முஹம்மது_றஸூலுல்லாஹ்
#வினா_விடை.
#பாகம்_8
176 : கதீஜா அம்மையார் அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?
*1 : அபூ ஹாலா பின் ஸுராரா*
*2 :அதீக் பின் ஆயித்*
177 : கதீஜா அம்மையார் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்களா?
*கதீஜா அம்மையார் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை.அவர் மரணித்த பின்பே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்கள்.*
178 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அபுல் காஸிம் என்ற புனைப்
பெயர் ஏன் கூறப்படுகிறது?
*அன்னை கதீஜா அம்மையார் அவர்களுக்குபிறந்த முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு " அபுல் காஸிம்" என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது.*
179 : கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மூலமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிறந்த பெண் மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?
*ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய மூவரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்மரணத்திற்கு பின் ஆறு மாதம் கழித்து அன்னை பாத்திமா பீவி அவர்கள் மரணமடைந்தார்கள்.*
180 : கதீஜா பீவிக்கு ஜனாஸா தொழுகை நடைபெறவில்லை காரணம்?
*அன்று ஜனாஸா தொழுகை சட்ட ரீதியாக கடமையாக்கப்படவில்லை.*
181 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன சொல்லப்படும்?
*அஹ்லு பைத்*
182 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர்கள் யார்?
*1 : ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)*
*2 : ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)*
183 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கொள்ளு பேரர் பெயர் என்ன?
*ஸைனுல் ஆபிதீன்*
184 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஆண் மக்கள் யார்?
*1 : ஹழ்ரத் அப்துல்லா (ரலியல்லாஹு அன்ஹு)*
*2 :ஹழ்ரத் இப்ராஹிம் (ரலியல்லாஹு அன்ஹு)*
*3 : ஹழ்ரத் காஸிம் (ரலியல்லாஹு அன்ஹு)*
185 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குழந்தைகளில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தை யார்?
*ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்*
186 : நபித்துவத்திற்கு பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
*சுமார் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.*
187 : நபித்துவத்திற்கு பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
*சுமார் பத்து ஆண்டுகள்*
189 : ஹிஜ்ரத்தின் போது வழியில் எந்த பெண்மணியின் வீட்டில் பால் அருந்தி களைப்பாறிச் சென்றார்கள்.?
*உம்மு மஃபத் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
190 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அவைக் கவிஞர் யார்?
*ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
191 : பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதல் முஅத்தின் யார்?
*பிலால் இப்னு ரபாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
192 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக மரணமடைந்தவர் யார்?
*பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதம் கழித்து வஃபாத்தானார்கள்.*
193 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வளர்ப்பு மகனார் பெயர் என்ன?
*ஹள்ரத் ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
194 :முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கல்வி ஞானம் பெருக இறைவன் கற்றுக் கொடுத்த துஆ எது?
*ரப்பி ஸித்னீ இல்மா! இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்ற துஆவாகும்.*
195 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எந்த போரில் பற்கள் உடைந்தன?
*உஹது போரில்*
196 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜுக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
*ஹஜ்ஜத்துல் விதா (விடை பெறும் ஹஜ்) என்று சொல்லப்படும்.*
197 :முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மரணித்த மனைவி யார்?
*ஹழ்ரத் ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
198 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திருக்குர்ஆனை கற்று பிறருக்கு கற்பித்து கொடுப்பவர் பற்றி எவ்விதம் புகழ்ந்தார்கள்?
*அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள்.*
199 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த மனைவியாரை அல்லாஹ்வின் கட்டளைப்படி திருமணம் செய்தார்கள்?
*அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.*
200 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய எந்த துணைவியாரை பரிசுத்தப்படுத்தி நூர் என்ற அத்தியாயத்தில் பத்து வசனங்கள் இறங்கியது?
*அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை பரிசுத்தப்படுத்தி பத்து வசனங்கள் இறங்கியது.*
#ஆக்கம்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
#இயக்குனர்_
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.
#திருவிதாங்கோடு.
#குமரி_மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக