திங்கள், 21 மே, 2012

ஓரு கல்லின் கண்ணீர்






நபி மூஸா (அலை) அவர்கள் கல் ஓன்று அழுவதைக்கண்டு ஏன் அழுகிறாய்..?  என்று கேட்டார்கள். ( வகூதுஹன்னாசு வல் ஹிஜாரா) (2:24) நரகத்திற்க்கு மனிதர்களும் கற்களும் இரையாவார்கள். என்ற இந்த வசனத்தை கேட்டது முதல் அச்சம் கொண்டு அழுது கொண்டிருக்கிறேன். என்றது கல்.
உடனே நபி மூஸா (அலை) அவர்கள் யா அல்லாஹ்... இந்த கல்லை நரகத்தில் போடாதே என துஆச் செய்தார்கள். அந்த கல்லுக்கு ஆறுதல் கூறினார்கள். மகிழ்ச்சி அடைந்த கல் அத்துடன் அழுவதை நிறுத்தி விட்டது. நபி மூஸா (அலை) அவர்கள் சென்று விட்டார்கள்.

கொஞ்ச காலத்திற்க்கு பிறகு நபி மூஸா (அலை) அவர்கள் திரும்ப அந்த வழியாக வந்த போது மீண்டும் அந்த கல் அழுது கொண்டு இருப்பதை கண்டார்கள். மீண்டும் ஏன் அழுகிறாய்... உனக்கு நான் துஆ செய்தேன் ஆறுதல் அளித்தேன். உன்னை நரக நெருப்பில் இடுவதில்லை என மகிழ்ச்சி செய்தியையும் அல்லாஹ்விடமிருந்து பெற்றளித்தேனே பிறகு ஏன் அழுகிறாய்....என்று கேட்டார்கள்

கல் கூறியது... நான் அழுததால் தானே அந்த செய்தி கிடைத்தது. அது அந்த அழுகையின் பலன். பெரும் பலனை பெற்றுத்தந்த அந்த அழுகையை. நான் ஏன் விட வேண்டும். என்று எண்ணியே அழுகிறேன்.


அவ்வண்ணமே....ஓரு முஃமினின் தவ்பா இஸ்திஃபார். துஆ. இருக்க வேண்டும்.  தவ்பா இஸ்திஃபார். துஆ எவ்வளவு தான் செய்து கொண்டிருந்தாலும் அச்சமற்று அவைகளை விட்டு விட கூடாது.
அவைகளை எப்போதும் செய்து வர வேண்டும்
அது போன்ற உள்ளத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக. ஆமீன்.

1 கருத்து:

  1. இந்த மாதிரி செய்திகளுக்கு ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு