ஞாயிறு, 3 ஜூன், 2012

வேண்டாம் நம் பிள்ளைக்கு





 
சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும் 
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்! 
 


படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும் 
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!


தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!


தேம்பி அழ 
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!


-யாசர் அரஃபாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக