சனி, 9 மே, 2020

உளுஃவின் சிறப்புகள்


மெளலவி முஹம்மது யூசுஃப் காஷிஃபி

உளுல் எனும் சிறப்பான அங்க சுத்தியை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மார்க்கமும் அறிமுகப்படுத்தவில்லை. இதன் மூலம் மனிதர்களை பரிசுத்தப்படுத்தியது இஸ்லாம். அல்லாஹ்வுடன் நெருங்குவதற்குரிய சிறந்த வணக்கமான தொழுகைக்கும் உளூஃவை அவசியமாக்கியது.

வெள்ளி, 8 மே, 2020

19 கேள்வியும் 19. பதில்களும்.


மெளலவி சா.மு. அப்துர் ராஜிக் நசீம் காஷிஃபி, ஏரல்

ஆன்மிகப் பேரருவி அபூ யஜீத் அல்புஸ்தாம் (ரஹி அவர்கள் ஒரு நாள் தூங்கும் போது ஒருவர் சொல்ல கேட்டார்கள். "இன்ன இடத்துக்குச் செல், அங்கே நபி முஹம்மது அவர்களைப் பற்றி தவறாக பேசப்படுகிறது. அதை நீ தடுத்து நிறுத்து. உடனே தூக்கத்தை விட்டு எழுந்து அந்த இடத்துக்கு சென்று அமர்ந்தார்

திருமணமின்றி அமையாது உலகு


மெளலானா S.A. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி, திண்டுக்கல்

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், அவர்களை நாம் மனைவி மக்களுடையவர்களாகவே ஆக்கிவைத்திருந்தோம். அல்குர்ஆன் 13:38)

புதன், 6 மே, 2020

நற்குணத்தின் பத்து பண்புகள். 2


 மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

6. நிதானம் -

நற்குணங்களில் முக்கியமான ஒன்று எந்த காரியத்திலும் நிதானத்தைக் கடை பிடிப்பது, அவசரம் காட்டமாலும் படபடப்புக் கொள்ளாமலும் இருப்பது. இதன் மூலம் நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்ற காரியங்களை நன்றாகவும் முறையாகவும் நிறைவேற்ற முடியும் என்பது உண்மையாகும்.

நற்குணத்தின் பத்து பண்புகள்


மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்லாம் என்றால் "சாந்தி சமாதானத்தைப் பிறருக்கு வழங்குதல்" என்பொருள். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாகச் செய்தால் மட்டும் போதாது, பிற மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியம் ஆகும்

திங்கள், 4 மே, 2020

தண்ணீர் செல்லும் பாடம்.



ஹாஜ்ஜா A. யாஸ்மின் ஆலிமா - இளையான்குடி.

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் குடிக்கின்ற நீரைப் பார்த்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்குகிறீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால் அதைக் கைப்புள்ளதாக (உவர்ப்பானதாக) ஆக்கியிருப்போம். (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா..?
அல்குர்ஆன் 56:68:69,70.

சனி, 2 மே, 2020

பிஸ்மில்லாஹ்வின் பரகத் (அபிவிருத்தி)


நினைவில் நிற்கும் நிகழ்வுகள்.

ரோம் நாட்டு மன்னர் கைஸர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின் சமூகம் வருகை தந்து தனக்கு நிரந்தரமாக தலைவலி ஏற்படுகிறது, எந்த சிகிச்சையின் மூலமும் குணமடையவில்லை என்று முறையிட்டார்.

வெள்ளி, 1 மே, 2020

அன்புள்ள மகளுக்கு. அம்மாவின் 10 யோசனைகள்.


மெளலவி S.A. ஜகரிய்யா ஹஸீன், மேலப்பாளைம்

கணவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நமது சமுதாயத்தின் தலை சிறந்த நற்குணங்களில் ஒன்றாகும். இந்த நற்குணம் அறியாமைக் காலத்தில் கூட நடைமுறையில் இருந்து வந்தது. இஸ்லாம் அதைச் சீராக்கி செம்மைப்படுத்தி மெருகூட்டியது. இன்றும் அரேபிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நற்குணம் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உணவு உண்ணும் முறைகள்


மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை முஹம்மது அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும், சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும்.

வியாழன், 30 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

எனது பெயர்........................................

நான் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உபதேசம் செய்ய வேண்டிய உபதேசங்களைக் கூற வந்துள்ளேன்.

யார் அந்தப் பேரறிஞர்..?


மெளலானா, எஸ், லியாகத் அலீ மன்பஈ

திடீரென ஒரு நாள் கனவொன்று கண்டேன். ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமாகிறார்கள். மக்களெல்லாம் ஜனாஸா இறுதி ஊர்வலத்தில் திரளாகச் செல்வது அவர்களின் போன்று அதில் காட்சி ஓடியது.

விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கனவு விளக்கம் சொல்வோரிடம் சென்று விசாரித்தேன். இப்பொழுதுள்ள பேரறிஞர்களில் ஒருவர் சமீபத்தில் மரணிக்கப்போகும் முன்னறிவிப்புதான் இது

இத்தா கேள்வி:பதில்


தொகுப்பு: எம். ஷெய்கு அப்துல் காதிர் காஷிஃபி

இத்தா குறித்து வாசகர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு விளக்கமாகவே இக்கட்டுரை கேள்வி பதிலாக தரப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல விளக்கங்கள் திறமைமிக்க மார்க்கச் சட்ட வல்லுனர்களான முஃப்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஃபதாவா ரஹீமிய்யா.
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)

18 விதமான சிறப்புகள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு..

எனது பெயர்...................................................


*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகளைப் பற்றி கூற வந்துள்ளேன்.

புதன், 29 ஏப்ரல், 2020

அ..ஆ..இ..ஈ..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

எனது பெயர் ................................................

1.அ....ஆ..... என்றால்
அரசனும் ஆண்டியாகலாம்.
2 .இ....ஈ....... என்றால்
இருப்பவன் ஈகை செய்யனும்.

மூவரில் ஒருவர் மட்டுமே



மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்ரவேலர்களில் மூவர் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சோதனையில் பீடிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கு முன்னால் இறைவனின் புறத்திலிருந்து நல்லதொரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்கள் மீண்டும் என்னவானார்கள் என்பதை தான் நபி ஸல் அவர்கள் அழகாக எடுத்துரைக்க, அன்புத் தோழர் அபூஹுரைரா (ரலி) அவர் கள் அறிவிக்க, ஹதீஸ்
கலா மாமேதைகளான இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். (மிஷ்காத், பக்கம்-165)

மெளலானா பதில்கள்


கேள்வி:ஆண்கள் மேலாடை (பனியன் கூட) இல்லாமல் கைலி மட்டும் அணிந்து ஒளூ செய்தால் கூடுமா? அல்லது மேலாடை அணிந்து ஒளு செய்ய வேண்டுமா..?

பதில் : மேலாடை (சட்டை, ஜுப்பா, பனியன்) இல்லாமல் கைலி அணிந்து கொண்டு ஒளு செய்தால் கூடும். அதில் தவறதுமில்லை. ஆனால் இயன்ற வரை தலையை மறைப்பது சிறந்தது
(ஆப்கே மஸாயில், பக்கம் - 39.43, பாகம் - 2)

ஓட்டைப் பானை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத்.

எனது பெயர்......................................................

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

விலைகள் உயர்ந்தது விட்டன.
பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்
மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அல்லாஹ் விரும்பும் மனிதன்




(மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்.)

அல்லா ஹுத்தஆலாவிடமிருந்து நபி மூசா கலீமுல்லாஹ் (அலை)
அவர்களுக்கு வஹீ வந்தது ஏ மூசா, நாம் உங்களைத் தேர்வு செய்திருக்கிறோம்.

நபி மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள்
யா ரப்பே...! எந்த சிறப்பு அம்சத்தை வைத்து மக்களைத் தேர்வு செய்கிறாய்? அது என்னவென்று தெரிந்தால அதை நான் மேலும் அதிகப்படுத்திக் கொள்வேன்.

மெளலானா பதில்கள்


கேள்வி : ஜும்ஆவுடைய தொழுகை வாஜிபா? ஃபர்ளா? மற்றத் தொழுகைகளை காட்டிலும் ஜும்ஆவுடைய தொழுகையில் மக்கள் ஏன் அதிகம் கலந்து கொள்கிறார்கள்

பதில் : ஜும்ஆ தொழுகை மற்ற ஐவேளைத் தொழுகைகளைப் போன்று ஃபர்ளாகும். ஃபர்ளுத் தொழுகையை ஃபர்ளு இல்லை என மறுத்தால் அவன் காஃபிராகி விடுவான். ஜும்ஆ தொழுகை ஃபர்ளு என்பது குர்ஆன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்

மே (உழைப்பாளர் தினம்)


மே தினம் 1-ம் நாள் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் மேன்மையை உணர்த்தவும், உழைப்பாளர்கள் உயர்வானவர்கள் என்பதைப் பிரகடனப் படுத்துவதாகவும் மே தினம் திகழ்கிறது.

மெளலானா - பதில்கள் 2008. ஜூன் மாதம்


கேள்வி : கம்பெனிகளில் வேலை செயபவர்கள் ஷ-சாக்ஸ் அணியும் கட்டாய சூழ்நிலையில், ஒளுவின் போது கால்களை கழுகுவதற்குப் பகரமாக சாக்ஸில் மஸஹ் செய்யலாமா ஹதீஸில் கூறப்பட்டுள்ள "குப்பைன் (மோஜாவின்) சட்டம் சாக்ஸிற்கு பொருந்துமா? பொருந்தாதா? ஆதாரம் என்ன...?

திங்கள், 27 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மௌலானா பதில்கள்.


கேள்வி: அரசு மூலம் தரப்படும் லோன் - கடன் பெற்று வியாபாரம்
செய்யலாமா...?

பதில்: வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வியாபாரம் செய்வதால் அபிவிருத்தியின்மையும், வாழ்வில் நிம்மதியின்மையும் உருவாகும். அத்தோடு மறுமையில் வட்டியைப் புசிப்பவருக்கு கொடுக்கப்படவிருக்கும் தண்டனைகள் குறித்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது புரிந்திருக்குமே அரசிடம் வட்டிக்குக் கடன் பெற்று வியாபாரம் செய்வது கூடாது என்பது

கேள்வி பதில்கள்.


கேள்வி : என் வயது 45. பதினைந்து வருடங்கள் முன்பு கணவர் இறந்து விட்டார். தற்போது நான் என் மகனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது தனியாக ஹஜ் கமிட்டி மூலமாக நிறைவேற்றலாமா?

பதில் : ஒரு பெண் 48 மைல்கள் தூரம் உள்ள ஊர்களுக்கு பயணிப்பதாக இருந்தால் அவளுடன் மஹ்ரமான நபர்கள் இருத்தல் அவசியமாகும். ஏனெனில் மஹ்ரமான நபர் துணையில்லாமல் ஒரு பெண் பயணிப்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இமாமும்.. இமாமத்தும்.

எழுதியவர். மர்ஹும். மெளலானா K.A. நிஜாமுத்தீன் மன்பயி. ஹழ்ரத் அவர்கள்.

இமாம்! அவர் மகத்துவத்திற்குரியவர்
இமாமத்! - அது ஒரு மகத்தான பணி!

அதற்கு நிகராக உலகில் வேறு எந்தப் பணியும் கிடையாது. மிகத் தூய எண்ணத்துடன்- அல்லாஹ்வுக்காக இமாமத் செய்கிற இமாம் கண்ணியத்திற்குரியவர்; புண்ணியத்திற்குரியவர் 

புரியாத கேள்வி? புதிரான பதில்.


நீங்கள் இந்த உயர் அந்தஸ்தை எப்படி அடைந்தீர்கள்?” என அறிவுக் களஞ்சியம் இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது

தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்பட்டதுமில்லை தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க கஞ்சத்தனம் செய்ததுமில்லை என பதிலளித்தார்கள்.

ஹலால் ஹராம்.


அல்லாஹு தஆலா மனிதனை உயர்வான ஒரு நோக்கத்திற்காக படைத்துள்ளான். அந்த நோக்கம் நிறைவேற உயர்வான பண்புகள் அவனிடம் தேவை, ஏனெனில், பண்பற்ற மனிதன் தன்னை 'மனிதன்' என்று சொல்வதற்கே தகுதியற்றவன். எனவே, மனிதனை பண்பற்றவனாக மாற்றும் அனைத்து செயல்களைவிட்டும் அவன் தவிர்ந்திருப்பது மிக அவசியம்.