சனி, 23 ஜூன், 2012

எளிமையும் துறவும்



கேள்வி கேட்க்கப்படாத மூவர்!


ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றுபேர் கேள்விகேட்க்கப்படாத நிலையில் சுவனம் புகுவார்கள். ஓருவர் துவைத்துக்கட்ட மாற்றுத் துணியில்லாதவர். அடுத்தவர். அடுப்பில் வைக்க இரண்டு சட்டியில்லாதவர். மூன்றாமவர்.தாகம் தீர தண்ணீர் இருக்கிறதா எனக் கேட்டு எப்பதிலையும் பெறாதவர்.


ஓரு சமயம் ஹஜ்ரத் ஸூப்யானுத் தௌரியின் சபைக்கு ஓரு ஏழை மனிதர் வந்தார். அவரை தன் அருகில் அமரவைத்துக் கொண்ட ஸூப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள். நீர் மட்டும் ஓரு செல்வந்தராயிருப்பின் உம்மை என் அருகில் கூட நெருங்விட மாட்டேன்


ஹஜ்ரத் ஸூப்யான் ரஹ் உடைய செல்வந்தர்களான நண்பர்கள் இதைக் கேட்டபோது நாங்களும் ஏழைகளாக இருந்திருக்க கூடாதா..... என்று நினைத்தனர். ஏழைகளை கண்டபோது எவ்வளவு ஆனந்தமடைந்தார்களோ...அந்தளவு செல்வந்தர்களை கண்டபோது புறக்கணித்தார்கள். 

ஹஜ்ரத் ஸூப்யான் ரஹ் உடைய சபையில் வறியவர்களை விடச் சிறப்பான யாரையும் நான் கண்டதில்லை. அதே போல செல்வந்தர்களை விட இழிவானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை. என்பதாக முஅம்மில் என்ற அவருடைய தோழர் கூறுகிறார்.


மெய்ஞானிகளில் ஓரு சாரார் இப்படிக் கூறுவார்களாம்.  ஹஜ்ரத் ஆதம் அலை உடைய மக்களில் வறிய நிலையிலிருப்பவன் தன்னுடைய வறுமைய்யைப் பயப்படுவது போல நரக நெருப்புக்கு பயந்தானென்றால் அப்பயத்தின் காரணமாக நரக நெருப்பு. வறுமை இரண்டை விட்டுமே காப்பாற்றப்பட்டு விடுவான். அதே போன்று வளமான வாழ்வை எதிர்பார்ப்பது போல சுவனத்தை ஆதரவு வைத்தால் இரண்டையுமே பெற்றுக் கொள்வான்.


(காரணம்:  எளிமை வறுமை பயப்படுவதற்க்குறியதோ, வள வாழ்வு ஆதரவு வைக்கப்படுவதற்க்குரியதோ அல்ல) இதற்க்கு மனிதர்கள் பயப்படுவதைப் போல இறைவனைப் பயந்தால் இரு உலகிலும் அவன் சீதேவிதானமாகி விடுவான்.


இருவருக்கும் ஆண்டவன் ஓருவனே....


மகனே…!  நீ கிழிந்த நிலையில் உடை உடுத்தியிருப்பவனை ஓருபோதும் தாழ்வாக நினைக்காதே.... ஏனெனில் உன்னைப் படைத்த இறைவனும், அவனைப் படைத்த இறைவனும் ஓருவன் தான்.  என்பதாக ஹஜ்ரத் லுக்மானுல் ஹகீம் தன் மகனுக்கு எளிய வாழ்வின் சிறப்பைப்பற்றிக் கூறுவார்களாம்.


எளிமையை விரும்புவதும்...வெறுப்பதும்.....

எளிமையை விரும்புவது நபிமார்களின் குணம். எளியவர்களுடன் அமர்ந்திருப்பது நல்லடியார்களின் அடையாளம். எளியவர்களை வெறுப்பது நயவஞ்சகனின் நடத்தை. என யஹ்யப்னுல் மூஆத்  அறிவுறித்தியுள்ளார்கள்.


திருமறைக்கு முந்திய வேத நூல்களில் காணப்படுவதாவது.
எளியோரை வெறுக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் வெறுத்தால் என் பார்வையில் நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள். உலக மாயைகளில் உங்களை உழலச் செய்வேன். என்பதாக நபிமார்களில் ஓருவருக்கு வஹி அறிவிக்கப்பட்டது.


ஆயிஷா ரலி அவர்களை நோக்கி அண்ணலார்


ஆயிஷா...!   சுவனத்தில் என்னுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால் நீ எளியவர்களின் வாழ்வைத் தோர்ந்தெடுக்துக் கொள். ஓரு போதும் செல்வந்தர்களிடம் ஓட்டாதே.... உன் துணிகள் பழையதாகிக் கிழிந்து ஓட்டுப் போடும் வரை அதைக்கழற்றி எறிந்துவிடாதோ...என்று பெருமானார் ஸல் அவர்கள் ஆயிஷா பிராட்டியாருக்கு உபதேசித்துள்ள நல்லுரை நமக்கு பெரும் படிப்பினையாகும்.


இப்ராஹிம் ப்னு அத்ஹமின் வாழ்வு


அரசு துறந்த ஆத்ம ஞானி இப்ராஹிம் ப்னு அத்ஹம் ரஹ் அவர்களிடம் ஓருமுறை அவர்களின் நண்பர் பத்தாயிரம் திர்ஹம்களைக் காணிக்கையாக அனுப்பியிருந்தார். எவ்வளவோ வற்ப்புறுத்தியும் இவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மிக வற்ப்புறுத்திய போது  என்னுடைய பெயரை ஏழைகளின் பட்டியலிருந்து அகற்றி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறீரா....?   ஓருபோதும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். எனறு கூறி அதை திருப்பியனுப்பி விட்டார்கள். எளிய வாழ்வும் அந்த அளவு அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த்து.


நபிமார்களும் சரி. நாயகத் தோழர்களும் சரி யாருமே வளவாழ்வுப் பெரிதாகவோ எளிமையைத் தாழ்வாகக் கருத்வோ இல்லை..!  எளிமையே சிறப்பு என்பதை தங்களின் வாழ்க்கையின் மூலம் பிரதிபலித்துக் காட்டினார்கள். அவ்வாறே தங்களைச் சேர்ந்தவர்களையும் வாழச் சொன்னார்கள்.


ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் தங்களின் படைவீரர்கள் வெற்றி கண்ட ஓரு பகுதிக்கு வீரப்பவனி வரக் கிளம்பிய போது அவர்களின் உடையில் மூன்று இடங்களில் ஓட்டுபோடப்பட்டிருந்த்து. அதில் சில ஓட்டுக்கள் தோலால் ஓட்டுப்போடப்பட்டிருந்த்தன.  எளிமை....!   எளிமை....! அவ்வளவு எளிமை.! அவர்களுடன் நம்மை ஓப்பிட்டுப்பார்க்கையில் நம் எளிமை எளிமையே அல்ல. வெறும் ஏமாற்று நாடகம் என்று தான் சொல்ல வேண்டும்.


எளிமையும் நிறைவும்


எளிமையின் சிறப்பை பார்த்தோம் எளிமையைத் தேர்ந்து எடுத்த சிறந்த உத்தமர்களின் பட்டியலையும் பார்த்தோம். எந்தளவு எளிமையை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்பதையும் பார்த்தோம்.
இங்கு ஓரு சிறு திருத்தம்


எளிமை மட்டும் போதாது. அந்த எளிமையைப் பொருந்திக் கொள்ளுதலும் அதில் நிறைவைக் காணுதலும் முக்கியத்திலும் முக்கியமாகும்.


முறையிட்டுக் கொண்டே இருக்கும் எளிமையில் என்ன சிறப்பிருக்கிறது…? 

 பெருமானார் ஸல் அவர்களும் அதைத் தான் சொல்கிறார்கள்.
இஸ்லாத்தைத் தழுவி வறியவனாக எளியவனாக வாழ்ந்து அதுவே போதும் என்றும் எவன் கருதிக் கொள்கிறானோ அவன் வாழ்ந்து சிறக்கட்டும்.


மற்றொரு இடத்தில் கூறியுள்ளார்கள்.


எளிய வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஏந்தல்களே...!   உங்களின் உளப் பொருத்ததைக் காட்டுங்கள். இறைவன் உங்களுக்கு நன்மைகளின் குவியலைக் காட்டுவான். நீங்கள் பொருந்திக் கொள்ளவில்லையானால் நன்மையின் சுவடு கூட உங்களுக்கு கிடைக்காது.


சுவர்க்கத்தின் திறவுகோல் 


ஓவ்வொரு பொருளுக்கும் ஓரு திறவு கோல் இருக்கவே செய்யும். சுவர்க்கத்தின் திறவுகோல் எளியவர்களின் மீது அன்புசெலுத்துதலாகும். அந்த எளியவர்கள் தங்களின் எளிமையையே பெரும் திரவியமாகக் கருதினார்கள். அவர்களின் பொருமையால் அவர்கள் நாளை இறுதித் தீர்ப்பு நாளின் போது இறைவனின் அருகில் அமர்ந்திருக்கும் நற்ப்பேறு பெறுவர். என பெருமானார் ஸல் அவர்கள் கூறியதாக நாயகத் தோழர் ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


அடியார்களில் அல்லாஹ்வுக்கு பிரியமானவனும் நிறைந்த நேசத்திற்க்குரியவனும் யார் தெரியுமா...?


எளிமையில் உழன்று கொண்டிருப்பதோடு அதுவே சிறந்த ஓன்று என்று பொருந்திக் கொண்டு விடுகிறானோ அவன் தான்…! என்பதாக ஓரு சமயம் நாயகம் ஸல் கூறிய அறிவுரையை அறிஞர்களின் தலைவர் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


அப்படிப்பட்ட எளிமையை நாமும் நம் வாழ்க்கையில் கடை
பிடிப்போமாக. ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக