திங்கள், 21 மே, 2012

எறும்பு புகட்டும் பாடங்கள் எத்தனை.....!



ஓரு முறை சுலைமான் அலை அவர்களும் ஓர் எறும்பும் பின் வருமாறு உரையாடுகிறார்கள்....

சுலைமான் அலை::  அஸ்ஸலாமு அலைக்கும்

எறும்பு:: வ அலைக்கும் ஸலாம்...

சுலைமான் அலை:: மனிதனைக் கண்டால் நி ஏன் விரண்டோடுகிறாய்....?

எறும்பு:: அவன் மறதியிலே மூழ்கி வாழ்கிறான்....அவனருகே சென்றால் அம் மறதி நம்மையும் நம்மையும் ஓட்டிக் கொள்ளுமே....அதனால் தான்.!

சுலைமான் அலை:: சரி...... நீ நிர்வானமாக ஏன் இருக்கிறாய் ஆடை அணியலாமே...?


எறும்பு:: உலகுக்கு வரும் போது நிர்வானமாகத் தானே வந்தோம்...உலகை விட்டு போகும் போது  நிர்வானமாகத் தானே போகப் போகிறாம் அதனால் தான் எப்போதுமே நிர்வானமாகவே இருந்துவிடலாமென்றிருக்கிறோம்.!

சுலைமான் அலை:: உனக்கு தேவை எதுவுமிருந்தால் கேள்....நிறைவு செய்கிறேன்.

எறும்பு:: நீரோ தேவையுள்ளவர்... தேவை உள்ள உம்மிடம் என் தேவையைக் கேட்டு என்ன பலன்...அதற்க்கு தேவையே இல்லாத அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமே......!    சரி..... அல்லாஹ் உமக்கு அளித்தவைகளில் பெருமை வாய்ந்த்தாக எதை கருதுகிறீர்....?

சுலைமான் அலை:: எனது மோதிரத்தை.  அது சொர்க்கத்திலிருந்து வந்த்துள்ளது.

எறும்பு:: அதன் காரணம் தெரியுமா...?

சுலைமான் அலை::  தெரியாது....என்ன காரணம்.....?

எறும்பு::  உமக்கு அளிக்கப்பட்டிருக்கும்...இப் பரந்த பூமியியிலன பேரரசானது அல்லாஹ்விடம் அந்த மோதிரத்தின் வளையத்தை விட சிறியது என்பதை நீர் உணந்து பெருமை கொள்ளாமலிருக்கத்தான். வேறு ஏதேனும் சிறப்பு உண்டா....?

சுலைமான் அலை:: அல்லாஹ் எனக்கு காற்றை வசப்படுத்தித் தந்துள்ளான்.

எறும்பு :: அதன் சிறப்பை நீர் உணர வேண்டும். அதாவது உமக்களிக்கப்பட்டுள்ள எல்லா நிஃமத்துகளும் காற்றை போன்றதாகும். இன்றிருக்கும் நாளை இருக்காது. வேறு ஏதேனும் சிறப்பு உண்டா...?

சுலைமான் அலை:: ஆம் மனித இனமும் ஜின் இனமும் எனக்கு வழிப்படுகிறதே....!

எறும்பு:: அதுவும் ஓர் படிப்பினைக்கே.......அல்லாஹ்வின் படைப்புக்களில் பெரும் இனமான ஜின்னும் மனிதனும் உனக்கு வழிப்படும் போது நீ எனக்கு வழிப்பட்டே ஆக வேண்டும்.என அல்லாஹ் உமக்கு உணர்த்துகிறான்.

இவைகளை கேட்ட சுலைமான் அலை அவர்கள் எறும்பின் அறிவாற்றலை எண்ணி வல்லவனுக்கு ஓர் வல்லவனை மாபெரும் வல்லவனான அல்லாஹ் படைத்திருப்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தார்கள்
நாமும் அவ்வியப்பில் மூழ்கத்தானே வேண்டும்.

                                                 நுஹ்ஜதுல் மஜாலிஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக