அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி.....
நான் இங்கு நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல் அவர்கள்
கூறிய உபதேசங்களில் சிலவற்றை கூற இங்கு வந்துள்ளேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நமது நபி (ஸல் அவர்கள், தர்மம் செய்வது
ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும் என்று கூறினார்கள். அப்போது (தர்மம் செய்ய பொருள்) எதுவும் இல்லையானால் என்ன செய்வது என்று கேட்கப்பட்டது, அதற்கு நபி (ஸல்
அவர்கள், அவர் தம் கைகளால் உழைத்து தானும் பயனடையட்டும். பிறருக்கும் தர்மம் செய்யட்டும் என்று கூறினார்கள், அவருக்கு உழைக்க
உடலில் தெம்பு இல்லையானால்
என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிஸல் அவர்கள் பாதிக்கப்பட்ட தேவையுள்ளவருக்கு அவர் உதவி
செய்யட்டும் என்று கூறினார்கள். அவர் (முஸ்லிம் அதற்கு சக்தி பெறாவிட்டால் என்ன செய்வது என்று
கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்) அவர்கள் அவர் நல்லதை அல்லது நற்செயலை (செய்யும்படி) பிறருக்கு
ஏவட்டும் என்றார்கள், (இயலாமையால் அவர் அதனையும் செய்யாவிட்டால் என்ன செய்வது
என்று கேட்டதற்கு நபிஸல்) அவர்கள், அவர் பிறருக்கு)
தீங்கு செய்யமால் இருக்கட்டும். அதுவும் தர்மம்தான் என்று கூறினார்கள்
(முஸ்லிம் -)
சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும், மனிதர்கள்
தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்.
இருவருக்கிடையே நீதி செலுத்துவது தர்மமாகும் ஒருவர் தனது வாகனத்தின் மீது ஏறி அமர
உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். நல்லசொல்
பேசுவதும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு
எட்டும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும்
தர்மமேயாகும் (ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி))
ஒரு முஸ்லிம் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத்
தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகும் (ஹழ்ரத்
அபூமஸ்ஊத் (ரலி)
ஒருவரிடம் வாசனைத் திரவியம் (அத்தர்) எடுத்துக் கொள்ளுமாறு
கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம் (புகாரி -)
நிச்சயமாக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெளியிலும், வெளியிலிருந்து
உள்ளேயும் பார்க்கும்படியான மாளிகைகள் இருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியபோது, ஒரு நபித்தோழர் யாரஸுலல்லாஹ் அது யாருக்காக என வினவினார்.
நல்லவிதமாக பேசுபவருக்கும், பிறருக்கு உணவளிப்பவருக்கும், நோன்பு
நோற்பவருக்கும், மக்கள் உறங்கும்போது இரவு நேரத்தில் தொழுதுவருபவருக்கும் என
நபிஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்
உங்களுடன் அவரை அமர வைக்க இயலாவிட்டாலும், அவருக்கு ஒரு
கவளம் உணவு அளிக்கவும் உங்களில் ஒருவருடைய உணவை அவருடைய பணியாள் (சமைத்து கொண்டு
வந்தால் ஏனெனில் அவர் அதனை சமைப்பதற்கு அதன் சூட்டிற்கு ஆளாகி இருக்கிறார் என்று
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி)
எவர் காலை, மாலையில் பத்துமுறை என்மீது ஸ்லவாத சொல்வாரோ, அவருக்கு மறுமைநாளில்
என்னுடைய சிபாரிசு (ஷபாஅத்) கிடைக்கும் (தப்ரானீ)
எனவே நாயகம் ஸல் அவர்கள் எவ்வாறு வாழ்ந்து வழிகாட்டினார்களே...அவ்வழியில்
வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பை பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி.......
மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக