புதன், 22 ஏப்ரல், 2020

மக்கத்தில் மலர்ந்த மாணிக்க ரோஜாவை.


கீதம்.

மக்கத்தில் மலர்ந்த
மாணிக்க ரோஜாவை.
சொர்க்கத்தில் நான் 
காண வேண்டும்

பக்கத்தில் நான் நின்று 
பாத மலர் காணும்
பாக்கிய நாள் என்று தோன்றும்
ஏக்கங்கள் தான் என்று தீரும்

பன்னீர் மணக்கின்ற 
பாத மலர் எழிலில்
கண்ணிரின் புஷ்பங்களை
காணிக்கையாய் தர வேண்டும்
முன்னர் நான் செய்த
முழுதான பாவங்களை
மன்னர் உம் புன்னகையில்
மூழ்கியே மறைய வேண்டும்

முத்துக்கள் மலர்கின்ற
மோகன முக மலரை
பத்து விரல் தொட்டுப் பார்த்து 
பரவசமே பெற வேண்டும்
தேம்பிய சிறு மழலை 
தேன் உண்டு சிரிப்பது போல்
சிந்தையில் நிறை காண வேண்டும்
செம்மலர் அவர் ஆசி வேண்டும்

இப்பாடலை வீடியாவாக பார்க்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக