வெள்ளி, 17 ஏப்ரல், 2020

நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இறை வழியில் நடந்திட
கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள மனைவி அனைத்தையும் விட சிறந்த செல்வமாகும்.
(திர்மிதி) -


நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எவர் பேணுதலாகப் பாவமன்னிப்புத் தேடுவாரோ, அவருக்கு அல்லாஹ் ஒவ்வொரு சிரமத்திலிருந்தும் வெளியாகும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறான். அனைத்துக் கவலைகளிலிருந்தும் ஈடற்றம் அளிக்கிறான் (அபூதாவூத்)


நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஈமானுடையவர் தன் நற்குணத்தால், பகலெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்கக்கூடியவரின் பதவியை அடைந்து விடுவார்  (அபூதாவூத்.)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். முஃமினுடைய அமல்களை எடைபோடும் தராசில் நற்குணத்தைவிட அதிக பாரமான சேயல்கள் வேறு எதுவுமிருக்காது. (திர்மீதி -)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மிக்க மென்மையான சுபாவமும், நளினமான இயல்பும் கொண்ட ஒவ்வொருவரையும் நரக நெருப்புத் தீண்டுவது ஹராமாக்கப்படும்    (அபூதாவூத்)


 நபி ஸல் அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்களில் அறிமுகமானவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது கியாமத் நாளின் அடயாளங்களில் ஒன்றாகும் (முஸ்னத் அஹ்மத்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஏந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினானவருக்கு பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ. அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்கு கண்ணியம் கூறுவது என்னும் ஆடையை அணிவிப்பான்


நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எவர் லுஹாத் தொழுகையை நிரந்தரமாக தொழுது வருவாரோ, அவரின்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அப்பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் சரியே (இப்னுமாஜா-)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இன்பங்களை முறிக்கும் மரணத்தை மிகவும் அதிகமாக நினைவு கொள்ளுங்கள். ஏனெனில் நான் வெருட்சியின் வீடு: நான் தனிமையின் வீடு : நான் மண் வீடு : நான் புழு பூச்சிகளின் வீடு என்று ஒவ்வொரு நாளும் மண்ணறை கூறிக் கொண்டே இருக்கிறது (திர்மிதி.)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருளை அதற்கு உரியவரிடம் எவர் திருப்பி ஒப்படைக்கவில்லையோ, அவர் பூரண ஈமான் இல்லாதவர். (தப்ரானீ -)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எவர் தொழுகை வரிசையிலுள்ள காலியிடத்தை (முந்திச் சென்று) நிரப்புகிறாரோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது (-பஸ்ஸார்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மனிதன் யாரை நேசிக்கிறானோ அவருடன்தான் மறுமையில் இருப்பார். , அவரது தோழமைதான் கிடைக்கும் (முஸ்லிம்).

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். பசித்தவருக்கு வயிறு நிரம்ப உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும் ( மிஷ்காத்)


நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மக்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது (திர்மீதி -)


அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக