வியாழன், 30 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர்........................................

நான் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உபதேசம் செய்ய வேண்டிய உபதேசங்களைக் கூற வந்துள்ளேன்.


ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் இப்படி கூற வேண்டும்.

அன்பான குழந்தைகளே......

நாம் முஸ்லிம்கள் அதாவது இறைவனின் அடிமைகள். இறைவனின்
கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள். இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டியவர்கள்.

அதனால், நாம் எப்போதும் தீயச் செயல்களை செய்யக் கூடாது
தீயவர்களுடன் சேரவும் கூடாது

நாம் எப்போதும் நல்லவற்றையே செய்ய வேண்டும். நன்மைகளை செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்

நாம் எந்த செயலைத் தொடங்கினாலும், 'பிஸ்மில்லாஹ்' என்று
சொல்லியே தொடங்க வேண்டும்

உண்ணும்போது, தண்ணீர் அருந்தும்போது, எழும்பும்போது, படிக்கும்
போது, விளையாடும்போது இப்படி எந்த வேலையாக இருந்தாலும் சரியே நாம் 'பிஸ்மில்லாஹ்' என்று இறைவனின் திருப்பெயரைத் துதித்தே தொடங்க வேண்டும். இது, நாம் எப்போதும் இறைவனின் கருணையை, அருளை நினைவுகூர்வதாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைச் சந்திக்கும்போது, 'அஸ்ஸலாமு அலைக்கும்' அதாவது உங்கள்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று வாழ்த்து (சலாம்) சொல்ல வேண்டும்

சலாமுக்குப் பதிலாக. வ அலைக்குமுஸ் ஸலாம்' உங்கள்மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! என்று பதில் வாழ்த்து சொல்ல வேண்டும்

தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ளவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும்

மஸ்ஜிதுக்கு போகும்போது... அங்கும் எல்லோருக்கும் சலாம் சொல்ல வேண்டும்

பள்ளிக்கூடத்துக்கு சென்றால் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் சலாம் சொல்ல வேண்டும்

என் அன்பு குழந்தைகளே

சலாம் சொல்ல நாம் எப்போதும் மறக்கவே கூடாது

எதைச் செய்ய நினைத்தாலும் "இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்" என்று சொல்ல வேண்டும்

யாரையாவது புகழ வேண்டுமானால். ."சுப்ஹானல்லாஹ் -இறைவன் மட்டுமே குறைகள் இல்லாத தூயவன்என்று போற்ற வேண்டும்.

எதைப் பாராட்டினாலும், "மாஷா அல்லாஹ் இறைவனின் விருப்பப்படியேஎன்று பாராட்ட வேண்டும்

ஒருவரைச் சந்தித்து விடைபெறும்போது, "ஃபீ அமானில்லாஹ் இறைவனின் பாதுகாப்பில்என்று சொல்ல வேண்டும்

யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமென்றால். "ஜஸாக்கல்லாஹு கைரா கஸீரா - இறைவன் உங்களுக்கு அதிகமான நன்மை அளிப்பானாக! என்று சொல்ல வேண்டும்

ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும்போது, "தவக்கல்த்து அலல்லாஹ் நான் இறைவனையே சார்ந்திருக்கிறேன்என்று சொல்ல வேண்டும்

காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, "லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று சொல்ல வேண்டும்

தும்மும்போதும், "அல்ஹம்து லில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கேஎன்று சொல்ல வேண்டும்

தும்மியவர் 'அல்ஹம்து லில்லாஹ்' சொன்னால், அதைக் கேட்டவர் 
யர்ஹமுக்கல்லாஹ் - இறைவன் உமக்கு அருள் புரிவானாக" என்று பதிலளிக்க வேண்டும்

வலியோ வேதனையோ ஏற்பட்டால், "யா அல்லாஹ்! - இறைவா என்று முறையிட வேண்டும்.

இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது, "அஸ்தக்ஃபிருல்லாஹ் (இறைவா) நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்என்று கேட்க வேண்டும்

இறைவனுக்குப் பிடிக்காத விஷயங்களைக் கேட்டால்.."நஊது பில்லாஹ் - நான் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்" என்று உடனே சொல்ல வேண்டும்

துன்பங்களும் துயரங்களும் ஏற்படும்போது, "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நாம் இறைவனுக்கே உரியவர்கள் அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள்" என்று கூற வேண்டும்

இவவுலகில் நாம் வாழும் காலமெலலாம் அலலாஹ்வை மறககாதவர்களாக அவனது அன்பையும் பொருத்ததையும் தேடியவர்களாக வாழும் நலலோர்களில் ஒருவராக நமமையும் நமது குடும்பததினர்களையும் அலலாஹ் ஆககியருள் புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளிதத ஹஸ்ரத் அவர்களுககும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைககும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக