திங்கள், 4 ஜூன், 2012

அவர்கள் எங்கே......நாமெங்கே.....?




முயலை விரட்டும் வேட்டை நாய்கள் போல். விரன்டோடும் அந்த குரைஷிக் காபிர்களில் ஓருவனை தடுத்து நிறுத்தினான் மற்றவன்...எங்கே ஓடுகின்றீர்கள்....?  மக்காவின் எல்லைக்கு...!  ஏன் நீயும் வாயேன் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்தவன் சொல்லி விட்டு மீண்டும் ஓடத் துவங்கினான்.


என்ன பங்கு...? வள்ளல்கள் யாரும் வாரி வழங்குகிறார்களோ....
தடுத்தவன் ஓடிக் கொண்டே மற்றவனிடம் கேட்டான்.


இல்லையப்பா பெரும் பணக்கார வர்த்தகர் அவ்ப் மகன் அப்துர் ரஹ்மான் மதினாவுக்கு போகிறாராம். அவரைத் தடுத்து சொத்து சுகத்தை பறிக்கவே ஓடுகிறோம். என முதலாமவன் கூற கேட்ட இரண்டாமவனுக்கு நெஞ்சில் நப்பாசை இழைந்தோடியது....அவனும் மிக வேகமாக ஓடத்துவங்கினான்.

நிலலுங்கள்

மிக அமைதியாக ஆனால் உறுதியான நடையில் சென்று கொண்டிருந்த ஹஜரத் அப்துர் ரஹ்மான் ப்னு அவ்ப் (ரலி) அவர்கள் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். குரைஷி காபிர்களின்  கூட்டமொன்று விரைந்து வந்து கொண்டிருந்து. அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.


உங்களை மதினாவுக்கு போக விட மாட்டோம் என எல்லோரும் அவரை சுற்றி நின்று  குரல் கொடுத்தனர்.


என்னைத் தடுப்பதற்க்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது....? அப்துர் ரஹ்மான் அவர்கள் அமைதியாக கேட்டார்கள். அவரது குரலில் கம்பீரம் இழைந்தோடியது.


நீங்கள் மதினாவுக்கு செல்ல வேண்டுமென்றால் நீங்கள் இந் நாட்டில் எங்களோடு பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததினால் உங்களை உயிரோடு மதினாவுக்கு அனுப்ப ஓரு நிபந்தனை தருகிறோம் அதற்க்கு நீங்கள் சம்மதித்தால் போகலாம் என அக்கூட்டத்திலிருந்த வர்த்தகர்கள் சிலர் கத்தினர்


என்ன நிபந்தனை....? அப்துர் ரஹ்மான் அவர்கள் அலட்சியமாகக் கேட்டார்கள்.


இந்த நாட்டிலுள்ள உங்கள் தோட்டத்தை நீங்கள் உரிமை பாராட்ட முடியாது. என கூறினான் ஓருவன்.


அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்..! என கூறி விட்டு மேலே செல்வதற்க்காக திரும்பினார் அப்துர் ரஹ்மான் (ரலி)


இன்னுமொன்று.......உங்கள் வீடும்....நிலமும். மற்றெருவன் கத்தினான்.


அதையும் நிங்களே அனுபவியுங்கள்...! துணிவோடு கூறிய அந்த தியாகி...வேறு ஏதும் உண்டா....உங்கள் ஆசை என்று கேட்டார்.


ஓ...உங்கள் கால்நடைகள் இருக்கின்றதே...? ஓரடி முன்னால் வந்து கேட்டான் ஓர் அற்ப்ப ஆசைக்காரன்.


ம்...அவைகளையும் எடுத்துச் செல்லுங்கள்.


அப்படியானால் உங்கள் அடிமைகள் எங்கே..? .ஓரு தெரு பொறுக்கி ஓலமிட்டான்  


அவர்களுக்கு விடுதலை கொடுத்து விட்டேன். இப்போது உங்கள் நிபந்தனையும் ஆசையும் பூர்த்தியாகி விட்டதல்லவா...? என அந்த உத்தமர் கேட்டார்.


நீங்கள் அணிந்திருக்கும் உயர்ந்த மேலாடையும் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது...!  நாக்கினால் உதட்டை ஈரமாக்கிக்கொண்ட ஓரு போராசைக்காரன் பற்கள் வெளியே தெரியாமல் சிரித்துச் சொன்னான்.


அவனை தன் விழிகளால் மிக ஆழமாக நோக்கிய அப்துர் ரஹ்மான் ரலி அவர்கள் ஓரு ஏளனச் சிரிப்போடு தமது மேலாடையைக் கழற்றி அலட்சியமாக அவனை நோக்கி விசினார்கள்... பேராசைக்காரனே....இதோ பெற்றுக்கொள்.


பாலைவன மணலிலே மிக அழுத்தமாக ஏறி இறங்கிய அவரது பாதங்கள்  உறுதியான நடையோடும் பெருமானார் (ஸல்) அவர்களை எப்போது கண் குளிரக் காண்பேனோ  என்ற பேரின்பத்திலேயே லயித்த வண்ணம் போய்க் கொண்டிருந்தார். 



இஸலாமிய வாழ்க்கை முறையை ஏற்றுச் செயல்படுத்தியதற்க்காக  முஸ்லிமாக மாறியதற்க்காக வேண்டி குரைஷி காபிர்களால் வீடு வாசல் சொந்தம் பந்தம் சொத்து சுகம் உடல் உயிர் என அத்தனையும் பறி கொடுத்த தியாகிகள் வரிசை....... அவர்கள் எங்கே.....!
யாரையும் உலகையும் பேராசைக் கண்கொண்டு பெரு மூச்சி கொள்ளும் நாமெங்கே....!


பெருமானார் ஸல் அவர்கள் மீது எங்களுக்கு உயிராம்.... ஆனால் அவர்கள் வழிமுறையில் தியாகம் செய்வதற்க்கு மட்டும் எமக்கு கசப்பாம்.
என்ன அநியாயம் இது.....!!!!


1 கருத்து:

  1. தியாகம், பொறுமையின் பெருமையை
    அருமையாய் கூறியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு