அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
வாழ்வினை தொடங்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
வாழ்நாள் கடக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
வாழ்வில் வளம் கிடைக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
வறுமையில் வாடி துடிக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
நோயின்றி நலமாய் இருக்க அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
நோயுற்று படுக்கையில் இருக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
உலகில் வாழ்ந்து முடிக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
நம்மை நாலுபேர் சுமந்து நடக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
கபுருக்குள் வைத்து அடக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
கேள்விகள் மலக்குகள் கேட்டு பிடிக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
மறுமையில் நாம் இருக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
மஹ்ஸரில் மயங்கி தவிக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
மீசானில் அமல்களை நிறுக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
சிராத்துல் முஸ்தகிம் பாலம் கடக்கும் போதும் அல்லாஹ்வின் உதவி வேண்டும்.
என் ரப்பே உன்னையன்றி எனக்கு உதவுபவர் யாரும் இல்லை.
என்றும் எனக்கு உன் உதவி வேண்டும். யாஅல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
மேலும் விபரங்களுக்கு.
காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக