சனி, 30 ஜூன், 2012

இன்னலைப் போக்கிய இமாம்.



ஹஸ்ரத் ஹாஜி காரி அப்துல் பாரி பாகவி. வேலூர்.   


கணவன் மனைவி இருவர் இருந்தனர். கணவன் மனைவியை மிகவும் நேசித்தான். ஆனால் மனைவிக்கோ கணவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகவே எப்படியேனும் அவனைப் பிரிந்து சென்று விட வேண்டும். என ஆசைப்பட்டாள். தலாக் திருமண விடுதலை செய்து விடு என்று கேட்டாள்…?


கணவன் தலாக் கொடுப்பானா....?  அவன் தான் அவளை நேசிக்கிறானே.? அவளை அவன் கஷ்டப்படுத்துவதில்லை. அவன். தன் அன்பை பலவகையிலும். வெளிப்படுத்தியும் கூட அவள் அறுத்துக் கொண்டு ஓடிவிடவே விரும்பினாள்.


ஓரு நாள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மனைவி என்னவோ கோபமாய்க் கூறினாள். அதற்க்கு பதிலளிக்கும் வகையில் கணவனும் கடிந்துரைத்தான். அவளுக்கு கோபம் வந்தது விட்டது. பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவன் எவ்வளவோ பேசியும் வாய் திறப்பதாயில்லை.


கணவனுக்கு கோபத்தின் அளவு கூடியது. நாளை சுபுஹ் சாதிக் (அதிகாலை) நேரம் வருவதற்க்கு நீ என்னிடம் பேசிவிட வேண்டும். உன் மீது தலாக் நிகழ்ந்து விடும். என்று வெடித்தான். இந்தப் பேச்சினால் விளையவிருக்கும் அவன் அப்போது அறிந்து கொள்ளவில்லை.

கணவனின் இந்தப் பேச்சைக் கேட்ட மனைவி மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள். எந்த விடுதலைக்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாளோ அந்த விடுதலை, நாளை அதிகாலை வரை அவனிடம் பேசாமல் இருந்தால் போதும் அது தானாக கிடைத்துவிடும். என்று கணித்து வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டாள். அவன் வந்த போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி.
நேரம் செல்லச் செல்லக் கணவன் மிரட்ச்சியடைந்தான். விவேகம் இல்லாமல் பேசி விட்டோமே. மனைவியை இழக்க நேர்திடும் போல் இருக்கிறதே என்று கலங்கினான். 


மனைவியைக் காப்பாற்றிக் கொள்ள வழிதேடி ஆலிம்களிடம் ஓடினான். நடந்ததைச் சொல்லி ஏதாவது வழி கூறுங்களேன் என்று வேண்டி நின்றான். அழுது கெஞ்சினான்.

ஆலிம்கள் அனைவரும் கைகளை விரித்துவிட்டார்கள் எப்படியாவது அவளை நாளை அதிகாலை பஜ்ருக்கு பாங்கு சொல்வதற்க்கு முன் பேச வைத்துவிடு. தவறினால்.....நாளை பஜ்ருக்குப் பாங்கு சொல்ல ஆரம்பித்ததும். கூண்டைத் திறந்த்தும் பறக்கும் கிளீ போல் உன் மனைவியும் உன் வீட்டை விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாள் என்றார்கள். 


கையைத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடிரென பெரிய ஹஜ்ரத் இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் நினைவு வந்தது. எதற்க்கும் கடைசி முயற்ச்சியாக அவர்களிடமும் ஓரு பேச்சி கேட்டுப் பார்த்து விடுவோம். என்று முடிவு செய்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி ஓடினான்.


அவனுடைய நல்ல நேரம் ஹஜ்ரத் அவர்கள் வெளியே அமர்ந்திருந்தார்கள். ஓடிச் சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கெஞ்சினான். ஹஜ்ரத்….!    நான் மோசம் போனேன். ஆத்திரத்தில் அறிவிழந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள். என்றான்.



சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த இமாமுல் அஃலம் ரஹ் அவர்கள், பிடிக்காத மனைவியிடம் பிடி கொடுக்காமல்லவா பேச வேண்டும். நீ ஏன் அப்படி பேசினாய் என்று கேட்டுவிட்டு  சரி கவலைப்படாமல் வீட்டிற்க்கு போ. உன் மனைவி மேல் தலாக் நிகழாது. என்றார்கள்.



மகிழ்ச்சியுடன் புறப்பட்ட அம்மனிதன் பாதையில் முன்பு கண்டு பேசிய ஆலிம்கள் சிலரை சந்தித்தான். அவர்கள் இமாமுல் அஃலம் என்ன சொன்னார்கள். என்றுகேட்டார்கள்.  என்ன இருந்தாலும் பெரிய ஹஜ்ரத், பெரிய ஹஜ்ரத் தான். தலாக் ஆகாது எனக் கூறிவிட்டார்கள். என்றான்.

இமாமுல் அஃலம் அறிவித்த முடிவை அறிந்து உலமாக்கள் வியந்தார்கள். சட்டத்தில் சிக்கல் ஏதும் இல்லை. மனைவி பேசாவிட்டால் தலாக் நிகழ்ந்து விடும். பொழுது விடிந்தால் தெரியும் ஹஜ்ரத் அவர்களின் பேச்சி என்று ஆலிம்கள் ஓருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.



அவர் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போல இருக்கே என கவலையடைந்த கணவன். அன்றிரவெல்லாம் எவ்வளவோ முயற்ச்சிகள் செய்துப் பார்த்தான். அவளைப் பேச வைக்க அவனால் முடியவில்லை. அயர்ந்து உறங்கிப் போனான். பாங்கு ஓலி எப்போது கேட்க்கும் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி.


அன்று அதிகாலை சுப்ஹுக்கு அரைமணி நேரம் முந்தி இமாமுல்அஃலம் ரஹ் இல்லத்திலிருந்து எழுந்து அருகிலிருக்கும் மஸ்ஜிதுக்குச் சென்று தஹஜ்ஜுத் தொழுகைக்கான பாங்கை உரத்துக் குரலில் உரைத்தார்கள். வின்னில் விரிந்து வலம் வந்தது பாங்கொலி.


குதித்தெழுந்த மனைவி கணவனை அழைத்து தலாக் ஆகிவிட்டது. நான் உன்னிடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றாள்எக்களிப்புடன்.  அடுத்து சிறிது நேரத்திற்க்குப் பிறகு சுப்ஹு வேளை வந்த பிறகு பஜ்ர் தொழுகைக்கான பாங்கு கூறப்பட்டது.



பஜ்ர் தொழுகை முடிந்தது. கணவன் இமாம்களுக்கு முன் வந்து சோர்தவனாக நின்றான். இமாமவர்கள் என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்கள். பாங்கு சப்தம் கேட்டதும் தலாக் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறினாள் மனைவி என்றான்.



இமாமவர்கள் கேட்டார்கள். இன்று எத்தனை பாங்குகள் ஓலித்தன... இரண்டு அவன் பதில். முதல் பாங்கைக் கேட்டதும் மனைவி உன்னிடம் பேசினாளா...? இரண்டாவது பாங்கு கேட்ட பிறகு பேசினாளா...? இமாம்.  முதல் பாங்குக்குப்  பின் பேசினாள் அவன் பதில். முதல் பாங்கு சுப்ஹு சாதிக் நேரமல்ல தஹஜ்ஜுத் நேரம் அது சுப்ஹு சாதிக்குக்கு முன்பே அவள் உன்னிடம் பேசிவிட்டாள். ஆகவே தலாக் ஆகவில்லை எனக் கூறி அவனை அனுப்பினார்கள் இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ்


இமாமுல் அஃலம் அவர்களின் செயல்பாட்டை அறிந்து ஆலிம்கள் அதிசயித்துப் போனார்கள்.


                            
                           (மஜாலிஸே ஹகீமுல் இஸ்லாம்.)

ஞாயிறு, 24 ஜூன், 2012

ஈமானின் மணம்.





          ஹஸ்ரத் காரி அப்துல் பாரி பாகவி.வேலூர். 


இந்தியாவில் நடந்த ஓர் நிகழ்ச்சி:-  ஓரு அறிஞர் தம் நண்பர் குழுவைக் கண்டார். அவர்கள் ஊரை விட்டு வெகுதூரம் சென்றிருந்திருந்தனர். பசியால் பெரிதும் அவதியுற்றனர். அவர்களுக்கு அறிஞர் ஆலோசனைக் கூறினார்  நண்பர்களே...இங்கு யானைக் குட்டிகள் காணப்படுகின்றன. அவைகளில் எதையும் வேட்டையாடி விடாதீர்கள். யானை எங்கோ சென்றிருக்கிறது, அது திரும்பி வந்தால் உங்களை உயிருடன் விட்டு விடாது. எச்சரிக்கிறேன்.

சனி, 23 ஜூன், 2012

எளிமையும் துறவும்



கேள்வி கேட்க்கப்படாத மூவர்!


ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றுபேர் கேள்விகேட்க்கப்படாத நிலையில் சுவனம் புகுவார்கள். ஓருவர் துவைத்துக்கட்ட மாற்றுத் துணியில்லாதவர். அடுத்தவர். அடுப்பில் வைக்க இரண்டு சட்டியில்லாதவர். மூன்றாமவர்.தாகம் தீர தண்ணீர் இருக்கிறதா எனக் கேட்டு எப்பதிலையும் பெறாதவர்.

வெள்ளி, 22 ஜூன், 2012

எப்படியெல்லாம் பேசக்கூடாது?






இறைவனையும் இறுதி நாளையும் (தான் இறந்த பிறகு இறைவன் தன்னை கேள்வி கேட்பான் என்று) நம்பும் மனிதன்
பேசினால் நல்லதையே பேசட்டும் இல்லையென்றால் வாய் மூடி மெளனமாக இருக்கட்டும் - Prophet Muhammadh(Sal)

புதன், 20 ஜூன், 2012

நல்ல பாடம் தந்தாய் இறைவா....உனக்கு நன்றிகள் கோடி...!



அபூ யஜீதுல் புஸ்தாமி ரஹ் அவர்கள் ஓரு மலைச் சரிவில் அமர்ந்து மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயன்றார்கள். அந்த முயற்சியில் மூழ்கியிருந்த அவர்களுக்கு காற்றும். மழையும். கடுமையான கதிரவனின் கனலும். இருளும். ஓளியும். ஓன்றாகவே தெரிந்தது.  தவத்தின் உச்சகட்டத்தை எட்டிய போது  பசி  அவர்களை அலைகழித்தது. ஓரு நாள் பசியல்ல..... இரண்டு நாள் பசியல்ல...... பதினைந்து நாள் பசியோடு இருந்து தவமியற்றிய அவர்கள் பசியின் தாக்கத்தால் பலமிழந்து சாய்ந்தார்கள்.

செவ்வாய், 19 ஜூன், 2012

பா யஜீத் புஸ்தாம் (ரஹ்)



புஸ்தாம் நகர எல்லையில் மக்கள் கூடி நின்று அவர்களின் திருவருகைக்காக காத்து நின்றார்கள். ஊருக்கு செல்வது என்ற வார்த்தையே இனிக்கும் வார்த்தை. அதிலும் தனக்கு அங்கு வரவேற்ப்புடன் செல்வது என்றால் கேட்க்கவும் வேண்டுமா....?

திங்கள், 18 ஜூன், 2012

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?





மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள்.
இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

வியாழன், 14 ஜூன், 2012

திரும்பிப் பார்......!




الم يجدك يتيما فاوى   ووجدك ضال فهدى ا  ووجدك عايلا
فاغنى  فما اليتيم فلا تقهر  واماالساءل فلا تنهر

மனித வாழ்கை என்பது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட ஓரு பாதையாகும் வாழ்வின் அடிக்கோட்டில் இருப்பவர்கள் எப்போதும் அடிக் கோட்டிலேயே இருப்பதில்லை.ஓரு நேரம் இல்லா விட்டாலும் மற்றொரு நேரம் உயர்நிலையை அடைவார்கள்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

நமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.



1. நபி (ஸல்) அவர்களின் வாப்பா பெயர்.
  அப்துல்லா.


2. நபி(ஸல்) அவர்களின் தாயார் பெயர்.
  ஆமீனா


3. நபி (ஸல்) அவர்களின் வம்சத்தின் பெயர்.
   குரைஷி


4. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தின் பெயர்.
  காசிம்.


5. நபி (ஸல்) அவர்கள் பிறந்த இடம்.
   மக்கா


6. நபி(ஸல்) அவர்கள் இறந்த இடம்
   மதினா.

சனி, 9 ஜூன், 2012

"யாராவது காப்பாத்துங்க.....'

 
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். 
அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

வியாழன், 7 ஜூன், 2012

மனவளம் மிகுந்த வள்ளல்!



தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.

திங்கள், 4 ஜூன், 2012

அவர்கள் எங்கே......நாமெங்கே.....?




முயலை விரட்டும் வேட்டை நாய்கள் போல். விரன்டோடும் அந்த குரைஷிக் காபிர்களில் ஓருவனை தடுத்து நிறுத்தினான் மற்றவன்...எங்கே ஓடுகின்றீர்கள்....?  மக்காவின் எல்லைக்கு...!  ஏன் நீயும் வாயேன் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்தவன் சொல்லி விட்டு மீண்டும் ஓடத் துவங்கினான்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

வேண்டாம் நம் பிள்ளைக்கு





 
சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்! 

வெள்ளி, 1 ஜூன், 2012

சமீபத்தில் படித்து ரசித்தவை..



சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


 
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.
பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!