வெள்ளி, 24 ஏப்ரல், 2020

இஸ்லாமிய நற்பண்புகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர் ................................................

நான் இங்கு நாம் பேண வேண்டிய சில ஒழுக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.


உங்களின் பெற்றோரோ அல்லது உங்களின் ஆசிரியரோ உங்களை
அழைத்தால், என்ன வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதை விட்டு விட்டு உடனே அவர்களுக்கு முன்னால் சென்று நிற்க வேண்டும். இவ்வாறு நாம் நடந்து கொண்டால் அவர்களின் துஆவும், நல்லாசியும் நமக்கு கிடைக்கும்.

பெற்றோரின் அழைப்பிற்குப் பதில் உடனே கொடுப்பது பிள்ளையின் கடமையாகும். ஆசிரியர் அழைத்தால் உடனே அவருக்குப் பதில் கூறுவது மாணவரின் கடமையாகும். இன்னும் கணவன் அழைத்தால், உடனே அவர்முன் நிற்பது மனைவியின் தலையாய கடமையாகும்.

ஓரிடத்திற்கு விருந்தினராகச் செல்பவர், அவ்வீட்டிற்குரியவராக தன்னைக் கருதிக்கொண்டு வீட்டினரின் அனுமதி பெறாமலேயே அவர்களின் வேலைகளைச் செய்து, அந்த வீட்டினருக்குச் சங்கடத்தை உண்டாக்கக்கூடாது.

விருந்தாளியாகச் செல்பவர் விருந்தாளியாகவே நடந்துகொள்ள வேண்டும்.

பெண் கர்ப்பமான நிலையிலிருக்கும்போதே பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்ய கூடாது.அல்லாஹ்வின் விதியை அறிந்தவர் எவருமில்லை

பிறருடைய ஏழ்மையை வறுமையை நாம் கேலி செய்யக் கூடாது. ஏனென்றால் அப்படி கேலி செய்தால் அந்த ஏழ்மை நிலையை நம்மை அல்லாஹ் அடையச் செய்வான்.

பிறர் கேட்காமல் வலியச்சென்று நமது அபிப்பிராயமோ அல்லது ஆலோசனையையோ சொல்லக் கூடாது.

எங்கேனும் மஸ்ஜிதைக் கண்டால் சைய்யிதினா முஹம்மதுர்
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மீது ஸலாமும், ஸலவாத்தும் ஓதிக் கொள்ள வேண்டும்

நறுமணம் உபயோகிக்க வேண்டும், அது நமது மனதை உற்சாகமடையச் செய்யும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக