அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....
ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் மனம் இது போதும் என்கிற வரையில் தூங்க நேரம் இருக்கிறது.
மூன்று நான்கு வேளை தவறாமல் சாப்பிடுவதற்கு நேரம் இருக்கிறது.
குளித்து மணிக்கணக்கில் கண்ணாடி முன் அலங்கரித்துக் கொள்ள நேரம் இருக்கிறது.
உற்றார் உறவினர் வீடுகளுக்குச் செல்லவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும்
நேரம் இருக்கிறது.
கதைப் புத்தகங்களை, சினிமா
பத்திரிகைகள், நாவல்கள் படிக்க
நேரம் இருக்கிறது.
பேஸ்புக்ல வாட்சப்ல மணிக்கணக்ல இல்ல நாள்கணக்குல முழ்கி கிடக்க நேரம்
இருக்கிறது.
இரண்டரை மணி நேரம் பார்க்கக் கூடிய சினிமாவுக்கு இரண்டு மணி நேரம் கியூவில்
நிற்க நேரம் இருக்கிறது.
வரிசையில் நின்று டிக்கட் வாங்க நேரம் இருக்கிறது.
ரேடியோ கேட்கவும், டி.வி.
பார்க்கவும் நேரம் இருக்கிறது.
அரசியல் கூட்டங்களுக்குச் சென்று வாழ்க- ஓழிக போடுவதற்கு நேரம் இருக்கிறது.
மூன்றாவது மனிதர்களைப் பற்றி வம்பு பேச நேரம் இருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்காக உழைக்கவும், போராட்டங்களில் கலந்து கொள்ளவும்
நேரம் இருக்கிறது.
முச்சந்திகளிலும், கடைவீதிகளிலும்
அமர்ந்து ஊர் பலாயை கழுவ நேரம் இருக்கிறது.
தங்களின் வேலை ஆகவேண்டும் என்பதற்காக யார் யார் முன்னாலேயோ உட்கார்ந்து
எதற்கும் உதவாத அவர்களைத் துதிபாட நேரம் இருக்கிறது.
என்ன ஆச்சரியம்! இவைகளுக்கெல்லாம் நேரம் ஓதுக்கும் முஸ்லிம்களுக்கு
சொர்க்கத்தின் திறவுகோலாகிய தொழுகையை நிறைவேற்றுவதற்கு மட்டும் நேரமில்லையாம் பாவம், முஸ்லீம்கள்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....
நம்மை படைத்த அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
فَاذْكُرُونِي
أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
என்னை நீங்கள் நினைவு கூருங்கள் ; நானும் உங்களை நினைவு
கூறுகின்றேன் (அல்குர்ஆன் 02
: 152.) என்பதாக
அல்லாஹ் கூறுகிறான்.
எனவே அனுதினமும் அல்லாஹ்வை நினைப்போம். ஐவேளை தவறாமல் அவனை தொழுது அவனது
அன்பையும் அருளைப் பெற்று சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை நமக்கும் நமது
குடும்பத்தார்கள் நமது ஊர் உலக மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புரிவானாக.
ஆமீன்.
எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும்
ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக