திங்கள், 9 செப்டம்பர், 2024

கேள்வி பதில். பாகம் -2

 


26 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தந்தையின் மூலம் வாரிசு சொத்தாக கிடைத்த அடிமையின் பெயர் என்ன..? 


   உம்மு அய்மன்


27 : அபூ லஹபின் அடிமையாக இருந்த ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அவர்களுக்கு பால் கொடுத்துள்ளார்கள் அவர்கள் பெயர் என்ன.?


    ஸுவைபத்துல் அஸ்லமிய்யா... 


28 : முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறது..? 


ரஹ்மத்துலில் ஆலமீன்

(அகில உலக அருட்கொடை) 


29 : முஹம்மது என்ற சொல் குர்ஆனில் எத்தனை தடவை வருகிறது..? 


    நான்கு தடவை... 


30 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த செய்தியை கேட்டவுடன் தன் அடிமையை விடுதலை செய்தவர் யார்...? 


   அபூ லஹப்


31 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால்குடி சகோதரர் யார்..? 


    அப்துல்லாஹ்... 


32 :ஹலீமா அம்மையாரிடம் எத்தனை வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசித்தார்கள்..? 


  நான்கு ஆண்டுகள்


33 : முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்...? 


நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்... 


34 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை..? 


உண்மையாளர், மற்றும் நம்பிக்கையாளர் (அல்அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள்.. 


35 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்ட காலகட்டம்..? 


ஹலீமா அம்மையாரிடம் தங்கியிருந்த காலகட்டத்தில்.. 


36 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரிய தந்தை அபூ தாலிபுடன் தங்களது எத்தனாவது வயதில் சிரியா சென்றார்கள்..? 


    12_ வயதில்...


37 : சிரியாவுக்கு செல்லும் வழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்த கிறிஸ்தவ பாதிரியாரின் பெயர் என்ன.? 


        பஹீரா.. 


38 :அந்த பாதிரியார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கண்ட அற்புதம்..? 


மேகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிழலாக அமைந்தது... 


39 : அந்த பாதிரியார் பெரிய தந்தை அபூ தாலிபிடம் என்ன விஷயத்தை கூறி எச்சரிக்கை விடுத்தார்..? 


சிறுவரை கவனமாக பாதுகாத்து கொள்ளுங்கள். இவரை எதிரிகள் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்... 


40 :கதீஜா பீவி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வேண்டுகோளின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனாவது வயதில் மீண்டும் சிரியாவுக்கு சென்றார்கள்...? 


  25 _ வயதில்.. 


41 : அந்த பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் யார்..? 


     மைஸரா.. 


42 : அந்த பயணத்தின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என்று அடையாளம் கண்டு கொண்ட பாதிரியாரின் பெயர் என்ன.? 


     நஸ்தூரா.. 


43 : கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது எத்தனை...? 


           35.....


44 : ஹஜருல் அஸ்வத் கல்லை வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க அபூ உமைய்யா கூறிய யோசனை யாது..? 


பனூ ஷைபா வாசல் வழியாக முதலில் நுழையும் மனிதரின் யோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுவது.. 


45 : ஹஜருல் அஸ்வத் கல்லை வைக்கும் பிரச்சினைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு தீர்வு கண்டார்கள்...? 


ஹஜருல் அஸ்வத் வைக்கப்பட்ட துணியை எல்லா கோத்திரத் தலைவர்களும் சேர்ந்து தூக்க சொன்னார்கள்... 


46 : கதீஜா அம்மையாரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த போது இருவருடைய வயது எத்தனை..? 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 25_ வயது

கதீஜா அம்மையாருக்கு 40_ வயது.. 


47 :நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா அம்மையாரை மணக்கும் போது மஹராக எதைக் கொடுத்தார்கள்..?


480_ திர்ஹம்...... 


(சில அறிவிப்பில் இருபது மாடுகள் கொடுத்ததாக வருகிறது....) 


48 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா அம்மையார் மூலம் எத்தனை குழந்தைகள் பிறந்தன..? 


ஆறு குழந்தைகள் பிறந்தனர்.. 


காஸிம், அப்துல்லாஹ், ஜைனப், ருகைய்யா, பாத்திமா, உம்முகுல்ஸூம்.. 


49 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் கதீஜா அம்மையாரின் தாம்பத்ய வாழ்க்கை எத்தனை வருடம் சென்றது..? 


      25_ வருடம்... 


50 :கதீஜா அம்மையார் மூலம் பிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண்மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்... 


ஜைனப், ருகைய்யா, உம்முகுல்ஸூம் ரலியல்லாஹு அன்ஹீம் ஆகிய மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே மரணமடைந்தனர்.. 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்துக்கு பின்னர் ஆறு மாதம் கழித்து அன்னை பாத்திமா பீவி ரலியல்லாஹு அன்ஹா மரணமடைந்தார்கள்.....


#ஆக்கம்_

#M_சிராஜுத்தீன்

_அஹ்ஸனி.



#இயக்குனர்_

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.

#திருவிதாங்கோடு.

குமரி மாவட்டம்.. 

தொடர்புகொள்ள.. 7598769505

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக