வெள்ளி, 17 ஏப்ரல், 2020

நிலவைப் பார்த்து நீங்களும் கற்கலாம்.



நிலவைப் பாடாதவர்கள் இல்லை. நிலவை ஒப்பிடாதவர்கள் இல்லை. உலகம் முழுக்க எல்லோரும் நிலவைப் பற்றிச் சிறப்பித்துப் பேசுகின்றனர். அதன் அழகு பெரும்பாலும் பெண்களுக்கு ஒப்பிடப்படுகிறது.


முழு நிலவு அன்று, மணற்பரப்பில் அமர்ந்து உண்பதும்
உரையாடுவதும், ஏன் காதலர் மடிமீது தலை வைத்துப் படுப்பதும்
தனிச் சுகம் என்பர் இரவு வேளையில் உலகிற்கு ஒளி கொடுக்கும் உயர்வான பணியை அது செய்கின்றது

ஆனால், இவ்வளவு சிறப்புள்ள நிலவுக்கு தன்னொளி உண்டா என்றால் இல்லை! சூரிய ஒளியைப் பெற்று ஒளிர்வதன் மூலமே இவ்வளவு பெருமைகளையும் பெறுகிறது

எனவே, தன்னளவில் மிகுந்த திறமையில்லாதவர்கள்கூட
பிறர் திறமையைச் சிறப்பாகப் பயன்படுத்து வதன்மூலம்
பெருமை பெறலாம்

பில்கேட்ஸிற்கு கம்யூட்டர் பற்றித் தொரியாது. ஆனால்
கம்யூட்டர் பற்றி அதிகம் தெரிந்தவர்களின் திறமையைப்
பயன்படுத்தித்தான், உலகிலேயே முதல்நிலை செல்வந்தராக
உயர்ந்தார். எத்தனையோ சிறந்த அறிவாளிகளின் எழுத்துக்
களைப் பதிப்பித்ததன் மூலம், மொழி பெயர்த்ததன் மூலம்
உயர்வு பெறுகின்றனர் பலர்.

சிறந்த கவிஞர்கள், சிறந்த மேதைகள் எழுதியவற்றை
மேற்கோளாக எடுத்துக் கூறியே பலர் தங்களின் பேச்சை
ஆற்றலுள்ளதாக, ஈர்ப்பு உள்ளதாக ஆக்கிக் கொள்கின்றனர்

பல்வேறு திறனுடைய ஆற்றலாளர்களின் சிறப்பைப்
பயன்படுத்தி, திறமையைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி
பத்திரிகைகள், திரைப்படத் துறையினர் பலர் உச்சத்தை
எட்டுகின்றனர்

எனவே, தங்களிடம் திறமையில்லை என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, மற்றவர்களின் திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கூட நாம் உயரலாம், ஒளிரலாம்

நன்றாகத் தேர்வு எழுதுகின்றவனைப் பார்த்துத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறலாமா? என்று கேட்டுவிடக்கூடாது. திறமையைத் திருடுவது வேறு, பயன்படுத்துவது என்பது வேறு. இந்த வேறுபாடு தெரிந்து புரிந்து பயன்படுத்தி, உயரவேண்டும்



மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக