புதன், 23 மே, 2012

திருடர்கள் பெற்ற தலாக்.



ஓரு வீட்டில் சில திருடர்கள் புகுந்தனர்.  வீட்டுக்காரனை பிடித்து கட்டிப் போட்டனார். வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பொறுக்கி மூட்டை கட்டிக் கொண்டனர். நாடிய பொருட்கள் கிடைத்தது. ரொம்ப மகிழ்ந்தனர்.

பிறகு வீட்டுக்காரனிடம் வந்து திருடர்களை பற்றிய தகவலை யாரிடமாவது நான் தெரிவித்தால் என் மனைவி தலாக் விதவையாகி விடுவாள் என்று கூறி சத்தியம் செய் என்றனர்.  மறுத்தால் கொடுமைப் படுத்துவார்கள் என்ற நிலை.


பயந்து போன வீட்டுக்காரன் வேறு வழியின்றி திருடர்களை பற்றி வெளியில் நான் யாரிடமாவது சொன்னால் என் மனைவி தலாக் இது சத்தியம். என்று கூறி விட்டான் மகிழ்ச்சியுடன் மூட்டையை தூக்கிக் கொண்டு திருடர்கள் ஓடி விட்டனர்


வீட்டுக்காரன் வேதனைக்குள்ளானான் திருடியவர்களை நன்றாகத் தெரியும். எல்லாம் அந்த ஊர்க்காரர்கள் தான். என்ன செய்வது.....
திருடியவர்களை பற்றி தெரிவித்தால் துனைவியை இழக்க வேண்டியதாகி விடும். ஆனால் பொருடகள் கிடைத்து விடும். 


திருடர்களைப் பற்றி தெரிவிக்காமலிருந்தால் மனைவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் பொருட்களை இழக்க வேண்டியதாகி விடும்.


மனைவியை இழந்து பொருட்களை காப்பாற்றிக் கொள்வதா...? அல்லது
பொருட்களை இழந்து மனைவியை காப்பாற்றிக் கொள்வதா...?


இப்படி சிந்தனைவயப்பட்ட வீட்டுக்காரன் முடிவுகாண முடியாமல் திணறிப் போனான் சஞ்சலமடைந்தவனாக இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்களிடம் சென்றான்.


இமாம் அவர்கள் அன்புடன் ஏன் மிகவும் கவலையுற்றவராக காணப்படுகிறீர்கள் என விசாரித்தார்கள். கோவென்று கதறியவன் செல்லவும் முடியாத நிலையில் நான் வேதனைப் படுகிறேன்.என்றான்.


செல்ல முடியாத  வேதனை என்றால் எப்படி...சொன்னால் தானே தெரியும். சொல் என்றார்கள் இமாம் அபூஹனிபா ரஹ் அவர்கள்.
சொன்னால் என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது என்றான். சரி தெளிவாக சொல்லா விட்டாலும் விஷயத்தை மூடி மறைத்தாவது சொல் என்றார்கள் இமாம் அவர்கள்.


ஹஜ்ரத்...... என் வீட்டில் திருடர்கள் புகுந்து கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.அவர்கள் நம் மஹல்லாவை சேர்ந்தவர்கள்தான். அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால்  அவர்களைப் பற்றி நான் வெளியில் சொன்னால் என் மனைவி தலாக் ஆகி விடுவாள் இது சத்தியம் என கூறும் படி என்னை பயமுறுத்தி சத்தியம் செய்ய வைத்து விட்டார்கள்.நானும் சத்தியம் செயது விட்டேன் என்றான் வீட்டுக்காரன்.


திருடர்களை பற்றிய விவரங்களை நான் வெளியிட்டால் தலாக் ஆகி நான் என் மனைவியை இழந்து விடுவேனே...என பயமாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டான்.


அவ்வளவுதானே என்று சாதாரணமாக கேட்ட இமாம் அவர்கள். நி பயப்படாதே..நி மனைவியை இழக்க வேண்டிய நிலையும் வராது. திருடு போன உன் பொருட்களும் திரும்ப கிடைத்து விடும் என கூறினார்கள்.  நாளை பகல் லுஹர் தொழுகைக்கு நான் உங்கள் மஹல்லா மஸ்ஜிதிற்க்கு வருகிறேன்.. கவலைப்படாமல் நி போ.


உடனே இந்த தலாக் செய்தி கூஃபா நகரில் பரவியது. உலமாக்கள் புகஹாக்கள் மத்தியில் புயலைக் கிளப்பியது...அவன் சத்தியமல்லவா செய்திருக்கிறான். பொருளை விரும்பித் திருடர்களைக் காட்டிக் கொடுத்தால் மனைவியைக் கை கழுவ வேண்டியது வரும்

.மனைவியைக் காப்பாற்ற நினைத்தால் பொருட்கள் பறி போய் விடும்.]
 இரண்டுமே உனக்கு கிடைக்கும். எதையுமே நி இழக்க வேண்டியதில்லை எனறு இமாம் அவர்கள் எப்படி கூறினார்கள். 

என்று திண்ணைக்கு திண்ணை. தெருவுக்கு தெரு. விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

 
இமாமுல் அஃலம் அபூஹனிபா ரஹ் அவர்கள் சொன்னது போல் திருடு நடந்த மஹல்லா மஸஜிதிற்க்கு மறு நாள் லுஹர் தொழுகைக்கு போனார்கள். பெரிய கூட்டம். தொழுகை முடிந்த்தும். இமாமவர்கள் மஸ்ஜிதின் ஓரு வாசலை தவிர மற்ற வாசல்களை மூடி விடும் படி உத்தரவிட்டார்கள்.


நடப்பதை கவனிக்கவே..அல்லது தமாஷ்பார்க்கவோ நினைத்தார்கள் போலும். திருடர்களும் தொழுகைக்கு வந்திருந்தார்கள். திருடர்கள் ஆனால் என்ன....? அவர்களும் தொழுகத்தானே வேண்டும்.


மஸ்ஜிதின் திறந்த வாசலின் ஓரு பக்கத்தில் இமாமவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். பொருட்களை திருடக் கொடுத்த மனிதரை அழைத்து மறுபக்கம் உட்கார செய்து கூறினார்கள்.


ஜனங்கள் வரிசையாகப் போவார்கள்: திருடர்கள் அல்லாதவர்கள் போகும் போது. இவர் அல்ல...இவர் அல்ல”…  என்று சொல்ல வேண்டும். திருடர்கள் வரும் போது நீ எதுவும் கூறாமல் இருந்து விட வேண்டும் என்றார்கள்.


திருடர்களை காட்டிக் கொடுக்காமலேயே திருடர்களை இனம் காண இமாமவர்கள் வகுத்த திட்டம் மிகவும் விவேகமானதல்லவா..


பொருளை இழந்தவர் பொருளை திரும்ப பெற்றார். மனைவியை இழக்கும் அபாயத்திலிருந்து தப்பி விட்டார். காப்பாற்றப்பட்டார்.


கூஃபா உலமாக்கள் அதிசயித்தனர்...மக்களோ இமாமவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
                          மஜாலிஸே ஹகீமுல் இஸலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக