நினைவில் நிற்கும் நிகழ்வுகள்.
ரோம் நாட்டு மன்னர் கைஸர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
பிறகு ஹள்ரத் உமர் (ரலி) அவர்களின்
சமூகம் வருகை தந்து தனக்கு நிரந்தரமாக தலைவலி ஏற்படுகிறது, எந்த
சிகிச்சையின் மூலமும் குணமடையவில்லை என்று முறையிட்டார்.
உமர் (ரலி) அவர்கள் ஒரு கருப்பு நிறதொப்பி தைத்து அதை
தலையில் அணிந்து வரும்படி சொல்லி கொடுத்து அனுப்பினார்கள். மன்னர் அவர்கள் தனக்கு தொப்பி
கிடைத்துள்ளது என அறிந்து சந்தோஷம் அடைந்தார். மேலும் அதை கிரீடம் போல் பாவித்து
அணிந்துக் கொண்டார். உடனே தலைவலி சரியாகிவிட்டது தலையில் தொப்பி இருக்கும் வரை
தலைவலியே வருவதில்லை. அதை எடுத்து விட்டால் மீண்டும் தலைவலி ஏற்பட்டு விடுகிறது.
எனவே அப்படி தொப்பியில் என்னதான் உள்ளது என்று கவனித்த போது அதில் ஒரு காகிதத்
துண்டு ஒன்று இருந்தது. அதில் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்"
எழுதப்பட்டிருந்தது
(நூல்: ஆஸாரேசயீத்
பக்கம் 63
படிப்பினை : இந்த நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ்வின்
திருநாமத்தில் பெரிய பரகத் உள்ளது என்றும் எல்லா நோயிலிருந்து 'பிஸ்மில்லாஹ்'வின் மூலம் நிவாரணம்
கிடைக்கிறது என்றும் விளங்க முடிகிறது. எனவே தான் நபி அவர்கள் தமது உம்மத்திற்கு
எந்த காரியம் செய்ய ஆரம்பித்தாலும் முதலில் "பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பம்
செய்யுங்கள் என்று கற்றுக் கொடுத்தார்கள்.
ஸலவாத்தின் நன்மையின் மீது நபி வின் சந்தோஷம்
ஹன்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரவி)
அறிவிக்கிறார்கள். ஒரு நாள் நபி அவர்கள் மதீனாவிற்கு வெளியே பேரீத்த பழ
தோட்டத்திற்கு சென்றார்கள் உள்ளே ஸஜ்தாவில் திளைத்துவிட்டார்கள். நபி அவர்கள்
ஸஜ்தா முடித்து எழுந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்து அமர்ந்து கொண்டேன்
ஆனால் நபி ஸல் அவர்களின் ஸஜ்தா
நீளமாகிவிட்டது, ஒருக்கால் நபி ஸல் ரூஹ் ஆன்மா) பறிக்கப்பட்டு விட்டதோ.
தெரியவில்லையே என்று அவர்களின் சந்தேகம் ஏற்பட்டு நான் நபி அவர்களின் கையை
பிடித்து அசைத்து பார்க்கலாமா? என்று யோசித்தேன்
வெகுநேரம் கழிந்த பிறகு நபி (ஸல் அவர்கள்
ஸஜ்தாவிலிருந்து தலை தூக்கிய போது சந்தோஷத்தின் அடையாளங்கள் திருமுகத்தில்
மலர்ந்துக் கொண்டிருந்தன யா ரசூலல்லாஹ் என்றுமே காணாத நிகழ்வு இன்று நான்
காணுகிறேன். இவ்வளவு நீண்ட ஸஜ்தா இதற்கு முன் தாங்கள் செய்ததில்லையே என்று
வியப்புடன் வினவினேன். மேலும் தாங்களின் ரூஹ் பறிக்கப்பட்டதோ என்று எண்ணுமளவிற்கு ஆகிவிட்டதே
இதற்கு என்ன காரணம் என்று கேட்டேன்
அதற்கு அருமை நபி ஸல் அவர்கள் 'உண்மை நிலை
யாதெனில் இப்போது தான் என்னிடம் ஹள்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து
கீழ்கண்ட விஷயத்தை அல்லாஹுதஆலா கூறியதாக சுபச் செய்தி சொன்னார்கள்.
ஒரு மனிதன் தங்களின் மீது ஒரு முறை ஸலவாத்து சொன்னால்
நான் (அல்லாஹ்) அவனின் மீது ரஹ்மத் பொழிவேன். மேலும் ஒரு மனிதன்
தாங்களுக்கு ஸலாம் சொன்னால் அவனின் மீது நானும் ஸலாமை சமர்பிப்பேன். இந்த சுபச்
செய்தி வெகுமதிற்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்வளவு நீண்ட ஸஜ்தா செய்தேன் என்று பதில்
கூறினார்கள்
நூல்: முஸ்னத் அஹ்மது பாகம்-1 பக்கம்: 191
படிப்பினை : இந்த சம்பவத்தின் மூலம் நாம் எத்தனை தடவை
நபி ஸல் அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுவோமோ அத்தனை தடவையும் அல்லாஹ்
வின் புறத்திலிருந்து அருளும், துஆவும் கிடைக்கின்றன
மூல நூல்: ஜீனதுல் வாஇஜீன் -
தமிழில் ஹாபிழ் மெளலவி, அப்துல் வஹ்ஹாப்
காஷிஃபி- ஒசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக