சனி, 30 ஜூன், 2012

இன்னலைப் போக்கிய இமாம்.



ஹஸ்ரத் ஹாஜி காரி அப்துல் பாரி பாகவி. வேலூர்.   


கணவன் மனைவி இருவர் இருந்தனர். கணவன் மனைவியை மிகவும் நேசித்தான். ஆனால் மனைவிக்கோ கணவனைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆகவே எப்படியேனும் அவனைப் பிரிந்து சென்று விட வேண்டும். என ஆசைப்பட்டாள். தலாக் திருமண விடுதலை செய்து விடு என்று கேட்டாள்…?


கணவன் தலாக் கொடுப்பானா....?  அவன் தான் அவளை நேசிக்கிறானே.? அவளை அவன் கஷ்டப்படுத்துவதில்லை. அவன். தன் அன்பை பலவகையிலும். வெளிப்படுத்தியும் கூட அவள் அறுத்துக் கொண்டு ஓடிவிடவே விரும்பினாள்.


ஓரு நாள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மனைவி என்னவோ கோபமாய்க் கூறினாள். அதற்க்கு பதிலளிக்கும் வகையில் கணவனும் கடிந்துரைத்தான். அவளுக்கு கோபம் வந்தது விட்டது. பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவன் எவ்வளவோ பேசியும் வாய் திறப்பதாயில்லை.


கணவனுக்கு கோபத்தின் அளவு கூடியது. நாளை சுபுஹ் சாதிக் (அதிகாலை) நேரம் வருவதற்க்கு நீ என்னிடம் பேசிவிட வேண்டும். உன் மீது தலாக் நிகழ்ந்து விடும். என்று வெடித்தான். இந்தப் பேச்சினால் விளையவிருக்கும் அவன் அப்போது அறிந்து கொள்ளவில்லை.

கணவனின் இந்தப் பேச்சைக் கேட்ட மனைவி மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள். எந்த விடுதலைக்காக அவள் ஏங்கிக் கொண்டிருந்தாளோ அந்த விடுதலை, நாளை அதிகாலை வரை அவனிடம் பேசாமல் இருந்தால் போதும் அது தானாக கிடைத்துவிடும். என்று கணித்து வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டாள். அவன் வந்த போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி.
நேரம் செல்லச் செல்லக் கணவன் மிரட்ச்சியடைந்தான். விவேகம் இல்லாமல் பேசி விட்டோமே. மனைவியை இழக்க நேர்திடும் போல் இருக்கிறதே என்று கலங்கினான். 


மனைவியைக் காப்பாற்றிக் கொள்ள வழிதேடி ஆலிம்களிடம் ஓடினான். நடந்ததைச் சொல்லி ஏதாவது வழி கூறுங்களேன் என்று வேண்டி நின்றான். அழுது கெஞ்சினான்.

ஆலிம்கள் அனைவரும் கைகளை விரித்துவிட்டார்கள் எப்படியாவது அவளை நாளை அதிகாலை பஜ்ருக்கு பாங்கு சொல்வதற்க்கு முன் பேச வைத்துவிடு. தவறினால்.....நாளை பஜ்ருக்குப் பாங்கு சொல்ல ஆரம்பித்ததும். கூண்டைத் திறந்த்தும் பறக்கும் கிளீ போல் உன் மனைவியும் உன் வீட்டை விட்டு மூட்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவாள் என்றார்கள். 


கையைத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடிரென பெரிய ஹஜ்ரத் இமாமுல் அஃலம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் நினைவு வந்தது. எதற்க்கும் கடைசி முயற்ச்சியாக அவர்களிடமும் ஓரு பேச்சி கேட்டுப் பார்த்து விடுவோம். என்று முடிவு செய்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி ஓடினான்.


அவனுடைய நல்ல நேரம் ஹஜ்ரத் அவர்கள் வெளியே அமர்ந்திருந்தார்கள். ஓடிச் சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கெஞ்சினான். ஹஜ்ரத்….!    நான் மோசம் போனேன். ஆத்திரத்தில் அறிவிழந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள். என்றான்.



சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த இமாமுல் அஃலம் ரஹ் அவர்கள், பிடிக்காத மனைவியிடம் பிடி கொடுக்காமல்லவா பேச வேண்டும். நீ ஏன் அப்படி பேசினாய் என்று கேட்டுவிட்டு  சரி கவலைப்படாமல் வீட்டிற்க்கு போ. உன் மனைவி மேல் தலாக் நிகழாது. என்றார்கள்.



மகிழ்ச்சியுடன் புறப்பட்ட அம்மனிதன் பாதையில் முன்பு கண்டு பேசிய ஆலிம்கள் சிலரை சந்தித்தான். அவர்கள் இமாமுல் அஃலம் என்ன சொன்னார்கள். என்றுகேட்டார்கள்.  என்ன இருந்தாலும் பெரிய ஹஜ்ரத், பெரிய ஹஜ்ரத் தான். தலாக் ஆகாது எனக் கூறிவிட்டார்கள். என்றான்.

இமாமுல் அஃலம் அறிவித்த முடிவை அறிந்து உலமாக்கள் வியந்தார்கள். சட்டத்தில் சிக்கல் ஏதும் இல்லை. மனைவி பேசாவிட்டால் தலாக் நிகழ்ந்து விடும். பொழுது விடிந்தால் தெரியும் ஹஜ்ரத் அவர்களின் பேச்சி என்று ஆலிம்கள் ஓருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.



அவர் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போல இருக்கே என கவலையடைந்த கணவன். அன்றிரவெல்லாம் எவ்வளவோ முயற்ச்சிகள் செய்துப் பார்த்தான். அவளைப் பேச வைக்க அவனால் முடியவில்லை. அயர்ந்து உறங்கிப் போனான். பாங்கு ஓலி எப்போது கேட்க்கும் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு பொய்த் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி.


அன்று அதிகாலை சுப்ஹுக்கு அரைமணி நேரம் முந்தி இமாமுல்அஃலம் ரஹ் இல்லத்திலிருந்து எழுந்து அருகிலிருக்கும் மஸ்ஜிதுக்குச் சென்று தஹஜ்ஜுத் தொழுகைக்கான பாங்கை உரத்துக் குரலில் உரைத்தார்கள். வின்னில் விரிந்து வலம் வந்தது பாங்கொலி.


குதித்தெழுந்த மனைவி கணவனை அழைத்து தலாக் ஆகிவிட்டது. நான் உன்னிடமிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றாள்எக்களிப்புடன்.  அடுத்து சிறிது நேரத்திற்க்குப் பிறகு சுப்ஹு வேளை வந்த பிறகு பஜ்ர் தொழுகைக்கான பாங்கு கூறப்பட்டது.



பஜ்ர் தொழுகை முடிந்தது. கணவன் இமாம்களுக்கு முன் வந்து சோர்தவனாக நின்றான். இமாமவர்கள் என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்கள். பாங்கு சப்தம் கேட்டதும் தலாக் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறினாள் மனைவி என்றான்.



இமாமவர்கள் கேட்டார்கள். இன்று எத்தனை பாங்குகள் ஓலித்தன... இரண்டு அவன் பதில். முதல் பாங்கைக் கேட்டதும் மனைவி உன்னிடம் பேசினாளா...? இரண்டாவது பாங்கு கேட்ட பிறகு பேசினாளா...? இமாம்.  முதல் பாங்குக்குப்  பின் பேசினாள் அவன் பதில். முதல் பாங்கு சுப்ஹு சாதிக் நேரமல்ல தஹஜ்ஜுத் நேரம் அது சுப்ஹு சாதிக்குக்கு முன்பே அவள் உன்னிடம் பேசிவிட்டாள். ஆகவே தலாக் ஆகவில்லை எனக் கூறி அவனை அனுப்பினார்கள் இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ்


இமாமுல் அஃலம் அவர்களின் செயல்பாட்டை அறிந்து ஆலிம்கள் அதிசயித்துப் போனார்கள்.


                            
                           (மஜாலிஸே ஹகீமுல் இஸ்லாம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக