புதன், 29 ஏப்ரல், 2020

ஓட்டைப் பானை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத்.

எனது பெயர்......................................................

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

விலைகள் உயர்ந்தது விட்டன.
பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்
மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.

அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன.
திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள்.
முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள்.
விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது.
திருமணம் முடிப்பது கஷ்டமான ஒன்றாக மாறி விட்டது.
பெண்கள்  ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.
முஸ்லிம்களுடைய பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. 
ஏழைகள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது. எனவே துரிதமாக நாம் தௌபா செய்து கொள்ள வேண்டும்.

ஓட்டைப் பானையில் தண்ணீரை நிரப்புவது எவ்வளவு முட்டாள்தனமோ..... அது போல் தான் இன்று நாம் நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

அது என்ன ஓட்டப் பானை என்று கேட்கிறீங்களா...?

அழகாக ஒழு செய்கிறோம் ஆனால். .....தண்ணீரை வீண் விரயம் செய்கிறோம். இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.

ஏழைகளுக்கு உதவி செய்கிறோம் ஆனால்.......அவர்களை இழிவுபடுத்தி கேவலப் படுத்துகிறீர்கள். இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.

இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறோம். ஆனால்........குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறோம்.  " இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.


நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றோம் ஆனால். ...... பிறரை ஏசி, திட்டி சபிக்கிறோம் இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.


ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறீர்கள். புர்க்கா அணிகிறீர்கள். ஆனால்........அதையும் தாண்டி நறுமணம் சென்ட் அத்தரின் வாடை அடுத்தவரை தரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு பூசுகிறீர்கள். இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.


விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறோம்.. ஆனால்.....
அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறோம். இது ஓட்டப் பானையில் தண்ணீர் ஊத்துவது போலத்தான்.

என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.

இது போன்ற குற்றங்களை செய்து கொண்டே நாம் நன்மைகளை சேகரிக்க சேகரிக்க மறுபுறம் அது நாம் செய்யும் தீமைகளால் செய்த நன்மை நம்மை விட்டு சென்று கொண்டே இருக்கும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....... இஸ்லாமியர்களில் சில ஆச்சரியமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

வசதியிருந்தும் ஹஜ், உம்றா செய்யாமல் இருக்காங்க. காரணம் கேட்டா அதன் செலவுகள் அதிகம்னு  சொல்வாங்க.. ஆனால்  வெயில் காலத்திலும் குளிர் காலத்திலும் நாட்டுக்குள்ளே, அல்லது  வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல டூர் போக அவர்கள் செலவழிக்கும் பணம் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.

நம்மில் பலர் உழ்ஹிய்யா என்னும் குர்பானி கொடுக்காம இருக்காங்க கேட்டா ஆட்டின் விலை அதிகம்னு சொல்றாங்க. ஆனால் அதிக விலையுள்ள ஐ போன், போன்ற ஆடம்பர பொருட்களை வாங்க அவங்க கொடுக்கிற விலை அதிகமாக அவங்களுக்கு தெரிவதில்லை.

பேஸ்புக் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒருநாளைக்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட செய்திகளை வாசிக்க நம்மிடம் நேரம் இருக்கிறது. ஆனால் குர்ஆனின் பத்து ஆயத்துக்களை  ஓத நமக்கு நேரமில்லை.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

இது போன்ற செயல்களை நாம் செய்து கொண்டிருந்தால்.....

இது போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால்......

நமது ஈமான் ரொம் பலகீனமான ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


யாஅல்லாஹ் எங்களுக்கும் எங்கள் சகேதரர்களுக்கும்  ஈமானை உறுதியாக்குவாயாக....

உனது மன்னிப்பை எங்களுக்கு வழங்குவாயாக...

எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் #ஷேக்_ஷுரைம் தனது குத்பா பேருரையில் இருந்து சிதறிய முத்துக்கள்...

தமிழாக்கம் 
மௌலவி இக்ராம் தீனி
உஸ்தாத் தாருல் உலூம் அல் புர்கானிய்யா அரபுக் கல்லூரி.
கண்டி


ஹழ்ரத் அவர்கள் தமிழாக்கம் செய்த உரையை மக்தப் மாணவர்கள் மேடையில் பேசும் விதத்தில் இங்கு சில மாறுதல்களோடு எழுத்தப்பட்டுள்ளது.

படிச்சவங்க உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

1 கருத்து: