வெள்ளி, 3 ஏப்ரல், 2020

இறைவன் ஒருவன் இருக்கின்றான்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா பில் குர்ஆனில் மஜீத். வல் புர்கானில் மஜீத். அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இறைவனே இல்லை என்று கூறிய நாத்திகனுக்கு இமாம் அவர்கள் கூறிய ஒரு செய்தியை பற்றி இங்கு நான் உங்களிடையே பேச வந்துள்ளேன்.

 முன்னொரு காலத்தில் பஃதாத் நகரில் ஒரு நாத்திகன் இருந்தான் அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவன் தினந்தோறும் பொதுமக்கள் கூடும் இடத்தில் இறைவனே இல்லை என்று சொற்பொழிவாற்றுவான். சொற்பொழிவு முடிந்தபின் மக்களை நோக்கி உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று கூறுவான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தற்செயலாக அந்த நாத்திகன் உரை நிகழ்த்தி முடியக்கூடிய நேரத்தில் அங்கு வந்தார்கள். அவனுடைய சவாலை ஏற்று இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணிக்கு இங்கு வந்து விடுகிறேன் இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

மறுநாள் காலை குறித்த நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடி விட்டார்கள் ஆனால் இமாம் அவர்கள் வரவில்லை எல்லோரும் இமாமவர்களின் வருகையை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்கள். நிமிடங்கள் கழிந்து சில மணி நேரங்கள் ஆனது. எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் நாத்திகன் காத்திருந்து காத்திருந்து சடைந்து போய்  தன் வீட்டிற்குச் செல்ல தயாரானான்.

அப்போது திடீரென்று இமாமவர்கள் அங்கு வந்தார்கள் 

பெரியவரே.... உங்களைப் போன்ற கல்விமான்களும் அறிவாளிகளும் சொன்ன சொல் தவறலாமா...

 நீங்கள் சொன்ன நேரத்தில் வர தவறிவிட்டீர்கள் என்பதாக இமாம் அவர்கள் இடத்தில் அந்த நாத்திகன் கேட்டான்.

இமாமவர்கள் நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன் அதைப் பற்றிய சிந்தனையில் நான் சற்று ஆழ்ந்து விட்டேன் அந்தக் கனவில் நான் ஓரிடத்தில் அமர்ந்து இருந்தேன் எனக்கு அருகில் இருந்த ஒரு மரம் திடீரென்று வேரோடு ஆற்றில் சாய்ந்தது பிறகு அதிலிருந்து பல பலகைகள் உருவானது.

பின்பு வந்த பலகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இரண்டு படகாக உருமாறியது அந்த படகுகள் கடலில் பயணம் செய்தது என்பதாக இமாம் அவர்கள் கூறினார்கள் இதைக் கேட்ட நாத்திகன் இதெல்லாம் சுத்த பொய் இப்படி எல்லாம் எந்த ஒரு காரியமும் உலகில் நடக்காது என்பதாக கூறினான்.

இதைக்கேட்ட இமாமவர்கள் நாத்திகனே கொஞ்சம் யோசித்துப் பார்..... நான் கூறிய ஒரு சின்ன நிகழ்ச்சியில் ஒரு படகை தயாரிக்க வேண்டுமென்றால் மரம் வெட்டுபவன் வேண்டும் மரம் அறுப்பவன் வேண்டும் தச்சன் போன்ற பலரும் வேண்டுமெனபதை நீ உணர்கிறாய். 

அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய இந்த உலகத்தைப் படைத்து அதை பராமரிப்பு செய்வதற்கு இறைவன் என்று ஒருவன் தேவை என்பதை நீ உணர வேண்டாமா...? என்பதாக அறிவுரை கூறினார்கள். இதைக் கேட்ட அந்த நாத்திகன் அன்று முதல்  இறை நம்பிக்கை கொண்டவனாக மாறினான் என்பதாக இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய வாழ்க்கையில் வரலாற்றில் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருக்கின்றது.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே

 அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன். 57 : 04.

அல்லாஹ்வின் நல்லடியார்களே.....இவ்வுலகில் நாம் வாழும் போது அல்லாஹ்வை வெறுமனே வணங்கக் கூடியவர்களாக மட்டுமல்லாமல் நம்மை படைத்த இறைவனாம் அல்லாஹ்வை  தெரிந்தவர்களாக அல்லாஹ்வை புரிந்தவர்களாக அவனை நாம் வணங்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஈமானை தான் அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கிறான. இப்படிப்பட்ட ஈமான் தான் எங்கும் என்றும் எப்போதும் நிலைத்திருக்க கூடியதாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஈமான் உள்ளவர்களாக வல்லோன் அல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தினரையும் நமது உலகிலுள்ள மக்கள் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த மதிப்பிற்குரிய ஹழ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

 மேலும் விபரங்களுக்கு.  
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக