அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நாங்கள் நபிஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம், நபி (ஸல்)
அவர்கள். இப்போது உங்கள் முன் ஒரு சுவனவாசி வருகை தருவார். என்றார்கள்
அப்போது ஒரு அன்சாரித் தோழர் உலூச் செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.
அப்போது ஒரு அன்சாரித் தோழர் உலூச் செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார், இடக்கரத்தில் செருப்பை பற்றியிருந்தார்.
மறுநாள் நபிஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதால்
அதே மனிதர் கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே
கூறினார்கள். அம் மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து
எழுந்தபோது அம் மனிதரை அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் பின்
தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் நான் என் தந்தையைிடம் வாக்கு வாதம் செய்து, மூன்று நாட்கள்
அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டேன். அந்த மூன்று நாட்கள் வரை
உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா என்று கேட்டார் அதற்கு அந்த அன்சாரித் தோழர்
சரி என பதிலளித்தார்.
அனஸ் (ரலி அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் (ரலி
அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை, ஆனால், தூக்கத்தில்
விழிப்பு ஏற்பட்டு புரண்டுபடுத்தால் அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக்
கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார்
அப்துல்லாஹ் (ரலி அவர்கள் கூறினார்கள் நான் அவர் நன்மையான
விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன், மூன்று இரவுகள்
கடந்த பின் அவரது அமல்கள் மிகக் குறைவானது என நினைத்து அவரிடம் நான் கூறினேன்.
அல்லாஹவின் அடியாரே எனக்கும் என் தந்தைக்குமிடையே கோபமோ, வெறுப்போ
கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக உங்களிடத்தில் சுவனவாசி
ஒருவர் வருகிறார் என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள் தான் வந்தீர்கள் நான்
உங்களது செயல்களை கவனித்து நான் உம்மை பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன் ஆனால் உமது செயல்கள் எதுவும் எனக்கு பெரிதாக தோன்றவில்லையே!
பிறகு எப்படி நபி (ஸல் அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்? என்று கேட்டேன்
அதற்கு அவர் நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார்.
நான் திரும்பிச் செல்ல முயன்ற போது என்னை அழைத்த அவர். நீங்கள் கண்டதைத் தவிர
வேறொன்றுமில்லை என்றாலும் நான் எந்த மனிதனையும் மோசடி செய்ய வேண்டும் என்று
நினைத்ததில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை
கொண்டதில்லை என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி அதனால் தான்
இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள் என்று கூறினார்கள்
சுப்ஹானல்லாஹ், நாயகம் (ஸல்)
அவர்களின் தோழர்களின் வாழ்க்கையில் எத்தனை அற்புதமும், படிப்பினையும், இந்த முன் மாதிரியான
நல்லெண்ணத்தை நாமும் கொள்ள முயற்சிக்க
வேண்டும், அந்த மனிதர் குறைவான வணக்கத்தை கொண்டிருந்தாலும்
பிறர் மனம் புண்படாக வகையில் மனதை செம்மைபடுத்தியதில் கவனம் செலுத்தி சுவனம்
சென்றார்
அல்லாஹ் அந்த மனிதர் மீது கிருபை செய்வானாக
மேலும் விபரங்களுக்கு.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக