வெள்ளி, 8 மே, 2020

19 கேள்வியும் 19. பதில்களும்.


மெளலவி சா.மு. அப்துர் ராஜிக் நசீம் காஷிஃபி, ஏரல்

ஆன்மிகப் பேரருவி அபூ யஜீத் அல்புஸ்தாம் (ரஹி அவர்கள் ஒரு நாள் தூங்கும் போது ஒருவர் சொல்ல கேட்டார்கள். "இன்ன இடத்துக்குச் செல், அங்கே நபி முஹம்மது அவர்களைப் பற்றி தவறாக பேசப்படுகிறது. அதை நீ தடுத்து நிறுத்து. உடனே தூக்கத்தை விட்டு எழுந்து அந்த இடத்துக்கு சென்று அமர்ந்தார்


அங்கே நம் நபியை திட்டி பேசியவன் பேச்சை நிறுத்தி சொன்னான். "நான் பேசமாடேன். ஏனெனில் உங்களில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார்" அங்கிருந்தோர் கேட்டனர் எப்படி உங்களுக்கு தெரியும்.. அவர் சொன்னார் முஸ்லிம்கள் உளு என்னும் அங்க சுத்தி செய்வதால், ஸஜ்தா செய்வதால் அவர்களின் முகங்கள் பிரகாசித்துக் கொண்டு இருக்கும். உடனே அபூ யஜீத் (ரஹ்) எழுந்து செல்ல நாடும் போது அவர் சொன்னார்

உம்மிடம் சில கேள்விகள் கேட்கிறேன் நீர் பதில் அளித்தால் நாங்கள் அனைவரும் உமது மார்க்கத்தை ஏற்று ஈமான் கொள்கிறோம்

1. ஒருவன் யார் அவனுக்கு இரண்டாமவன் கிடையாது

2. இரண்டு என்ன அந்த 2க்கு 3வது கிடையாது

3. மூன்று என்ன அந்த 3க்கு 4வது கிடையாது

4. நான்கு என்ன அந்த 4க்கு 5வது கிடையாது

5. ஐந்து என்ன அந்த 5க்கு 6வது கிடையாது

6. ஆறு என்ன அந்த 6க்கு 7வது கிடையாது

7. ஏழு என்ன அந்த 7க்கு 8வது கிடையாது

8. எட்டு என்ன அந்த 8க்கு 9வது கிடையாது

9. ஒன்பது என்ன அந்த 9க்கு 10வது கிடையாது

10. பத்து என்ன அந்த 10க்கு 11வது கிடையாது

11. பதினொன்று என்ன அந்த 11க்கு 12 கிடையாது

12. பன்னிரெண்டு என்ன அந்த 12க்கு 13 கிடையாது

13. பதிமூன்று என்ன அந்த 15க்கு 14வது கிடையாது

14. அல்லாஹ் ஒன்றை படைத்து, அதை வெறுக்கிறான். அது என்ன

15. அல்லாஹ் ஒன்றை படைத்து, அதை பெரிது என்கிறான். அது என்ன?

16. உயிரில்லாத ஒன்று மூச்சு விடுகிறது. அது என்ன..?

17. ஒருவரை அவரது கப்ர் தூக்கிக் கொண்டு சென்றது. அது எந்த கப்ர்..?

18. ஒரு மரம். அதில் 12 கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் 30 இலைகள்
ஒவ்வொரு இலையிலும் 5 பழங்கள் அது என்ன..?

19. சுவர்க்கத்தின் சாவி எது...?

அபூ யஜீத் (ரஹ்) பதிலளிக்க ஆரம்பித்தார்

1. அல்லாஹ் ஒருவன் இரண்டாமவன் கிடையாது

2. இரவு - பகல் மூன்றாவது கிடையாது

3. மூஸா நபி (அலை) அவர்கள் கிழ்ர் (அலை) அவர்களிடம் கேட்ட 3
கேள்விகள். 4-வது நிகழ்வு நடைபெறவில்லை

4. நான்கு வேதங்கள் 5-வது கிடையாது

5. ஐந்து நேரத் தொழுகைகள்

6. வானம் பூமி ஆறு நாளில் படைக்கப்பட்டது

7. ஏழு வானங்கள். 8வது இல்லை

8. அர்ஷை சுமப்போர் 8 பேர், 9வது இல்லைஅல்குர்ஆன்- 60:17

9. மூஸா நபி அவர்களது அற்புதங்கள் ஒன்பது பத்து இல்லை

10. ஒரு நன்மை செய்தவருக்கு பத்து நன்மை கண்டிப்பாக கிடைக்கும் அல்குர்ஆன் 6160)

11. யூசுப் நபி சகோதரர்கள் 11 பேர்

12. மூஸா நபி உடைய அஸாவால் கற்கள் பிளந்து 12 ஊற்றுகள் வெளிவந்தது

13. யூசுப் நபி சகோதரர்கள் 11, தாய்-தந்தை13

14. அல்லாஹுதஆலா குர்ஆனில் கூறுகிறான் "நிச்சயமாக சப்தங்களில் மிக வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தமாகும் (அல்குர்ஆன், 3119)

15. (பெண்களே ) நிச்சயமாக உங்கள் சதி பெரியது (அல்குர்ஆன், 1228)

16. காலை பொழுது மூச்சு விடும் போது (அல்குர்ஆன், 81:18)

 17. யூனுஸ் நபியை விழுங்கிய மீன்

18. வருடம், அதில் 12 மாதம், ஒவ்வொரு மாதத்தில் 30 நாட்கள், ஒவ்வொரு நாளில் 5 நேரத் தொழுகை

19. சுவர்க்க சாவி "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி

பதிலை கேட்டதும் அனைவரும் இஸ்லாத்தை ஏற்று கலிமா சொன்னார்கள்

நூல் : கிஸஸுஸ்ஸாலிஹின்.

மனாருல் ஹுதா.
செப்டம்பர் - 2009
ரமழான், ஷவ்வால்- 1430

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக