முஸாபஹா என்பதற்கு உள்ளங்கையுடன் உள்ளங்கையை நேருக்கு நேர் நின்று சேர்ப்பது என்பது
பொருள்
இவ்வாறு கூறுவதிலிருந்து வெறும் விரல்களைப் பிடிப்பது என்பது முஸாபஹா அல்ல என்பது தெரியவருகிறது. ஆனால் 'ராபிளாக்கள்' என்ற
கூட்டத்தார் மட்டும் இதற்கு விலக்காக நடக்கின்றனர். (அவர்கள் சுன்னத்
வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களல்ல. ஷாமீ
(பக் 376 வால்யூம்-5)
முஸாபஹாவின் சிறப்பு
ஹள்ரத் பாராஃஇப்னு ஆஜிப் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் இரண்டு முஸ்லிம்கள்
சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள்
பிரியும் முன்னரே அவ்விருவருக்கும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்று
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்"
இன்னொரு ஹதீதை ஹள்ரத் ஹதைபா (ரளி) அவர்கள் அறிவிக்
கிறார்கள் எப்போது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமோடு சந்தித்து சலாம் சொல்லி, முஸாபஹா செய்வாரோ
அப்போது மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல அவரின் பாவங்கள் உதிர்ந்து விடும். ஜம்உல்பவாயித்
இந்த ஹதீதுகளின் அந்தரங்க இரகசியம் என்னவெனில், இரண்டு
முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பிரியத்தையும் அன்பையும் காட்டுவது, இன்னும்
இறைவனை திக்ரு செய்வது, இறைவனின் மகிழ்ச்சியைத்
தூண்டும் செயலாகும்.
எனவே இறைவன் பிழைகளைப் - பொறுக்கவும் அருள் புரியவும் செய்கின்றான்
முதலில் முஸாபஹா செய்வதன் நன்மை.
ஹள்ரத் அபூஹுரைராவின் வாயிலாக அறிவிக்கப்படுகிறது இரண்டு முஸ்லிம்கள்
சந்தித்து இருவரும் 'முஸாபஹா
செய்து ஒருவர் மற்றவரின் நிலை பற்றி நலம் பற்றி விசாரித்துக் கொள்வார்களாயின்
இறைவன் அவ்விருவருக்கும் மத்தியில் நூறு ரஹ்மததுடைய திரைகளை இறக்கியருள்கிறான்.
அவைகளில் 99 திரைகள் யார்
அதிகமான அன்பை வெளிக்காட்டுவாரோ, முகமலர்ச்சியுடன் அளவளாவுவாரோ அவருக்கும், ஒரு திரை மற்றவருக்கும் சொந்தமாகும்" ஐம்உல்
பவாயிதி
ஹள்ரத் ஹகீம் தீர்மதீ (ரஹ் அவர்களும், ஹள்ரத் உமர் (ரளி)
அவர்கள் மூலமாக இக்கருத்தை ஒட்டிய ஒரு அறிவிப்பை விடுக்கின்றனர். அவர்கள்
அறிவிக்கும் ஹதீதில் '90 ரஹ்மத்துகள்
முதலில் முஸாபஹாவுக்கு முந்துபவருக்கும் ரஹ்மத்துக்கள் மற்றவருக்கும் என்பதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸாபஹாவின் சரியான முறை.
சந்தித்த உடன் ஸலாம் சொல்ல வேண்டும். பின் இரண்டு கைகளாலும் முஸாபஹா செய்ய
வேண்டும் முஸாபஹா செய்யும்போது ஒரு கையில் ஏதேனும் பொருள் இருப்பின் பிரிதொரு
கையினால் முஸாபஹா செய்தால் போதும். 'முஸாபஹா' செய்யும்
போது இரு உள்ளங்கைகளாலும் செய்ய வேண்டும்.
வெறும் விரல்களை மட்டும் பிடிப்பது கூடாது. முஸாபஹா செய்யும் போது பெருவிரலைப்
பிடித்துச் செய்யவும் வேண்டும். அதில் ஒரு நரம்பு இருக்கிறது. அதைப்
பிடிக்கப்படும் போது அன்பு அதிகரிக்கும். பிடிக்கப்படும் கை களுக்கு மத்தியில்
துணி போன்ற திரைகளும் இருக்கக் கூடாது, கையை லேசாக குலுக்கவும் வேண்டும்.
இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் பாபுல் முஸாபஹா பாபுல் அக்து
பில் யதி, என்ற
பாடங்களில் பின் வரும் ஹதீதுகளை வரைந்துள்ளனர் நாயகம் (ஸல் அவர்கள் என் உள்ளங்கை அவர்களுடைய இரு உள்ளங்கைகளுக்கு
மத்தியில் சிறையுண்டு இருக்கும் நிலையில் எனக்கு தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்தார்கள்
என்பதாக இப்னு மஸ்ஊத் (ரளி ஹள்ரத் அவர்கள்
அறிவிக்கிறார்கள் பக்: 926 வா - 2
இதே பாடத்தில் "ஹம்மா துப்னு ஜைத் அவர்கள் அப்துல் லாஹிப்னு முபாரக்
அவர்களுடன் இரு கரங்களையும் பிடித்து முஸாபஹா செய்திருக்கிறார்கள்" என்ற
செய்தியையும் இமாம் புஹாரி' அவர்கள்
வரைந்துள்ளனர்.
நாயகம் (ஸல்) அவர்கள் ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்களிடம் இரண்டு கைகளாலும்
'முஸாபஹா' செய்துள்ளனர்
என்று கூறுவதிலிருந்து ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்களும், இரண்டு கைகளாலும்
தான் முஸாபஹா செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. நாயகம் (ஸல்) அவர்கள் இருகரங்களாலும்
முஸாபஹா செய்திருக்க அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர் ஒரு கையால் தான் முஸாபஹா செய்வார்
என்று கூறுவது அறிவக்கு அப்பாற்பட்ட விஷயம். அப்படியே செய்தார் என்று கூறினால், நாம் எஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதே கடமை அவரையல்ல என்று
கூறி விடுவோம். எனவே தான் நம் மார்க்கச் சட்ட. வல்லுநர்கள், 'இரு கைகளாலும்
முஸாபஹா செய்வுதே ஸுன்னத் என்று கூறினார்கள்.
ஸுன்னத் இரண்டு கைகளாலும் முஸாபஹா செய்வதுதான். துணி அல்லது அது போல ஏதோ ஒரு
பொருள் இரண்டு கைகளுக்கு இடையில் இருப்பதும் கூடாது. சந்தித்து ஸலாம் கூறிய பிறகே முஸாபஹா செய்ய வேண்டும். பெரு விரலைப் பிடிப்பதும் அவசியம். ஏனெனில் அதில் உள்ள
ஒரு நரம்பு அன்பை அதிகரிக்கச் செய்ய வல்லது” என்று கஹஸ்தானி என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ளது (துர்ரு)
ஈத் மற்றும் இதர தொழுகைகளுக்குப் பிறகு முஸாபஹா செய்யலாமா..?
சந்திக்கும் போது முஸாபஹா செய்வது
மட்டும் தான், சுன்னத் ஈத் தொழுகைக்குப்பின், அல்லது பஜ்ரு, அஸர்
தொழுகைகளுக்குப் பின் செய்யப்படும் முஸாபஹாக்களுக்கு ஆதாரம் கிடையாது.
ஏனெனில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதை சுன்னத் என்று நினைப்பதும் 'பித்அத் ஆகும்.
மார்க்க மேதைகள் அதைத் தடுத்துள்ளனர்.
தப்ஈனுல் மஹாரியம்' என்ற ஹனபி
மத்ஹபின் சட்ட விளக்க
சிதாபில் எழுதப்பட்டுள்ளதாவது.
"எந்த
நிலையிலும், தொழுகையை
நிறைவேற்றிய பின் முஸாபஹா
செய்வது 'மக்ரூஹ் ஆகும்.
ஏனெனில் ஸஹாபாப் பெருந்தகைகள் தொழுகைகளை நிறைவு செய்த பின் முஸாபஹா செய்ததில்லை
என்பதோடு அது 'ராபிளா என்ற வழி
தவறிய பழக்கமும் ஆகும்
கூட்டத்தாரின் மேலும் ஷாபி இய்யாக்களின் நிலையை இப்னுஹஜர் அவர்களின் வாயிலாக
அறிவிக்கப்படுகிறது.
இப்படி முஸாபஹா செய்வது பித் அத்தும் மக்ரூஹுமாகும் சட்டத்தில் அதற்கு எந்த
ஆதாரமும் கிடையாது. அவ்வாறு செய்யக் கூடியவர்களை முதலில் செய்தால் எச்சரிக்கவும், மறுபடியும் செய்தால் கண்டிக்கவும்
வேண்டும்.
மாலிக்' மத்ஹபின்படி
இப்னுல் ஹாஜ் அவர்கள் 'மத்ஹல் என்ற
கிதாபில் கூறும்போது தொழுகைகளுக்குப் பின்னர் "முஸாபஹா" செய்வது. பித்அத்
ஆகும்.
மார்க்கத்தில் முஸாபஹா செய்வதற்குண்டான தகுதியான சமயம் சந்திப்பின் சமயம்தான் தொழுகைகளுக்குப்
பின்னால் அல்ல.
மார்க்கம் எதை எங்கு இருக்க வைத்திருந்ததோ அதை அங்குதான்,
வைக்க வேண்டும் (மாற்ற உரிமையில்லை. எனவே தொழுகைகளுக்குப் பின்னால் முஸாபஹா
செய்வதைத் தடுக்கப்படும். அவ்வாறு செய்வது கண்டிக்கப்படும். ஏனெனில் அது சுன்னத்துக்கு மாறானாதாகும் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்
(ரத்து-பக். 376 வா-5)
பெண்கள் சிறுவர்களுடன் முஸாபஹா செய்யலாமா...?
வாலிபப் பெண், அழகிய சிறுவர்களுடன்
முஸாபஹா செய்வது கூடாது. பொதுவான சட்டம் என்னவெனில், எந்தப் பெண்ணை முத்தமிடுவது
கூடாதோ அந்தப் பெண்ணுடன் முஸாபஹா செய்வது
கூடாது என்பது தான்.
கையை முத்தமிடுவது எப்படி..?
பேணுதலுள்ள ஆலிம், நீதியுள்ள
அரசன் இவர்களின் கரங்களை முத்தமிடலாம், கூடும். எனினும் தலையில்
முத்தமிடுவதுதான் சிறந்தது. இது தவிர மற்ற பொதுமக்களிடம் இப்படிச் செய்யக்கூடாது.
முஹீத் என்ற கிதாபின் ஆசிரியர் (ஸாஹிபுல் முஹீதி கூறுகிறார்
கையை முத்தமிடுதல் என்பது கண்ணியம்
கொடுக்கக் கருதினால்
மட்டுமே கூடும். வேறு எந்த நோக்கத்தையும் முன் வைத்துச் செய்யக் கூடாது. (துர்ரு)
ஆலிம் அல்லதுஅரசனது கையை முத்தமிடும் போது
அவர்களுக்கு வெறுப்படைந்து விடும்படி
நேரிடாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும்
ஹஜ்ரத் இபுனுஉமர் (ரலி) அவர்கள்
குறிப்பிடுவதாவது நாயகம் (ஸல்)
அவர்கள் எப்போதேனும் யாருக்காவது பிரிந்து செல்ல அனுமதியளித்தால், அவருடைய
கையைப் பிடித்துக் கொள்வார்கள். அம்மனிதர் தானாகக் கையை விடுவித்துக் கொண்டாலன்றி இவர்கள் கையை விட மாட்டார்கள்.
ரஸுலுல்லாஹி (ஸல்) உடைய தோழர்கள்
பிரியும்போது முஸாபஹா செய்து
கொள்வார்கள். இறைவனைப் புகழ்வதுடன்
அது சமயம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளவும். செய்வார்கள்.
மௌலானா ஸயீத் அஹ்மத் ஹழ்ரத் அவர்கள். ஸஹரான்பூர்.
குர்ஆனின் குரல் 2007.ம் வருட செப்டம்பர் மாத இதழிலிருந்து...
மேலும் விபரங்களுக்கு.
காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக