திங்கள், 9 பிப்ரவரி, 2026

10. காரணம்.

 


இமாம் இப்ராஹீம் இப்னு அத்ஹம்.


பஸராவின் கடைவீதியை கடந்து சென்றபோது மக்கள் எல்லோரும் அவரிடம் ஒன்றுகூடி அபூ இஸ்ஹாக் அவர்களே! நாங்கள் துஆ செய்கிறோம் ஆனால் எங்களுக்கு பதில் கிடைப்பதில்லயே ஏன்.?! என வினவினார்கள்.


அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் :  


உங்களது உள்ளங்கள் 10 காரணங்களால் மரணித்து விட்டது. 


அதுவவென்ன என்று மக்கள் கேட்டனர்.?!


இமாம் அவர்கள் கூறினார்கள் :


1. அல்லாஹ்வை அறிந்து கொண்டீர்கள். 


ஆனால், அவனுக்கான உரிமைகளை நீங்கள் நிறைவேற்றவில்லை.


2. நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை நேசிக்கிறோம் என்று கூறினீர்கள். 


ஆனால், அவருடைய சுன்னாவை விட்டுவிட்டீர்கள்.


3. குர்ஆனை ஓதினீர்கள். ஆனால், அதன் படி அமல் செய்யவில்லை.


4. அல்லாஹ்வுடைய அருட்கொடையை சுவைத்தீர்கள்.


ஆனால், நன்றி சொல்லவில்லை.


5. ஷைத்தான் உங்கள் எதிரி என்று கூறினீர்கள்.


ஆனால், அவனுக்கு கட்டுப்பட்டீர்கள்.


6. சொர்க்கம் என்பது உண்மை என்று கூறினீர்கள். 


ஆனால், அதற்காக அமல் செய்யவில்லை.


7. நரகம் உண்மை என்று கூறினீர்கள்.


ஆனால், அந்த நரகத்தை நீங்கள் அஞ்சிக் கொள்ளவில்லை.


8. மரணம் உண்மை என்று கூறினீர்கள்.


ஆனால், அதற்காக தயாராகிக் கொள்ளவில்லை. 


9. உறக்கத்திலிருந்து எழுந்தீர்கள். மனிதர்களுடைய குறைகளில் மூழ்கினீர்கள். 


ஆனால், உங்களுடைய குறைகளை மறந்து விட்டீர்கள். 


10. மரணித்தவர்களை அடக்கம் செய்தீர்கள்‌.


ஆனால், அதிலிருந்து படிப்பினை பெறவில்லை.


جامع بيان العلم وفضله (۲/۱۲۲)

பழைய குறிப்புகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


சிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக