ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

நாயகம் கற்று தந்த நாகரீகம்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா பில் குர்ஆனில் மஜீத். வல் புர்கானில் மஜீத். அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக....

நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும். அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும். குறிப்பாக இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

நமது நபி நாயகம் ஸல் அவர்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு  முன்பு அன்றையஅரபியர்களிடம் மூட பழக்கவழக்கங்கள் தான் குடி கொண்டிருந்தன. பெண் சிசுக்களை உயிருடன் புதைத்து வந்தார்கள். நிர்வாணமாக கஃபாவை வலம் வந்தார்கள். இதுபோலவே அவர்களின் எல்லாபேச்சுக்களும் செயல் முறைகளும் நாகரீக மற்றதாகவே இருந்தன.

நாயகம்(ஸல் அவர்கள் தான் அம்மக்களின் உள்ளங்கைளை ஒழுங்குபடுத்தி சரியான தெய்வ நம்பிக்கையும் சீரழிவு எனும் அநாகரீகத்தையும் களைந்து அறிவுப்பாதையில் இழுத்து செல்லும் சீரான நாகரீகத்தை புகுத்தி அம்மக்களையும் சிறப்பாக்கினார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே....

பெருமானார் காட்டித் தந்த நாகரீகத்தால் தான் அந்த அரேபிய மக்கள் உத்தமர்களாக ஆனார்கள். எனவே தான், உலகிற்கு நாகரீகத்தை அறிமுகம் செய்தவர்கள் நபி (ஸல்) அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது
பெருமானார் காட்டித் தந்த நாகரீகங்களில் ஒருசிலவற்றை நான் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

தண்ணீர் அருந்துவதைப் பற்றி நபியவர்கள் நமக்கு மிக அழகிய வழிமுறையை போதித்திருக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் கூறினார்கள்..

தண்ணீர் குடிக்கும் போது நின்ற நிலையில் குடிக்கக்கூடாது.
(அனஸ் (ரலி), புகாரி

தோல் துருத்தியின் வாயில் வாய் வைத்து நின்ற நிலையில் நீர்
அருந்தக் கூடாது. (அபூஹுரைரா (ரலி, புகாரி
ஒட்டகம் குடிப்பதை போல் ஒரே முடக்கில் குடிக்கக் கூடாது என
நபியவர்கள் தண்ணீர் குடிப்பதில் நமக்கு மிக அழகிய வழிமுறைய காட்டித்தந்துள்ளார்கள்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
இன்று இடது கை பழக்கமுடையவர்கள் நாளுக்கு நாள்அதிகமாகி வருகிறார்கள். இது ஒரு அநாகரீகமான செயல் என்றுகூடசொல்லலாம். இடது கை பழக்கத்தால் மனிதனுக்கு சில ஆபத்துக்கள் வருகிறது. கல்விகற்று கொள்வதில் மிகுந்த 'கஷ்டமும் கற்பதற்குரிய அறிவை மழுங்க செய்துவிடும்.
உடல் சதைகளிலும், நரம்புகளிலும், மூட்டுகளிலும், தைராய்டு
சுரப்பிகளிலும் எரிச்சல் வியாதியால் பதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்க அறிஞர் நார்மன் கெஸ்வின் என்பவர் கூறுகிறார்

இப்படிப்பட்ட இடக்கை பழக்கத்தைப் பற்றி நபியவர்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்றால்...
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்... உங்களில் எவரும் தம் இடது கையால் உண்ணவும்,பருகவும் (இன்ன பிற நற்செயல்கள்) செய்ய வேண்டாம். ஏனெனில், தன்இடது கையால், ஷைத்தான் உண்ணவும், பருகவும் செய்கிறான் எனகூறினார்கள். (இப்னு உமர் (ரலி), மிஷ்காத்)

பொதுவாக இடது கை பழக்கத்தால் பல கஷ்டங்கள், தொந்தரவுகள்
வரும். இது அநாகரீக செயலும் கூட மேலும் நபியவர்கள் குளிக்கும் போதும், செருப்பு அணியும் போதும் வலது பாகத்திலிருந்து ஆரம்பியுங்கள்! இவ்வாறு நல்ல செயல்கள் செய்ய ஆரம்பிக்கும் போது வலது கரத்தைகொண்டும் அருவருப்பான செயலை செய்ய ஆரம்பிக்கும் போது இடதுபாகத்தைகொண்டும் ஆரம்பம் செய்யுங்கள் என்றார்கள்
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
இதுமட்டுமல்ல...நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் சுத்தம் செய்யும் போது வலது கையால் செய்வதை தடுத்துள்ளார்கள். (கதாதா (ரலி, புகாரி அது ஓர் அருவெறுப்பான செயல் என்பதால் இவ்வாறு கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சீவுவதிலும் செருப்பு அணிவதிலும், வலது பாகத்தை விரும்புவர்களாக இருந்தார்கள். என்று நம்மால் ஹதீஸ் கிதாபுகளின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகின்றது.
அன்பானவர்களே....இதுமட்டுமல்ல...

சிறுநீர் கழிப்பதில் நமக்கு ஒழுக்கத்தை நபியவர்கள் நமக்கு கற்பித்து தந்துள்ளார்கள்.
நாம் நின்ற வண்ணம் சிறுநீர் கழிக்க கூடாது. இன்றைய காலத்தில் தங்களை நாகரீகமானவர்கள் என்பதாக கூறிக்கொள்ளும் சிலர் நின்ற வண்ணம் சிறுநீர் கழிக்கிறார்கள். இதற்கு தோதுவாக பல இடங்களில் நின்ற வண்ணம் சிறு நீர் கழிக்கும் கழிவறைகளை அரசாங்கமே அமைக்கிறது. நின்ற வண்ணம் சிறுநீர் கழிப்பதால் அந்த சிறுநீர்த்துளிகள் சரீரத்தில் படுகிறது. அப்போது மனிதனுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் வருகின்றது
.
நபி ஸல் அவர்கள் நின்ற வண்ணம் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று கூறி நல்லதொரு வழிமுறையைக் காட்டியுள்ளார்கள்.

எனவே நமது மன்னர் பெருமானார் ஸல் எவ்வழியில் வாழ்ந்து காட்டிச்சென்றார்களோ.... அவ்வழியில் நாமும் வாழ்வதற்கு வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக...
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


தொகுத்தவர்.
A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக