கத்தரிக்காய், காய்களில்
மிகவும் வித்தியாசமானது மலிவு என்று சொன்னாலும் அதன் பயன்பாடு மிகவும் அதிகம் பெரும்பாலான மக்களால் அதிகம் உண்ணப்படுகிறது.
இதன் பெருமை என்னவென்றால், அது எல்லாச் சமையலிலும் இருக்கும். எல்லாவற்றிற்கும் ஒத்துப்
போகும் வெட்டிப்போட்டால்
சாம்பார் வைக்கலாம். வெட்டியதைக் காய வைத்தால் வற்றல் குழம்பும் வைக்கலாம். வேக வைத்துத் தோல் நீக்கினால் கொஸ்த்து செய்யலாம் கருவாடோடுச் சேர்ந்தால் அச்சுவையே தனி!
கத்தரிக்காய் கருவாடு பொருத்தம் உலகப் பிரசித்தம். சாப்பிட்டுப்
பார்த்தவர்களுக்குத் தான் அதன் சுவை தெரியும். நீள வாட்டில் அரிந்து, எண்ணெயில் போட்டால், 'பஜ்ஜி. பொடியாக அரிந்து பருப்புடன் போட்டு கூட்டு வேகவைத்தால் கூட்டு பெரிதாக அரிந்து பொரித்தால் பொரியல். இப்படி பொரியல், சாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு பஜ்ஜி, கொஸ்த்து
கருவாட்டுக் குழம்பு, காரக்குழம்பு என்றும்சைவம் அசைவம் என்றும் சகலத்திலும்
நிற்கும்.
அதேபோல்தான் மின்சாரம். விளக்கு எரிக்க, அடுப்பு எரிக்க, இஸ்திரிபோட, மோட்டார் இயக்க, காற்றாடி சுழற்ற மணியடிக்க, தொடர்வண்டி ஓட, கம்ப்யூட்டர், டி.வி டெக் என்று அனைத்திற்கும் பயன்படுகிறது.
சம்சாரம் இல்லாமல் இருக்கலாம் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத் தேவைகள். இவ்வாறு கத்தரிக்காயும் மின்சாரமும் எப்படி பலவற்றிற்கும் பயன்படுகிறதோ அதேபோல மனிதர்கள் பயன்பட வேண்டும். அப்படிப் பயன்பட்டால், அவர்களுக்கான
தேவை கூடும். அதன்வழி அவர்களின்
மதிப்பும் கூடும் அரசியலில் பலர்
இருந்தாலும், கலைஞருக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு அதுதான் காரணம்.
இயக்குநர் பாக்கியராஜ்
அவர்கள்கூட இதற்கு நல்ல எடுத்துக்காட்டு இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, பத்திரிக்கையாளர், அரசியல் பேச்சாளர்.
ரூபாய் நோட்டு எத்தனை பேரிடம் போகிறதோ அந்த அளவிற்கு அதற்குப் பயன் பாடும் மதிப்பும் கூடும்.
அதேபோல் ஒருமனிதர் எவ்வளவு பயன்படுகிறார் என்பதைப் பொறுத்தே
அவரின் மதிப்பு. எனவே, நம்மை பலவகைப் பயன்பாட்டிற்கும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் நம்மைப் பார்த்து கத்தரிக்காய் சிரிக்கும்
( மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய
சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும்
மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.)
மேலும் விபரங்களுக்கு.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக