆண்டுகளாக ஹனபி முறைப்படி நடைபெற்றுவருகிறது. இதில் "ஜும்ஆ" நடத்த அனுமதியுள்ளதா..?

பதில்: ஜும்ஆ தொழுவதற்கு முறைப்படியான மஸ்ஜிதாக இருப்பது அவசியமில்லை. வணக்கத்திற்காக கட்டப்பட்ட இடத்தில்ஜும்ஆ தொழுவது கூடும். ஆனால் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி அளிப்பது நிபந்தனையாகும்.
(ரத்துல்முஹ்தார்-பக்கம்152, பாகம்-2)

2008 ஜூலை மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக