திங்கள், 23 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.7

 


முஹம்மது_றஸூலுல்லாஹ்

              #வினா_விடை.

                   #பாகம்_7


151 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த மாதம் 

என்ன பெயரில் அறியப்படுகிறது?


                 .*(ஆமுல் ஃபீல்). 

அதாவது யானைப்போர் நடந்த வருடம்.*


152 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த தினம் எது?


     *திங்கட்கிழமை* 


153 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வஃபாத்தான தினம் எது?


      *திங்கட்கிழமை*


154 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் எது?


       *புதன் கிழமை*


155 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு அல்லாஹ் வைத்த பெயர் யாது?


*அஹ்மது என்ற பெயராகும்*


156 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் அல்லாஹ் வைத்த பெயர் யாது?


*முஹம்மது என்ற பெயராகும்*


157 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் வைக்கும் பெயர் யாது?


*மஹ்மூது என்ற பெயராகும்*


158 : முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள் குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?


*ஷாஹித், பஷீர், நதீர், ஹாதீ, ஸிராஜும் முனீர் உள்பட 27.பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.*


159 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைத் தூதராக்கப்பட்டார்கள் என்று உறுதிப்படுத்தியவர் யார்?


*வரக்கத்துப் பின் நவ்ஃபல்*


160 : வரக்கத்துப்பின் நவ்ஃபல் என்பவர் யார்?


*அறியாமைக் காலத்தில் கிறிஸ்தவராக இருந்தவர், இப்ரானி மொழியை எழுத படிக்க தெரிந்தவர், இன்ஜீலை இப்ரானி மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த வயதான கண் பார்வையற்ற முதியவர்.*


161 : வரக்கத்துப் பின் நவ்ஃபலுக்கும் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கும் என்ன உறவு?


*அன்னை கதீஜா அம்மையார் அவர்களுடைய தந்தையின் சகோதரரின் மகன்தான் வரக்கத்துபின் நவ்ஃபல் அவர்கள்.*


162 : ஜீப்ரீல் (அலை) அவர்களை என்ன பெயரிட்டு வரக்கத்து பின் நவ்ஃபல் குறிப்பிட்டார்கள்?


        *நாமூஸ்*


163 : இறைத் தூதர்களை அவர்களின் சமூகத்தார்கள் என்ன செய்வார்கள் என்று வரக்கத்துப்பின் நவ்ஃபல் குறிப்பிட்டார்கள்?


*ஊரை விட்டு விரட்டுவார்கள் என்று சொன்னார்கள்.*


164 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலில் வஹி வந்த பிறகு தொடர்ந்து வஹி வந்ததா?


*இல்லை.சிறிது காலம் நின்றது.*


165 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிறா குகையின் அளவு என்ன? 


*ஹிறா குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது.*


166 : நபித்துவம் அருளப்பட்டதற்கு அடையாளங்களாக ஆறு மாதங்களாக நடைபெற்ற நிகழ்வுகள யாவை?


பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவாகிய போது நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறியது, உண்மையான கனவுகளை கண்டார்கள், அவை அதிகாலையின் விடியலைப் போன்று இருந்தது....நிஜமாக அவை நடந்துவிடும் பிறகுதான் ஜீப்ரீல் (அலை) அவர்களின் மூலமாக வஹி இறங்கியது.


167 : முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியவர்களில் முக்கியமானவர்கள் யார்? யார்?


வரக்கத்து இப்னு நவ்ஃபல், அன்னை கதீஜா அம்மையார், அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலியல்லாஹு அன்ஹு) அம்மார் (ரலியல்லாஹு அன்ஹு) சுமைய்யா (ரலியல்லாஹு அன்ஹு) ஷுஹைப் (ரலியல்லாஹு அன்ஹு) பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) மிக்தாம் (ரலியல்லாஹு அன்ஹு) போன்றோர்கள்.


168 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய உடலின் எந்த பகுதியில் நுபுவ்வத்தின் முத்திரை இருக்கும்?


         *முதுகில்*


169 : ரஹ்மத்துல் ஆலமீன் என்று குர்ஆன் சிறப்பித்து கூறும் நபி யார்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.* 


170 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்திருப்பெயரின் அர்த்தம் என்ன?


*புகழுக்குரியவர் என்பதாகும்*


171 : முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பண்பு எப்படி இருந்தது.?


*மிக உயர்ந்த பண்புடனும் குர்ஆனுக்கு முன் மாதிரியாகவும் இருந்தது.*


172 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பு மனைவியான கதீஜா அம்மையாரின் செல்ல பெயர் என்ன?


*உம்மு ஹிந்த் (முன் கணவர் ஹாலாவின் மூலம் பிறந்த குழந்தை ஹிந்த்)*


173 : உம்மஹாத்துல் முஃமினீன் என்பவர்கள் யார்? 


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள்.*


174 : கதீஜா அம்மையார் அவர்கள் உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?


     *65: ஆண்டுகள்.*


25 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை திருமணம் முடித்த போது அவர்கள் கன்னிப்பெண்ணா? விதவையா?


இரண்டு திருமணங்கள் முடித்த பின்னர் விதவையாக இருந்தார்கள்.


#ஆக்கம்.

#M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி.


#இயக்குனர்_மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்.

#திருவிதாங்கோடு....

#குமரி_மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக