ஞாயிறு, 24 ஜூன், 2012

ஈமானின் மணம்.





          ஹஸ்ரத் காரி அப்துல் பாரி பாகவி.வேலூர். 


இந்தியாவில் நடந்த ஓர் நிகழ்ச்சி:-  ஓரு அறிஞர் தம் நண்பர் குழுவைக் கண்டார். அவர்கள் ஊரை விட்டு வெகுதூரம் சென்றிருந்திருந்தனர். பசியால் பெரிதும் அவதியுற்றனர். அவர்களுக்கு அறிஞர் ஆலோசனைக் கூறினார்  நண்பர்களே...இங்கு யானைக் குட்டிகள் காணப்படுகின்றன. அவைகளில் எதையும் வேட்டையாடி விடாதீர்கள். யானை எங்கோ சென்றிருக்கிறது, அது திரும்பி வந்தால் உங்களை உயிருடன் விட்டு விடாது. எச்சரிக்கிறேன்.


ஆனால் அவர்களால் பசியைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. பசி என்றால் பத்தும் பறந்தும் போகும் என்பர். அங்கும் அப்படித்தான் நடந்தது. அறிஞரின் அறிவுரையை புறக்கணித்தனர். யானைக் குட்டி ஓன்றை பிடித்து கபாப் செய்து காலி பண்ணிவிட்டனர். இதை அறிந்து வருந்திய அந்த அறிஞர் கூறினார். நீங்கள் இக்காட்டில் புல் பூண்டினை சாப்பிட்டு இதனை தவிர்த்திருக்கலாம். இப்போது உங்கள் வினையின் முடிவை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். எனக் கூறிவிட்டு அறிஞர் சென்றுவிட்டார்.


அக்குழுவினரில் ஓருவர் மட்டும் ஏழை அறிஞரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டார். யானைக் குட்டியின் கபாபைச் சாப்பிடாமல் புல் பூண்டென்று கிடைத்ததைச் சாப்பிட்டு விட்டு அவர்களை விட்டு பிரிந்து தனியே சென்றுத் தூங்கினார். தவறு செய்தவர்களுடன் தானும் இருந்தால் தன்னையும் யானைத் தாக்கிவிடும் என அவர் கருதினார்.


இரவு நேரம் யானை வந்தது. தன் குட்டியின் குருதியைக் கண்டது. வாசனையையும் நுகர்ந்தது. நடந்ததென்னவென்பதை உணர்ந்து கொண்டது. அது கடும்கோபம் கொண்டதில் வியப்பில்லை. அதன் துதிக்கையிலிருந்து நெருப்புக்காற்று மூச்சாக வெளிப்பட்டது. உறங்கிக் கொண்டிருந்தவர்களின் அருகில் வந்தது. முதலில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தவர் அருகில் சென்றது. மூன்று முறை அவரைச் சுற்றிவந்தது. அவர் வாயை முகர்ந்துப் பார்த்தது. தன்குட்டியின் மாமிச மணம் காணப்படவில்லை. அவர் குற்றமற்றவர் எனக்கணித்து அவரை விட்டுவிட்டது.


அடுத்து அது கூட்டமாக படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் வந்தது. ஓவ்வொருவரின் வாயையும் முகர்ந்துபார்த்தது. தன் குட்டியின் கறி வாசனை வரவே சினமும் சீற்றமும். கொண்டு துதிக்கையால் சுருட்டி தூக்கி தரையில் அடித்து மிதித்தது. சிறிது நேரத்தில் அனைவரின் கதையும் முடிந்துவிட்டது.


இறைவனின் படைப்புகளை அழிப்பவர்களையும் மற்றவர்களின் பொருள்களை அபகரிப்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அநீதீ இழைப்பவர்களின் மூச்சில் அநீதீயின் வாசனை வெளிப்படும்.

நபிமணி (ஸல்) அவர்கள் கூறினர்கள். எமன்நாட்டிலிருந்து காற்றின் மடியில் தவழ்ந்து அல்லாஹ்வின் நற்ச் செய்தி எனக்கு வருகிறது. (உவைசுல் கர்னி ரஹ் அவர்களின் உண்மையான அன்பு, தூய்மை ஈமானின் மணம் வருகிறது.)


மனிதனே....பெருமை, பேராசை,தவறான எண்ணம் ஆகியவற்றின் வாடை. பேச்சி வார்த்தையில் வெளிப்பட்டுவிடும். வெங்காயம் சாப்பிட்ட வாயிலிருந்து வெங்காய வாடை வீசுவது போல.


மனிதா..நீ பாவம் செய்துவிட்டு உறங்குகிறாய். அதன் ஹராமான நாற்றம் வின்னை அடைகிரது. நல்லுணர்வு பெற்று நன்மைகள் செய்ய தலைப்படு. நன்மையின் நறுமணம் வெளிப்படும்.



                                      படைப்பு: ரூமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக