ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்தாய்
உன் கருவறை என்
அரன்மணை
உன் மடி தான் என்
சொர்க்கம்.
இம்மையில்...
உயிரை ஊணாக்கி
நடை தந்தாய்!
நலம் தந்தாய்!
நற் கல்வி
தந்தாய்! நானிலம் போற்ற
நல் உள்ளம்
தந்தாய்! மொழி தந்தாய்!
நல் வழி தந்தாய்!!உனக்கு
நான் என்ன
தந்தேன்!
தெரியவில்லையே
அம்மா!
என் சோகங்களின்
சுமை தாங்கி நீயம்மா!
அம்மா! இன்று
நீ எனக்கில்லை!
இனி இல்லை
எனும் சொல்லை
இல்லைஎன ஆக்கி விடு இறைவா!
என் வேதனைகளின்
வடிகால்
உன் மடிஎங்கே
என் தாயே!
உணவு
பிடிக்கவில்லையென
உன் கரத்தை உதறி
விட்ட பாவி நான்!
இன்று ஓராயிரம்
கரங்கள் ஊட்ட வந்தும்
எங்கே அம்மா
உன் பொற்கரங்கள்?
அம்மா அம்மா
அம்மா
அம்மா அம்மா
அம்மா!
கோடி முறை
அழைத்தும்
மௌனங்கள்
விடையானது!
எங்கே
தேடுவேன்!
என்னுள்ளா? இயற்கையிலா?
எங்கு தேடுவேன்
அறுபது வயது
குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்
தேடி!
வர
மாட்டாய்!!தெரியும் எனக்கு
சுவர்க்கத்தின்
வாயினில் முன் நிற்கிறாய்!
சென்று வா என்
தாயே!!
வா அம்மா! நீ
தந்த வாழ்வு இது!
உன் நினைவினில்
வாழ்ந்து முடிக்கிறேன்!!
அன்னையர் தினம்
வருடம் ஓர் நாளாம்!
யார் சொன்னது?
வாழும் ஒவ்வொரு
கணமும் உன் தினந்தான்!1
உனை மறந்த
வாழ்வு எனில் இறந்து போவேன்!
இறப்பு ஒன்றில்
தான் உன் நினைவும் இறக்கும்!
அம்மா நீ இல்லையெனில்
என் தமிழும் அகரம்
இழக்கும்!
இரவுகளின்
கனவுகளில் உயிர்த்தெழுந்தாய்!
இன்றும் வா!
பழங்கதைகள் பேசித் தீர்ப்போம்
உன் இறப்பின்
விடைபெறும் இறுதி வேளை!
உன் கால்கள் என்
மடியில்!
ஆசை தீர
வருடுகிறேன்.
கடைசி ஸ்பரிசம்!
எறும்பு ஒன்று நடை
போடுகிறது உன் காலில்!
மெல்ல தட்டிவிட்டு
உனைப் பார்த்தேன்
உன் இதழ்களின்
கடையோரம்
புன்னகைக்
கீற்று!வந்து போனது!
உன் உயிர்
மூச்சும் மறைந்து போனது!
உலகம் கிழித்து கதறுகிறேன்
அம்மா அம்மா
என்று!
இன்று வரை உன்
இறுதி சிரிப்புக்கு
விடை காணாமல்
விழிக்கிறேன்.
மரணம் கூட உனக்கு
சுகமானதோ!
எல்லா இதயங்களும்
ஒலிக்கும் ’லப்டப்’ என்று
என் இதயமோ அம்மா
அம்மா என்றே அழைக்கும்!
அம்மா எனும்
மந்திரச் சொல்
மயக்கிப் போட்டது
இப்பூவுலகை!
இன்று வரை
அம்மாவைத் தேடி
அழையும் முதிர்
குழந்தை!
Engr.Sulthan
அன்னையர்
தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக