ஹஜ்ரத் ராபியத்துல் பஸரிய்யா ரஹ் அவர்கள் வரலாற்றில் வரும் ஓரு நிகழ்ச்சி.......
அவர்கள் மறைவெய்தி மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டதும் வானவர்கள் முன்கர் நகீர் வந்து கேள்வி கேட்டார்கள்.
வானவர்கள் மன் ரப்புக..? .வமா தீனுக்க.?.உன் இறைவன் யார்..?
ராபிஆ என் கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்....?
வானவர்கள் வின்னிலிருந்து வருகிறோம்.
ராபிஆ வின்னுக்கும் மண்ணுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது..?
வானவர்கள் ஐநூறு ஆண்டுகள் தொலைவு உள்ளது.
ராபிஆ நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே இறைவனை மறந்து விடவில்லையா....?
வானவர்கள் இல்லை நாங்கள் அல்லாஹ்வை மறக்கவில்லை.
ராபிஆ நீங்கள் ஐநூறு ஆண்டுகள் தொலைவு வந்தும் அல்லாஹ்வை மறக்கவில்லை. நான் மண்ணிண் வயிற்றில் நான்கு அடி ஆழத்தில் தான் குடிபுகுந்திருக்கிறேன். அல்லாஹ்வை மறந்து விடுவேனா....உங்களுக்கு ஏன் அப்படி ஓரு சந்தேகம் வந்தது....? இத்தனைக்கும் நான் உலகில் வாழ்ந்த காலத்தில் அல்லாஹ்வை கொஞ்ச நேரம் கூட மறந்ததில்லை.
வானவர்கள் ஆச்சரியப்பட்டு வாயடைத்து போயினர்.
இந் நிகழ்ச்சியை ராபிஆ அம்மையார் மறைவுக்கு பின் அவர்களை கனவில் கண்ட ஓரு இறை நேசரிடம் அன்னையார் கூறியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக