செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு....

எனது பெயர்............... நான் இங்கு மஸ்ஜிதில் பள்ளிவாசலில் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கூற வந்துள்ளேன்.

மஸ்ஜித் என்பது அல்லாஹ்வை வணங்கக்கூடிய ஒரு புனிதமான இடமாகும்

1. மஸ்ஜித் மனிதர்கள் மற்றும் மலக்குகளும், ஸாலிஹான ஜின்களும் வணங்குவதற்குரிய இடம். ஆகவே, மஸ்ஜிதில் சில ஒழுக்கங்கள் பேணப்பட வேண்டும்

3.மஸ்ஜிதை எங்கேனும் கண்டால் ஹழ்ரத் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மீது ஸலாமும், ஸலவாத்தும் ஓத வேண்டும்

4. இபாதத் செய்வதற்கு மட்டுமே அங்கே உள்ள தண்ணீர் கழிவறை பயன்படுத்த அனுமதியே தவிர, பொதுவாக பயன்படுத்தக்கூடாது.

ஏனென்றால், மஸ்ஜித் மற்றும் மஸ்ஜித் சம்பந்தப்பட்ட பொருட்களும் பத்துல்மால் ஆகும். வக்பு செய்யப்பட்ட பொருட்களை வீண் விரயம் செய்வது கூடாது

5. மஸ்ஜிதில் வலது காலை வைத்து நுழைய வேண்டும்.
மஸ்ஜிதில் நுழையும்போது ஓதும் துஆ

அல்லாஹும் மப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக்க

பொருள் : அல்லாஹ்வே உனது கிருபையின் வாசல்களை
எனக்கு திறந்து விடுவாயாக.)

6. மஸ்ஜிதில் சிரிப்பதோ, சப்தமிட்டு பேசுவதோ அல்லது உலக
விஷயங்கள் பேசுவதோ கூடாது

7.மஸ்ஜிதினுள் தலை சீவுவதோ, நகம் பிய்த்து போடுவதோ
கூடாது

8.மஸ்ஜிதில் தொழக்கூடியவர்கள் முன்பு மற்றவர்கள் குறுக்கே
நடந்து செல்ல கூடாது

9.தொழுது கொண்டிருக்கும்போது குறுக்கே செல்லக் கூடாது

10.மஸ்ஜிதில் காற்று பிரியச் செய்தல் கூடாது

11மஸ்ஜிதில் சப்தம் வரும்படியாக அதிர்ந்து நடக்கவோ, ஓடவோ கூடாது.

12. மஸ்ஜிதில் எச்சில் துப்புதல் கூடாது

13. மஸ்ஜிதில் உள்பள்ளியில் தூங்கக்கூடாது

14. மஸ்ஜித் இறைவனின் இல்லம் என்ற பயத்துடனே நடந்துகொள்ள வேண்டும்

15. மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது முதலில் இடது காலை
முன்வைத்து வெளியே வரவேண்டும். இந்த துஆவை ஓத வேண்டும்

அல்லாஹம்ம இன்னி அஸ்அலுக்க மின் பழ்ளிக்க வரஹ்மதிக்க

(யா அல்லாஹ் உன்னுடைய கருணையையும், கிருபையையும்
உன்னிடம் கேட்கிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக