வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கேள்வி பதில் பாகம்.10

 


#முஹம்மது_றஸூலுல்லாஹ்

              #வினா_விடை.

                  #பாகம்_10


226 : நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதுள்ள நேசத்தால் நாற்பது வருடம் வாகனத்தில் ஏறாமல் பயணம் செய்த இமாம் யார்?


*இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்.*


227 : தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சட்டம் என்ன?


          *ஃபர்ள்*


228 : பூமியில் எந்த இடத்திலும் தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்*


229 : மண் கொண்டு சுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட சமுதாயம்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சமுதாயம்.*


230 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மிகவும் அதிகம் கஷ்டங்கள் கொடுத்த உறவினர் யார்?


      *அபூலஹப்*


231 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்கு சத்திய விசுவாசிகளோடு கட்டளை பிறப்பிக்கும் குர்ஆனின் வசனம்?


         *3 : 56*


232 : மக்காவை வென்றடுத்த நேரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கஃபாவின் சாவியை யாரிடத்தில் கொடுத்தார்கள்?


*உஸ்மான் இப்னு தல்ஹா*


233 : இந்த சமுதாயத்தின் " ஃபிர்அவ்ன்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யாரை கூறினார்கள்.?


       *அபூ ஜஹ்ல்*


234 : ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் பால் கொடுத்த பெண்மணி?


*ஸுவைபத்துல் அஸ்லமிய்யா (ரலியல்லாஹு அன்ஹு).*


235 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அநாதையாக வளர்ந்தார்கள் என்று சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்?


  *ஸூரத்துள்ளுஹா.*


236 : மிஃராஜில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகமான மலக்குமார்களை பார்த்த இடம் யாது?


*ஸித்ரத்துல் முன்தஹா*


237 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுவனத்தையும் நரகத்தையும் கண்ட தினம் யாது?


   *மிஃராஜ் தினம்*


238 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் விபச்சார குற்றத்திற்காக கல் எறிந்து கொல்லப்பட்ட நபர் யார்?


      *மாயிஸ்*


239 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக விமர்சன காவியங்கள் எழுதிய யூதக் கவிஞர் யார்?


*கஃப் இப்னு அஷ்ரஃப்*


240 : திருநபியின் கரத்தால் கொலை செய்யப்பட்ட நபர் யார்?


*அப்துல்லாஹ் இப்னு உபய்யிப்னு ஸுலூல்*


241 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளிப்படையாக தஃவா பணி ஆரம்பிக்கும் முன் எத்தனை பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்?


      *முப்பது*


242 : மரணிக்கும் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் போர் கவசம் யார் கைவசம் இருந்தது?


*ஒரு யூதனின் கைவசம் இருந்தது*


243 : ஸைத் இப்னு ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எத்தனை போர்களில் தலைவராக நியமித்தார்கள்?


       *ஒன்பது*


244 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மடியிலிருந்து மரணித்த பெருமானாரின் வாரிசு?


*இப்ராஹிம் (ரலியல்லாஹு அன்ஹு)*


245 : மதீனாவுக்கு ஹிஜ்ரா சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தஃப் கொட்டி வரவேற்றது யார்?


*பனூ நஜ்ஜார் வம்சத்தை சேர்ந்த சிறுமிகள்.*


246 : தாருந்நத்வாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கொலை செய்ய வேண்டுமென்ற கருத்தை சொன்னவர் யார்?


        *அபூ ஜஹ்ல்*


247 : இஸ்ராஃ இரவில் நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திய நபி யார்?


*முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.*


248 சுவர்க்கத்தில் பெண்மணிகளின் தலைவி யார்?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகள் பாத்திமா பீவி அவர்கள்*


249 : மிகவும் பரிசுத்தமான மகத்தான தண்ணீர் எது?


*நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கை விரல்களுக்கிடையில் உருவெடுத்த தண்ணீர்.*


250 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதல் பேரக்குழந்தை யார்?


*ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் உமாமா பின்த் அபுல் ஆஸ்.*


ஆக்கம்.M.#

சிராஜுத்தீன்_அஹ்ஸனி..


#இயக்குனர். 

#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்


#திருவிதாங்கோடு.

#குமரி_மாவட்டம்.

தமிழ்நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக