புஸ்தாம் நகர எல்லையில் மக்கள் கூடி
நின்று அவர்களின் திருவருகைக்காக காத்து நின்றார்கள். ஊருக்கு செல்வது என்ற
வார்த்தையே இனிக்கும் வார்த்தை. அதிலும் தனக்கு அங்கு வரவேற்ப்புடன் செல்வது
என்றால் கேட்க்கவும் வேண்டுமா....?
நீண்ட நாள் கழித்து தம் ஊர் மக்களை
பார்க்கிறார்கள். அபூயஜீத் ரஹ்
மக்கள் கூட்டத்தைப்பார்த்த்தும்
அவர்களின் இதயத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
உடனே பையில் வைத்திருந்த ரொட்டி துண்டை எடுத்து சாப்பிட்டார்கள். மாதமோ....ரமலான்...! நேரமோ நோன்பு திறக்கும் நேரமாக இல்லை.! இந்த நேரத்தில் பெரியார் அபூயஜீதுல் புஸ்தாமி ரொட்டியை உண்ணப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனால் வரவேற்க வந்திருந்த அம்மக்கள் வந்த வழியே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். சில மெய்யறிவுடைய நல்லடியார்களைத்தவிர.
உடனே பையில் வைத்திருந்த ரொட்டி துண்டை எடுத்து சாப்பிட்டார்கள். மாதமோ....ரமலான்...! நேரமோ நோன்பு திறக்கும் நேரமாக இல்லை.! இந்த நேரத்தில் பெரியார் அபூயஜீதுல் புஸ்தாமி ரொட்டியை உண்ணப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனால் வரவேற்க வந்திருந்த அம்மக்கள் வந்த வழியே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். சில மெய்யறிவுடைய நல்லடியார்களைத்தவிர.
பெரியார் அவர்களுக்கோ மக்கள்
கூட்டத்திலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்ப்பட்டது. சிறிது
நேரத்திற்க்கு பிறகு மனமே....மகிழ்ச்சி
கூத்தாடினாயே போதுமா உனக்கு இந்த தண்டனை..
என்று மனதை அடக்கினார்கள் பிறகு
நண்பர்களைப் பார்த்து வழிப்பயணத்திலிருப்பவனுக்கு நோன்பு கடமையாவதில்லை என்பதை
இந்த மக்கள் எப்படி மறந்தார்கள்...? என்று நண்பர்களிடம் கேட்டுவிட்டு வீடு
நோக்கி நடந்தார்கள். வீட்டு வாசலுக்கருகில் நெருங்கிய போது
இறைவா......! நாடு சுற்றும் என் மகனை
நல்லவனாக்குவாயாக.....!
பெரியோர்களின் நெஞ்சங்களை அவனுடைய
சேவையால் மகிழ்ந்திடச் செய்வாயாக....! அவனுடைய நிலைமையை சீராக்கி உன் அருளுக்கு உரியவனாய் திகழச் செய்வாயாக...
என்று இருக் கையேந்தி இறைவனிடம் தாயார்
வேண்டிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் அபூயஜீதுல் புஸ்தாமி அவர்கள் மெய்சிலிர்த்து
நின்றார்கள். பிறகு கதவைத் தட்டினார்கள்.
யாரது....என்று உள்ளிருந்து குரல் வந்த போது அம்மா...நான் தான் உங்கள்
பரதேசி மகன் அபூயஜீதுல் புஸ்தாமி என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் சென்ற
பெரியார். தாயின் உருக்குலைந்த உருவைப்பார்த்து கண்கலங்கி நின்றார்கள். மகனை அணைத்துக்
கொண்ட தாயும் தேம்பி அழுதார்கள்.
ஓரு சமயம் அவர்கள் சொற்ப்பொழிவு
நிகழ்த்தி கொண்டிருந்த போது. மனிதன் எப்பொழுது பணிவுடையவனாகிறான். என்று
கேட்க்கப்பட்டது. உடனே பெரியார் அவர்கள் இந்த உலகில் தனக்கென ஓரு கெளரவம்
இருக்கிறது...அந்தஸ்த்து இருக்கிறது...என்று என்னாமல் தன்னைவிட தாழ்ந்தவன் இந்த
உலகில் எவனுமில்லை என்று தன்னைப் பற்றி மனிதன் கணிக்கின்ற போது தான்
பணிவுள்ளவனாகிறான். என்று பதில் கூறினார்கள் தனக்கு ஓரு சிறப்பு இருப்பதாக
நினைக்கிறபோது தான் மனிதன் உள்ளத்தில் அவனையறியாமலேயே ஓரு கர்வம் வளர்கிறது. அவனது
கண்ணியத்தில் சிறிது மாசு ஏற்ப்படுவதாக இருந்தாலும் அவன் கொதித்து எழுகிறான்...குமுறுகிறான்.
இந்த ஆத்திரத்தால் அவனது செயல் இறைவனுக்கென்றே அமையாமல் அவனுக்கென்றே அமைக்கிறது.
அதனால் அவன் அல்லாஹ்வை மறக்கிறான். என்பது பெரியாரின் பொன்மொழிக்குரிய கருத்தாக
அமைகிறது.
ASSALAAMU ALAYKKUM.........
பதிலளிநீக்குSNR SHOWKATH ALI MASLAHI
பதிலளிநீக்குCALL 9865804000