விலை உயர்ந்த வாகனமாக இருந்தாலும், அழகும் கலையும், கவர்ச்சியும்
மிக்கதாக அமைக்கப்பட்டிருந்தாலும், அச்சுக்கும்
சக்கரத்திற்கும் நடுவில் 'பசை' (கிரீஸ்) போடவில்லையென்றால், எவ்வளவு விலை
உயர்ந்த அச்சாக இருந்தாலும்
சக்கரமாக இருந்தாலும் எளிதில் சுழலாது. வண்டி விரைவாய் நகராது. இரைச்சல்கேட்கும். இழையும் தேயும்.
ஆனால், மிக மலிவான உயவுப்பசையை (கிரீஸை) சிறிது தடவிய பின் வண்டியைச் செலுத்தினால், எவ்வித இரைச் சலும் இன்றி சக்கரம் எளிதில் சுழலும். விரைவாய் சுழலும் வாகனமும் விரைவாய்ச் செல்லும்
அதேபோலத்தான் வாழ்க்கையென்ற வண்டியும், நம் வாழ்வில் மற்றவர்களோடு பழகும்போது, போசும்போது உயவு' வார்த்தைகள் 'உயவு'ச் செயல்கள்
அவசியம்
நாம் எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர்களாக அதிகாரம்மிக்கவர்களாக, செல்வம் மிக்கவர்களாக
இருந்தாலும், பிறருடன் பழகும் போது 'அன்பு 'இனிமை' என்ற உயவுகளைப் (பசையை) பயன்படுத்த வில்லை யன்றால், வாழ்க்கைப் பயணம்
எளிமையாகவும் இனிமை யாகவும் இருக்காது மாறாக, பிரச்சனையும், சிக்கலும்
நிறைந்ததாய் ஆகும்.
நன்றி” "வணக்கம்" "மன்னிக்கவும்"
"தயவுசெய்து அன்புடன் கேட்கிறேன்" போன்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தும்போது, நம் வாழ்க்கைப்
பயணம் எளிதாய், இனிமையாய், பிரச்சனையற்றதாய், சிக்கல்
இல்லாததாய் அமையும்.
இந்த வார்த்தைகள் மிக எளிமையானவை. இவற்றிற்காக நாம் செலவு
செய்ய வேண்டியதும் இல்லை! சிரமப்படத் தேவையும் இல்லை. ஆனால் அவற்றினால் நாம்
அடையும் பயன் மிகமிக அதிகம். பசையானது எப்படி சக்கரத்தையும் பாதுகாத்து, அச்சையும்
பாதுகாத்து எளிமை யாய் வண்டி செல்ல உதவுகிறதோ, அதேபோல், இந்த வார்த்தைகள்
நமக்கு பாதுகாப்பையும், சுகத்தையும் அளிக்கும் நம்மோடு இருப்பவர்களுக்கும்
சுகமளிக்கும். இரு தரப்பிற்கும் பாதிப்பைத தடுக்கும். தவிர்க்கும். எதிரியின்
மிகப்பெரிய கோபத்தை கூட "மன்னிக்கவும்" என்ற ஒரு வார்த்தை தணித்து, சுமூ நிலையையும், பாதுகாப்பையும்
கொடுக்கும், பாதிப்பை தடுக்கும்
மதிப்பிற்குரிய மஞ்சை
வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம்
பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக்
கொள்ளவும்.
மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக