அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரு துணைவியரின்
இல்லத்தில் அன்று இருந்து கொண்டிருக்கின்றர்கள்..அப்போது மற்றொரு மனைவியின்
இல்லத்திலிருந்து ஓருத் தட்டைப் பாத்திரம் வருகின்றது. அதிலே சுவை மிக்க உணவும்
இருந்த்து. அந்த அன்னை தமது வீட்டில் சமைத்திருந்த உணவை நபியவர்கள் இருக்கும்
இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த அனனைக்கு யாருடைய வீட்டில்
நபியவர்கள் இருக்கிறார்களோ அந்த அன்னைக்கு இது பிடிக்கவில்லை.
நபியவர்களுக்கு நாம சாப்பாடு
கொடுக்கமாட்டோமா.... நம் வீட்டு உணவை நாயகம் சப்பிட விடாமல் அந்த உணவு தடுத்து
விடுமோ...என்ற உணர்வு மேலிட்டிருக்கலாம் போலும்...அவ்வளவுதான். அந்த உணவை கொண்டு
வந்த பணியாளரின் கரத்தை தட்டி விட்டார்கள்.தட்டு கீழே விழுந்து உடைந்து நொறுங்கி
விட்டது. (அது சில்வரோ பித்தளையோ
அல்லவே.)
கொண்டு வந்த பணியாளர் என்ன செய்வதென தெரியாமல்
திகைத்து நின்றார். நிலமையை புரிந்து கொண்ட நபி ஸல் அவர்கள் சற்றும்
அதிர்ச்சியோ...ஆத்திரமோ அடையவில்லை.
அப்படியே குனிந்து அந்தத் தட்டையின்
உடைந்த பாகங்களைப் பொறுக்கினார்கள். பின்னர் அதிலிருந்து சிறிய உணவையும் ஓன்று
விடாமல் சேகரித்து பத்திரமாக வைத்தார்கள்.அப்போது அவர்களின் அமுத வாயிலிருந்து “உங்கள் அன்னை ரோஷம் கொண்டு விட்டார்” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் வரவில்லை.
நிலமை விபரீதமாகிப் போனதையறிந்து பதறிப்
போய் நின்ற பணியாளர் (உடனே அங்கிருந்து வெளியேற முயன்றவரிடம்) சற்றுப் பொறுத்திருக்கச் செய்த மாநபி ஸல் அவர்கள் தட்டையை உடைத்து விட்ட அந்த
அன்னையிடம் வேறொருத் தட்டையை வாங்கிஉடைந்த தட்டைக்கு பகரமாக்க் கொடுத்து
விட்டார்கள். உடைந்த தட்டையை இங்கயே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டார்கள். (இந் நிகழ்ச்சியை அனஸ் ரலி அவர்கள் அறிவிக்க புகாரி
முஸ்லிம் கிதாபுகளில் பதிவாகியுள்ளது. மிஷ்காத் பக்கம்.255)
இந்த ஹதிஸில் நமது சிந்தனையை செலுத்தும்
போது பல அரிய விளக்கங்கள் பளிச்சிடுங்கள்.
1. கருணைக்கடலான காருண்ய நாதர் நபி (ஸல்)
அவர்களின் மீது அவர்களின் துணைவியர் அனைவரும் கொண்டிருந்த அன்பும்...பாசமும்
புலனாகிறது. அதன் காரணமாகத் தான் வீட்டுக்கு வராமல் இன்னொரு மனைவியின்
வீட்டில் இருக்கும் நபியவர்களுக்குத் தமது சமையல் சாப்பாட்டை வலியக் கொடுத்து
விடுகிறார்கள். அந்த மாதரசி. அதே காரணமாகத் தான் இந்த வீட்டின் அன்னைக்கு ரோஷம்
பீறிட்டு வருகின்றது. இருவரின்
அன்பும்...பாசமும் இந்த ஹதிஸ் காட்டுகின்றது.
2. நபிகளாரின் நற்க்குணத்துக்கு இதிலும்
சான்று உள்ளது. எவ்வளவு பொறுமை....? எத்தனை நிதானம்….? தனக்காக வந்த உணவைக் கொண்டு வந்த பணியாளாரின் கையிலடித்துத் தட்டை உடைத்து
அதிலிருந்த சாப்பாட்டை சிந்திச் சிதறடித்த அந்த செயலை வேறுயாராக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளவே முடியாது (நம்மை போன்றவர்கள் என்றால்.....நிலைமையே வேறு….)
ஆனாலும் கூட அன்புக்கும் அடக்கத்துக்கும்
பிறப்பிடமாய் திகழ்ந்த ஆருயிர் வேந்தர் அஹ்மது நபி (ஸல்) அவர்கள் அதை கையாண்ட விதம்
எவ்வளவு மென்மையானது என்பதைக் காண்கிறோம். ஏன் இவ்வாறு செய்தாய் என்று கூட கேட்கவில்லை.
அவ்வாறு செய்ததற்க்கான காரணத்தை நம் போன்றோருக்கு மிக எளிய வார்த்தைகளில் ஓரே
வாக்கியத்தில் சொல்லி புரிய வைத்துவிட்டார்கள். “உங்கள் அன்னை ரோஷம் கொண்டு விட்டார்கள்.” இந்த வார்த்தையில் தான் எத்தனை தத்துவங்கள்.....? இதைக் கேட்ட
மாத்திரத்தில் நமக்கே கூட அவர்களின் செயலால் கோபம் ஏற்ப்படவில்லையல்லவா....? கியாமத் நாள் வரை வரவிருக்கின்ற தனது உம்மத்தினர்
எவருக்கும் அந்த அன்னை மீது சீற்றம் வந்து விடாதபடி எத்தனை அர்த்த புஷ்டியான
வார்த்தை அது.....? நமது உள்ளத்தில் சிறு
தவறான அபிப்பிராயம் கூட வந்து விடக்கூடாது என்ற தூரநோக்கோடு அந்த வாக்கியம்
வெளிவந்துள்ளது. என்று இமாம்கள் விளக்குகின்றனர்.
3. அத்தனை நிகழ்ச்சிக்கும் மத்தியில் நபியியவர்கள் நீதியை
நிலை நாட்டுகின்ற வியப்பும் நமக்கு ஏற்ப்படாமலில்லை. ஆம்…! தம் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தான் தட்டு
உடைந்திருக்கிறது என்றாலும் உடைத்தது தவறு தானே....? அதற்க்கு பரிகாரம்
வேண்டும் தானே...? எனவே நி உடைத்து விட்ட
தட்டையை நீயே வைத்துக் கொண்டு உன் செயலுக்கு பரிகாரமாக உனது நல்ல தட்டை கொடுத்து
விடு என்று தம் துணைவியருக்கு கட்டளையிட்டு அதை வாங்கி அந்த பணியாளரின் கையில் கொடுத்து
விட்டதன் மூலம் அன்பும் பாசமும் வேறு...நீதி நேர்மையும் வேறு என்பதை நிருபித்து
விட்டார்கள்.
4.நபிகளாரின் சமயோஜிதமான ராஜ தந்திரம்
இங்கே பளிச்சிடுகின்றது. அந்த பணியாளர் அந்த வீட்டை விட்டு உடனே வெளியே சென்று
அந்த அன்னையிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருந்தால்....அங்கே இன்னொரு பிரச்சனை
விஸ்வருபம் எடுத்திருக்கும். அவர்கள் இங்கே நேரில் வந்து .....எப்படி நான் கொடுத்து
விட்ட உணவைத் தட்டி விடலாம் என்று கேட்க்க...இவர்கள் நீ எப்படி என் வீட்டிற்க்கு
கொடுத்து விடலாம் என்று எதிர் கேள்வி கேட்க்க .....எங்கே போய் முடியும்…?
அதற்க்கெல்லாம் சற்றும் சந்தர்ப்பம்
தராமல் அந்த பணியாளரின் கையில் உடையாத வேறெருத் தட்டைக் கொடுத்தனுப்பியதால் பிரச்சனை
எவ்வளவு லேசாகி விட்டது பாருங்கள். குடும்பத்தில் இப்படி நிதானமாகவும் பொறுமையாகவும்
அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொள்ளும் கடமை ஆண்களுக்குத் தான் உண்டு. பெண்கள் சில
சமயங்களில் இப்படி எதையாவது செய்து விட்டால்
நாம் அவர்கள் மீது அவசரப்பட்டு விடக்கூடாது.
நாம் பெட்டிகளையும் பீரோவையும் உடைத்தால்....அப்புறம் அங்கே பத்ரும்......உஹதும்
அரங்கேற வேண்டியது வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக