ஹஜரத் அலி ரலி அவர்கள் கூறுவது. நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஓருவனிடத்தில் என்னைப்பற்றி கூறப்பட்டு அவன் என் மீது உடனே ஸலவாத்துக் கூறவில்லை
என்றால் அவன் தான் மகா வடிகட்டிய கஞ்சனாவான்.
திர்மிதி
இந்த ஹதிஸின் மூலம் நபி ஸல் அவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவர்கள் நாயகத்தின்
நாவிலே விழுகிறார்கள் என்பது தெரிகிறது.
கருனையின் முழு உருவமாக திகழும் காருண்ய நபி ஸல் அவர்கள் தம் மீது ஸலவாத்
சொல்லாதவர்களை பற்றி ஏன் இவ்வளவு கடுமையாக சாட வேண்டும்...
இதுவும் ஓரு வகை சுயநலம் தானே... எனறு
சிலர் எண்ணக்கூடும்.
இல்லை இதில் சுயநலமே இல்லை என
கூறுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
உங்கள் வீட்டில் ஓரு கிணறு இருக்கிறது. அதற்க்கு சுற்றுச சுவர் சரியாக இல்லை.
அதில் நாலுபேரும் தண்ணீர் இறைத்துச் செலவார்கள். சுற்றுச சுவர் சரியாக இல்லாத கிணற்றில் உஷாராக
நின்று தண்ணீர் இறைக்க வேண்டிய ஓருவன் கவனக் குறைவாக....அசட்டுத் தனமாக....நின்று
தண்ணிர் இறைக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந் நிலையில் அவனை பார்க்கும்
போது உங்களுக்கு மூக்கை பொத்துக கொண்டு கோபம் வராதா..
ஆபத்து வரும் ஆபாயம் தவிர்க்க இயலாதது என்று தெரிந்தும் இப்படி தண்ணீர் இறைக்கிறானே
என்று எண்ணும் நீங்கள் முட்டாளே....பாவியே....அறிவில்லையா...என்று ஏசுகிறீர்கள்
என்று வைத்துக கொள்வோம்...
என்னை போன்ற அப்பாவியொருவன் அங்கே நின்று கொண்டு பார்த்தியா.....
சுயநலத்தால் தானே இப்படி அவனை திட்டுகிறாய்.
என்று கூறினால் அது எவ்வளவு தவறான கருத்தாகுமோ...
அதை விட தவறானது...மேலே கூறப்பட்ட ஹதிஸில் பெருமானார் ஸல் அவர்கள்
தமக்காக...தமது நலனுக்காகத் தான் இவ்விதம் கூறுகிறார்கள் என எண்ணுவது.
உண்மையில் நபி பெருமானார் ஸல் அவர்கள் மீது. அவன் ஸலவாத் கூறாததால்
நபியவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை....கவலையும் இல்லை.. அவர்களுக்கு எந்த
தேவையும் இல்லை.
நஷ்டமும்...கஷ்டமும்...கவலையும்...தொல்லையும்...பெருமானாரின் திருப்பெயரைக்
கேட்டும் கூட ஸலவாத் சொல்லாமல் இருந்தானே அவனுக்கு தான்.
ஏனெனில் இவன் கூறுவது ஓரு ஸலவாத் தான்... கூலியாக பெருவது பத்து..எழுபது...அதற்க்கு
மேலும் கூட.
இந்த மனிதனோ....நன்கு கிடைக்கப் பெறும் கூலிகளையும் கை நழுவ விட்டான். அத்தோடு
அல்லாஹ்வின் விரோதியாகவும் தன்னை ஆக்கிக் கொண்டான். எப்படி என்றால்...நபி ஸல் அவர்கள் மற்றொரு
இடத்தில் கூறியிருக்கிறார்கள்.
البخل
عدوالله ولو كان عابدا
கஞ்சன் அல்லாஹ்வின் விரோதியாவான்.....அவன் பெரும் வணக்கசாலியாக இருந்தாலும்
சரியே...!
உலகில் நாம் தற்போது கண்டு வரும் கஞ்சர்கள்...அனைவரும் அடுத்தவருக்குத் தான்
அள்ளி கொடுக்காதவர்களாக
காட்சியளிக்கிறார்கள்.
அவர்களில் யாராவது ஓருவன் அடுத்தவர்களுக்கும் கெடுக்காத்தோடு தனக்கும் கால்
பைசா கூட செலவழிக்காதவனாக இருந்தால் அவனை வடிகட்டிய கஞ்சன் என்றல்லவா கூறுகிறோம்.
அதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன் தான் நபியவர்கள்
கூறிப்பிடும் ஆசாமி.
அவனை இப்படியும் சொல்லலாம்...இதற்க்கு மேலும் சொல்லலாம்..என்று தானே இப்போது
உங்கள் நெஞ்சம் சொல்கிறது.
அந்த படு கஞ்சன் என்ற இழி சொல்லிலிருந்து நீங்களும் பாதுகாப்பு பெற்றிட
ஓயாது
முழங்குவோம் ஓப்பற்ற ஸலவாத்தை..
صلي
الله علي محمد صلي الله عليه وصلم
صلي
الله علي محمد صلي الله عليه وصلم
صلي الله علي محمد يا ربي صل عليه وصلم
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக