திங்கள், 24 டிசம்பர், 2018

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.


அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்...

புதன், 19 டிசம்பர், 2018

முஸ்லிமின் கடமைகள்

கேள்வி  : ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன...?

பதில் : அவைகள் பல உள்ளன. அவற்றுள் சில கடமைகளை நான் இங்கே சொல்கிறேன்.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தண்ணீர் பற்றிய கேள்வி : பதில்கள்.


கேள்வி : எந்தெந்த நீரினால் ஒளுவும் குளிப்பும் நிறைவேறும்..?

பதில் : மழை நீர், கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர், கடல் நீர், ஓடும் தண்ணீர் இவற்றில் ஒளுவும் குளிப்பும் நிறைவேறும்.

சனி, 15 டிசம்பர், 2018

அமைதி என்றால் என்ன....?




நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே
பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.
இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”
சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.
இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழைகீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,  


ஆம்.,நண்பர்களே.,
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.
அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,
நிச்சயம் ஒரு நாள் விடியும்என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிதுஎன்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே
அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.
சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.
அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.





கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில்
சிக்கி மூழ்கிவிடுகிறது.
அதில் ஒருவன் மட்டும்
எப்படியோ தப்பி விடுகிறான்.
அருகிலுள்ள தீவில் அவன்
கரையேறுகிறான்.

ஒளுவைப் பற்றிய கேள்வி : பதில்கள்.



கேள்வி : ஒளு என்றால் என்ன...?

பதில் : ஒளு என்றால் முகம் இரு கைகள் கழுவப்படுவதுடன், தலையை நனைத்த கையால் தடவுவதும், இரு கால்களை கரண்டை மொழி உட்பட கழுவுவதற்குச் சொல்லப்படும்.

கேள்வி : பதில்கள்.



1)    கேள்வி :  நாம் எவரின் அடியார்கள்.
பதில் : நாம் வல்லோன் அல்லாஹ்வின் அடியார்கள்.

வியாழன், 13 டிசம்பர், 2018

முத்தான மூன்று உபதேசங்கள்.


      ஆடியோ உரை  : மௌலானா, மௌலவி, அல்ஹாபிழ், அல்ஹாஜ்.
                                                      S.Sஅஹ்மது பாஜில் பாகவி
                 [தலைமை இமாம் மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர் மலேசியா.]

நபித்தோழர் அபூதர் கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். எனக்கு எனது நேசர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மூன்று உபதேசங்கள் செய்தார்கள்.