சனி, 18 ஏப்ரல், 2020

இப்படியும் ஒரு காலம் வரும்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.....

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தனக்கு பின்னால் வரக்கூடிய காலம், அக்காலத்தின் மக்களின் நிலை இவைகளை தெளிவாக தன் தோழர்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளார்கள்.


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர் மீது, வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத்

மக்கள் காலத்தை சந்திப்பார்கள். அக்காலத்தில் மனிதன் தன்னுடைய சம்பாத்தியம் ஹலாலா...? ஹராமா....என்பதை பொருட்படுத்த மாட்டான் என நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்    (நூல் : புஹாரி)

ஹஸன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : "ஜனங்கள் மீது ஒரு காலம் வரும், அப்போது அவர்களுடைய உலகக்காரியங்கள் சம்பந்தமான பேச்சுக்கள் மஸ்ஜிதுகளில் நிகழும் ஆகையால் அப்படிபட்டவர்களுடன் நீங்கள் சேர்ந்து உட்கார வேண்டாம்'

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் உம்மத்தினர்கள் ஒரு காலத்தைச் சந்திப்பார்கள், அக்காலத்தில் ஐந்து விஷயங்கள் சர்வ சாதாரணமாக நிகழும்.

1. வட்டிப்பொருட்களை உண்பது

2. விபச்சாரம் புரிவது

3. கொடுக்கல் வாங்கலில் பொய் சத்தியம் செய்வது

4. அளவை நிறுவைகளில் குறைப்பது

5. அல்லாஹ்வின் கட்டளைகளை அலட்சியம் செய்வது.

இந்த ஐந்து விஷயங்களும் நிறைந்திருக்குமேயானால் அக்காலத்தில் மக்களுக்கிடையே பற்பல வியாதிகளும் சண்டை சச்சரவுகளும் பித்னா பஸாதுகளும் உருவாகும்.

தொடர்ந்து கூறினார்கள். பின்னால் ஒரு காலம் வரும், அக்காலத்தில்
மக்கள் ஐந்து விஷயங்களை மறந்து விடுவார்கள்

1. உயிருடன் இருப்பதை பிரியப்படுவார்கள். இறந்த விடுவோம் என்பதை மறந்து விடுவார்கள்.

2. சொத்து சுகங்களைதேடுவதில் ஆர்வம் கொள்வார்கள் அவைகளைப் பற்றி கேள்வி கணக்கு கேட்கப்படும் என்பதை மறந்து விடுவார்கள்.

3. வீடுகளை மாளிகையைப் போன்று உயர்த்திக்கட்டுவார்கள் மண்ணறையை மறந்து விடுவார்கள்.

4. உலகத்தை விரும்புவார்கள். மறுமையை மறந்து விடுவார்கள்

5. படைத்தவனை மறந்திருப்பார்கள் படைக்கப்பட்ட பொருள்களின் இன்பங்களில் மூழ்கியிருப்பார்கள். என்று கூறினார்கள்.

அண்ணலார் அறிவித்த காலம் நமது காலம் தான் என்பதை இக்காலத்தில் மக்களின் நடைமுறைகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனுக்கு வழிபட்டு நடக்க கூடிய மக்களக ஆக்கிருள் புரிவானாக.


எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.


மேலும் விபரங்களுக்கு.

காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக